Article Written S NAGARAJAN
Date: 30 July 2016
Post No. 3020
Time uploaded in London :– 9-18 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!
எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.
அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில் முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.
மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)
தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!
வாழ்க ஸ்ரீலங்கா!
அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!
வாழ்க அயர்லாந்து!
அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!
அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!
ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!
வாழ்க நேபாளம்!
ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா … ??
ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.
ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.
ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?
(More secular than the so called secular in real sense, is it not?)
மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து மதம் தான், இல்லையா!
சிந்திக்க வேண்டும்!
**********
You must be logged in to post a comment.