Research Article written by London swaminathan
Date: 21 June 2016
Post No. 2911
Time uploaded in London :– 13-53
( Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இமயமலையிலுள்ள அதிசய ஏரி பற்றி கம்பனும் பாடியிருக்கிறான்! இன்று You Tube யூ ட்யூப், Whats up வாட்ஸ் அப், Facebook Fபேஸ் புக், Google கூகுள் மூலம் அரை நொடியில் பார்க்கக்கூடிய இமய மலை அதிசய ஏரி பற்றி தமிழர்களுக்கு 2000 ஆண்டுகளாகத் தெரியும்! ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத, காட்டு மிருகங்கள் நிறைந்த பாதை வழியாக அந்தக் காலத்திலேயே ஆதிசங்கரரும் சாது சந்யாசிகளும் சென்ற புனித மலை இமய மலை. அதிலுள்ள கயிலை மலைக்கு நம்மவர் 2000 ஆண்டுகளாகச் செல்வது தேவாரம், திருவாசகம் மூலம் தெள்ளிதின் விளங்கும்.
இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன். அரைத்த மாவையே அரைக்காமல் கம்பன் சொன்னதைக் காண்பிக்கிறேன்.
கயிலை மலைபற்றியும், சிவபெருமான் பற்றியும் கம்ப ராமாயணத்தில் நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவன் உலக இயற்கை அதிசயங்களில் ஒன்றான மானச சரோவர் குறித்தும் பாடியது வியப்பை ஏற்படுத்தும்.
மானசமடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே
மேல்முறை அமரர் போற்றும் விழுநதி அதனினோடும்
ஆன கோமதிவந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால்
போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்
-பால காண்டம், கம்ப ராமாயணம்
ராம லெட்சுமணர் ஆகிய இரண்டு டீன் ஏஜ் பாய்ஸ்களை “உலக நண்பன்” (விஸ்வாமித்ரன்) என்ற முனிவன் அழைத்து செல்கிறான். பெரிய இரைச்சல் கேட்டவுடன் இருவரும் அது என்ன சப்தம் என்று கேட்கின்றனர். விஸ்வாமித்ரர் (உலக நண்பன்) தனது பூகோள அறிவைக் காட்டுகிறான். ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டையே ஒன்றுபடுத்தினான், அவன் வந்தபிறகுதான் நாம் ‘டிராவல் செய்யவே துவங்கினோம் என்று பல அரைவேக்காடுகள் பிதற்றியதுக்கெல்லாம் கம்பன் பதில் சொல்கிறான்:–
பாடலின் பொருள்:–
மானஸம் என்னும் பொய்கையில் (மானஸ ஸரஸ்) உற்பத்தியாகிப் பாய்வதால் சரயூ நதி என்ற பெயரைப் பெற்று, மேன்மைமிகு வாழ்க்கை படைத்த தேவர்களால் போற்றப்பட்டது. அச்சிறந்த நதியோடு கோமதி நதி வந்து கலப்பதால் எழும் ஒலி இது – என்று உலகநண்பன்/விஸ்வாமித்ரன் செப்பினான். மூவரும் தொடர்ந்து சென்று, குளித்தவர்களின் பாவங்களையெல்லாம் போக்கும் நதியை (கங்கை) அடைந்தனர்.
அந்தக் காலத்தில் எவ்வளவு ஜியாக்ரபி/ புவியியல் அறிவு இருந்திருக்கிறது! வால்மீகி செப்பியதை கம்பனும் மொழிந்ததிலிருந்து அவர்களுடைய புவியியலறிவு புலப்படும்.
ஏரியின் அதிசயங்கள் பற்றிச் சொல்வதற்கு முன் இன்னும் இரண்டு பாடல்களைக் காண்போம்:-
அருவலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திவரும் மேருப்
பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்
இருவரையும் இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்.
இலக்குவன் (லெட்சுமணன்), சத்துருக்கனன் ஆகிய இருவரையும் சுமித்திரை பெற்றெடுத்த செய்தியைச் சொல்லும் பாடல் இது. ஒருவரை பொன் மயமான மேரு மலைக்கும், மற்றொருவரை வெள்ளி நிறத்துடைய கயிலை மலைக்கும் ஒப்ப்டுகிறான் கம்பன்.
இன்னொரு பாடலில் கங்கை, கயிலை மலை பற்றிப் பாடுகிறான்:–
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே
பொருள்:-
நிலவொளி பரவியதால், ஆறுகள் அனைத்தும் வெள்ளை நிறமுள்ள கங்கை ஆறுபோல் தோன்றின; கடல்கள் யாவும் பாற்கடலை ஒத்திருந்தன; மலைகள் எல்லாம் முடிவு என்று ஒன்றில்லாத சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் போலிருந்தன. இவற்றுக்கு மேலே சந்திரனின் மிகுதியைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது?
Lasha- Kailash 1400 kilometres by road
ஏரி பற்றிய அதிசயச் செய்திகள்:-
இந்த அதிசய ஏரியில் நிர்மலமான, மேகமற்ற வானத்திலிருந்து பனி பெய்வதால் இந்தியில் ஒரு பொன்மொழி உண்டு:-
மானஸரோவர் மைன் பரசே (முதல் ‘ப’)
பின் பாதல் ஹிம் பரசே (மூன்றாவது ‘ப’)
மேகமே இல்லாமல் பனி மழை பெய்யும் மானசரோவரை யார் அணுக முடியும்? என்பது இதன் பொருள்.
இரவு நேரத்தில் ஏரியில் நட்சத்திரங்கள் விழுவதூ போலத் தோன்றும். வானியல் அறிஞர்கள் இவைகளை விண்கற்கள் என்று சொல்வர். பக்தர்கள், புண்யாத்மாக்கள் பூமியில் இறங்குவதாகச் சொல்வர்.
1.மானச சரோவர் என்பது பிரம்மாவின் மனதில் தோன்றிய ஏரி என்னும் பொருளுடைத்து.
2.இந்தியாவின் இதய இரத்தக் குழாய் போன்ற கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய மூன்று ஜீவநதிகளும் இந்த ஏரிக்கு அருகில் அல்லது ஏரியில்தான் உற்பத்தியாகின்றன. அதாவது அந்த ஜீவநதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் உபநதிகள் இங்கேதான் தோன்றுகின்றன.
- இது 54 மைல் சுற்றளவும் 320 சதுர மைல் பரப்புமுடையது. 300 அடிவரை ஆழம் கொண்டது.
4.நிர்மலமான, ஸ்படிகம் போன்ற அமைதியான நீர்ப்பரப்பு. கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்ப்பதுபோல தண்ணீருக்கடியில் உள்ள மீன்களைப் பார்க்கலாம்.
- இந்த ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.
- உலகில் அதிகமான உயரத்திலுள்ள சுத்த நீர் ஏரிகளில் இது முதலிடத்தில் நிற்கிறது.
7.ஏரியைச் சுற்றி எட்டு பௌத்த துறவிகளின் மடாலயங்கள் இருக்கின்றன.
- இது திபெத் பிராந்தியத்தில் இருந்தாலும், அது இப்பொழுது சீனாவின் ஆக்ரமிப்பில் இருக்கிறது
9.இந்த ஏரி பனிக்காலத்தில் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கோடைகாலத்தில் அந்தப் பனி உடைவதன் பேரொலிகளைக் கேட்கலாம்.
- ஏரியின் நீரில் கயிலை மலையின் பிம்பங்களைப் பார்த்து ஒரே நேரத்தில் இரண்டு கயிலை மலைகளை தரிசிக்கமுடியும்
11.ஏரிக்கரையில் அழகிய கூழாங்கற்களையும், வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகளையும் பார்க்கலாம்.
- உத்தரப்பிரதேசத்திலுள்ள அல்மோராவிலிருந்து 240 மைல் தூரத்திலும் திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து 800 மைல் தொலைவிலும் கயிலை மலையும் மானசரோவரும் உள்ளன. இமயமலையின் அற்புதமான இயற்கைக் காட்சி இது. கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிக்கு மேல் இது இருக்கிறது. ஒரு புறம் கைலாஷ் மறுபுறம் மாந்தாதா சிகரங்கள் காட்சி தரும்.
13.திபெத்திய பௌத்தர்களுக்கும் இந்த ஏரி முக்கியமானது. ட்சோ மவாங் என்று அழைப்பர். மன அமைதியையும், ஆன்மீக உணர்வையும் தூண்டும் இடம் இது.ஒரு மிகப்பெரிய நீலக்கல் ரத்தினம் அல்லது மரகதப் பச்சைக் கல் போலத் தோன்றும்.
14.காங்ரி கஞ்சாக் என்ற பெயரில் திபெத்திய மொழியில் இரண்டு கைலாஷ் புராணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- மானச ஏரியின் நீர் சுவையானது. ஏரிக் கரையில் குகைகளும் உண்டு. சாது, சந்யாசிகள் தவம் செய்ய ஏற்ற இடம். ஏரிக்கரையில் வெப்ப நீர் ஊற்றுகளும் காணப்படுகின்றன.
15.ஒரு புத்த மடாலயத்திலிருந்து கயிலை மலையின் அற்புதமான தோற்றமும், மற்றொரு மடாலயத்திலிருந்து ராக்ஷச தல் ஏரியின் அழகிய தோற்றமும் கண்கொள்ளாக் காட்சி ஆகும்
16.காலை முதல் இரவு வரை வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு அழகில் தோன்றும். நிறமும் சூரிய வெளிச்சத்தில் வேறுபடும்.
17.மூன்று வகையான அன்னப் பறவைகள் இங்கே வசிக்கின்றன. அவைகளில் ஒன்று ஒரிஸ்ஸாவில் சில்கா ஏரி வரயும், மற்றொரு திசையில் மால்வா வரையும் பறந்து செல்லும். இன்னொரு வகை சதபத பிராமணம் என்னும் கி.மு எட்டாம் நூற்றாண்டு நூலில் காணப்படுகிறது. ஆகவே குறைந்தது 3000 ஆண்டுகளாக பறவைகள் பற்றிய அறிவு இருந்திருக்கிறது. காளிதாசனும் மேக தூதத்தில் இதுபற்றிக் கூறியுள்ளான்.
18.இங்கே நடக்கும் அற்புதங்களில் ஒன்று ஜனவரி முதல் நடக்கும் பனி வெடிப்புகளாகும். சில நேரங்களில் பெரிய பனிப்பாறைகள் கரையிலுருந்து 60 அடிக்கு அப்பால் விழுந்து கிடக்கும்.
திடீரென்று பனிக்கட்டிகளிடையே நீர் ஊற்றுகள் தோன்றும். ஏரிக் கரைக்கு அப்பால் சிலமைல் தொலைவில் மூன்று வெப்ப நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.
19.தூமா என்ற அற்புத மூலிகைக் கிழங்கு இங்கே கிடைக்கிறது. மலை எலிகள் இவற்றைச் சேமித்துவைக்கும். இது காமசுகம் தரும் செக்ஸ் மூலிகை.
20.ராக்ஷச தல்
ராக்ஷச தல் அல்லது ராவண ஹ்ருதா (லாங்காகி ட்ஸோ) என்னும் மற்றொரு ஏரி அருகில் இருக்கிறது. மானசரோவரிலிருந்து 2 முதல் 5 மைல் தொலைவில் ராக்ஷச ஏரி உள்ளது. லாங்காகி ட்சோ என்றால் ஐந்து மலைகளை உள்ளடக்கிய ஏரி என்று பொருளாம். (லா என்றால் மலை, ங்கா என்றால் ஐந்து, ட்ஸோ என்றால் ஏரி) இங்குதான் இலங்கை மன்னன் ராவணன், சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். பூகம்பத்தில் ஐந்து மலை அடுக்குகள் உள்ளே சென்று இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இதன் சுற்றளவு 77 மைல். இதில் இரண்டு தீவுகளும் உண்டு. மானச ஏரியின் அதிகத் தண்ணீர் வழிந்தோடி இங்கே வந்துவிடும்.
கயிலை மலை பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம். 1949-ல் வெளியான ஒரு ஆங்கில நூலிலிருந்து தொகுத்த விஷயங்களிவை.
-சுபம்-
Raghavan Narayanasamy
/ June 21, 2016Dear sir, very nice article. My guru srilasri venkatrama siddhar has
written in one of his books birds seen in thirusuli(ramanas place)temple
tanks are from manasorover. After staying there for few day they will fly
back to manasorover. People who are spotting them are punyavans. This
miracle happening even now. I send the details later.