அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 8 (Post No.2990)

 

buddha in SL

Article Written S NAGARAJAN

Date: 21 July 2016

Post No. 2990

Time uploaded in London :– 5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 8
ச.நாகராஜன்

 
ஸு யுன்னுக்கு இப்போது வயது 64.
யிங் ஜியாங் ஆலயத்தில் சேவல் ஒன்றை ஒருவர் காணிக்கையாக அளித்திருந்தார். துறவி ஒருவர் ஸு யுன்னிடம் வந்து அந்த சேவல் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
வளர்ப்புப் பறவை ஒன்றை அது தாக்கி காயப்படுத்துகிறதாம்.
ஸு யுன் நேராக் ஆலயத்திற்குச் சென்றார். அந்த சேவலிடம் அகதிகளுக்கான விதியைக் கற்பித்தார். புத்தரின் நாமத்தை உச்சரிக்குமாறு அதற்கு போதித்தார்.
என்ன ஆச்சரியம், சீக்கிரமே சேவல் தன் பழக்கத்தை மாற்றிக் கொண்டது. அது எந்தப் பறவைக்கும் தீங்கு இழைக்கவில்லை.
ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு கிளையில் அமர்ந்தது.
எந்த பூச்சிகளையும் கூட அது உண்ணவில்லை. அதற்குத் தந்த தானிய வகைகளை மட்டுமே அது உட்கொண்டது!

 
சில நாட்கள் கழிந்தன. ஆலயத்தில் மணி ஒலிப்பதைக் கேட்டவுடன் அது வரிசையாகச் செல்லும் துறவிகளின் வரிசையில் தானும் சேர்ந்து கொண்டது!
பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் நிகழும் ஒவ்வொரு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கும் அது சென்றது; அதில் கலந்து கொண்டது!
பிரார்த்தனை முடிந்தவுடன் அமைதியாக மீண்டும் தன் மரக்கிளைக்குத் திரும்பி அதில் அமர்ந்தது!

 

buddha gold
அதற்கு மீண்டும் புத்தரின் நாமத்தை உச்சரிக்கக் கற்பிக்கப்பட்டது. இப்போது அது புத்தரின் நாமத்தைச் சொல்லக் கற்றுக் கொண்டது.
‘ஃபோ! ஃபோ! ஃபோ!’ அது அழகாகக் கூவியது. சீன மொழியில் ஃபோ என்பது புத்தரின் ஒரு நாமம்!
இரண்டு வருடங்கள் கழிந்து ஒரு நாள் பிரார்த்தனை மண்டபத்திற்கு வழக்கம் போல பிரார்த்தனை சமயத்தில் அது வந்தது. ஹாலில் நின்றது.
அழகாக நிமிர்ந்து தன் இறகுகளை அகல விரித்தது.
புத்தரின் நாமத்தைக்க் கூறும் விதமாக மூன்று முறை இறகுகளை அழகாக அசைத்தது!

 
அப்படியே நின்றவாறே இறந்தது!
அதனுடைய தோற்றம் பல நாள் மாறவே இல்லை. அதை ஒரு பேழையில் வைத்தனர். பின்னர் அது புதைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் போது ஸு யுன் கீழ்க்கண்ட பாடலை இயற்றிப் பாடினார்:
“சண்டையிடும் குணம் கொண்ட இந்தச் சேவல்
வளர்ப்புப் பறவையைத் தாக்கி இரத்த காயத்தை ஏற்படுத்தியது
அதன் மனம் நின்ற நிலையில் வந்த போது
அதற்கு புனித நாமங்கள் போதித்த போது
அது தானியங்களை உண்டு தனியே நின்றது.
பூச்சிகளைக் கொல்லவில்லை
தங்கமயமான சிலைகளை உற்று நோக்கியவாறே
எவ்வளவு அருமையாக அது புத்தரின் நாமத்தைக் கூவி உச்சரித்தது!
மூன்று முறை அழகுற அசைந்த அது
திடீரென்று இறந்து விட்டதே!
இந்த உயிர் புத்தரை விட எந்த நிலையில் மாறுபட்டது?”

அனைவரும் உருகினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
\
*********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: