புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்! (Post No.2904)

Article written by S.NAGARAJAN

 

Date: 18 June 2016

 

Post No. 2904

 

Time uploaded in London :–  5-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

செல்வந்தனாக, புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்!

 

.நாகராஜன்

 

 

 

மூன்று ஆசைகள்

 

வாழ்வாங்கு வாழ் ஹிந்து மதம் காட்டாத வழியே இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று ஆசைகள் நிச்சயமாக வேண்டும்.

  • நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்
  • செல்வந்தனாக வாழ ஆசைப்படுங்கள்
  • நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்ப்டுங்கள்

வெறுமனே ஆசைப்படுங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்வில்லை ந்ம் அருளாளர்கள்.

இந்த மூன்று ஆசைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதையும் மிகத் தெளிவாக வழிமுறைகளுடன் விளக்கியுள்ளனர்.

 

சரக சம்ஹிதா என்று வாழ்வாங்கு வாழ வழி உரைக்கும் நூலில் சரகர் ஆரோக்கியம் சம்பந்தமாகச் சொல்லாத விஷயமே இல்லை.

 

பதினோராம் அத்தியாயத்தில் ஆரம்பித்திலேயே இதைச் சொல்லி விடுகிறார்.

 

இஹ கலு புருஷேணானுபஹதசத்வ, புத்தி, பௌருஷ, பராக்ரமேண ஹிதமிஹ சாமுர்ணிமிச்ச லோகே சமநுபஷ்யதா திஸ்ர ஏஷணா: பர்யேப்ருதிவ்யா பவந்தி | தத்யதா – ப்ராணைஷனா, தநைஷனா,பரலோகைகஷணேதி ||

 

 

சாதாரண திறமையுடன், புத்திசாலித்தனம், பலம், ஆற்றல் உள்ளவனாக, இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நலமாக  இருக்க ஆசைப்படும் ஒரு சாமானியன் மூன்று ஆசைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

1)நீண்டநாள் வாழ, 2) நன்கு சம்பாதிக்க, 3)நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும்.

 

 

 

நீண்ட நாள் வாழ ஆசைப்படு!

 

அடுத்து சரகர் அதிரடியாகச் சொல்வது:

இந்த மூன்று ஆசைகளிலும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் இந்த வாழ்வு முடிந்து போனால் எல்லாம் முடிந்து போகும்.

 

 

இப்படி நீண்ட நாள் வாழ்வதற்கு, ஆரோக்கியமாக வாழும் மனிதர்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாதி வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் (உடனடி) சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளோம். அதைப் பின்பற்றுங்கள். ஆக நீண்ட நாள் வாழ்வது பற்றி இப்போது விளக்கப்பட்டுள்ளது.

 

செல்வந்தனாக ஆசைப்படு!

 

 

அடுத்து வருவது செல்வந்தனாக வாழ ஆசைப்படும் இரண்டாவது ஆசைஒருவன் ஏன் செல்வந்தனாக வாழ ஆசைப்பட வேண்டும்? ஏனெனில் நீண்ட நாள் வாழும் போது பணமில்லாமல் வாழ்வது போன்ற துக்ககரமான விஷயம் வேறொன்றுமில்லைஆகவே பணம் வரும் வெவ்வேறு வழிகளையும் ஒருவன் நாட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன? விவசாயம் செய்வது, பசு போன்றவற்றை வளர்ப்பது, வணிகம் செய்தல், அரசாங்க சேவை உள்ளிட்ட பல உத்தியோகங்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவையே வழிகளாகும். நல்ல பெரியோர்களால் நிந்திக்கப்படாத, ஒதுக்கப்படாத எந்த ஒரு வேலையையும் ஒருவன் மேற்கொள்ளலாம். இப்படி நீண்ட நாள் வாழ்வதால் ஒருவன் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழலாம். இப்படியாக இரண்டாவது அடிப்படை ஆசை விளக்கப்படுகிறது

வையகம் காப்பவரேனும் சிறு                             வாழைப்பழக்கடை வைப்பவரேனும்                     பொய்யகலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் பூமியில் எங்கணும் மேலோர்

 

 

என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

 

இங்கு கஞ்சனாக வாழாதே என்பதும் மறைமுகமாக சரகரால் சொல்லப் படுகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக கெட்ட வேலைகளில் ஈடுபடாதே என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

 

 

மேலுலக சந்தோஷத்துக்கும் சேர்த்து ஆசைப்படு!

 

அடுத்து சரகர் கூறுவதைப் பார்ப்போம்:

 

அடுத்து வருகிறது மேலுலக சந்தோஷத்திற்கு ஆசைப்படுவது.

இதில் சில சின்ன சந்தேகங்கள் எழுகின்றன. இறந்த பின்னர் மறு உலகம் உண்டா என்ன? ஆனால் ஏன் இந்த சந்தேகம் எழுகிறது? ஏனெனில் இந்த உலகில் பலரும் பிரத்யட்சமாகக் காண்பதையே நம்ப முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் தான். ஆகவே பிரத்யட்சமாக காணமுடியாத மறு உலக வாழ்க்கையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இதற்கு மாறாக மறு உலக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் சாஸ்திரங்கள் சொல்வதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதால் அதை நம்புகின்றனர். இதிலும் பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. பெற்றோர், இயற்கை, அழிவற்ற ஆன்மா”, “மதி (Free will) ஆகியவை மறுபிறப்புக்கு காரணம் என பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன.

முதலில் இறப்புக்குப் பின்னர் மறு பிறப்பு உண்டா என்பதை ஆராய்வோம்.

 

 

இதை அடுத்து மறுபிறப்பு உண்டா, உண்டு என்றால் காரணங்கள் என்னென்ன என்று அலசி ஆராய்கிறார் சரகர்.

சரகர் சொல்லாத ஆரோக்கிய விஷயமே இல்லை என்று தோன்றும் சரக சம்ஹிதையைப் படித்தால்!

 

                                 _தொடரும்

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: