
OLYMPUS DIGITAL CAMERA
Written by london swaminathan
Date: 8th August 2016
Post No. 3044
Time uploaded in London :– 8-32 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இந்து மதத்திலும் தமிழ்,ச ம்ஸ்கிருத இலக்கியத்திலும் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
எங்கே உங்கள் சமய, இலக்கியஅறிவைச் சோதியுங்கள் பார்க்கலாம்!
10.”பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது என்ன பத்து?
9.நவரத்தின மோதிரம் அணிந்தால் நல்லது என சாத்திரங்கள் கூறும். அந்த 9 ரத்தினங்கள் எவை?
- அஷ்டலெட்சுமி கோவில் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அந்த எட்டு (அஷ்ட) லெட்சுமிக்கள் யார் யார்?
7.ஏழு நகரங்களில் இறந்துபோனால் மோட்சம் உறுதி என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நெடுங்காலமாக இருந்துவருகிறது? அந்த 7 மோட்ச புரீக்கள் எவை?
- அறுசுவை உணவைச் சாப்பிட்டிருப்பீர்கள். அவை என்ன என்ன சுவை?
5.பஞ்சாப் என்பது ஐந்து நதிகள் பாயும் பிரதேசம் எனப்பெயர் கொண்ட மாநிலம். அவை எவை?
4.சதுர்வித உபாயங்களால் எதையும் சாதிக்கலாம் என்பார்கள். அந்த 4 வழிமுறைகள் என்ன?
3.திரிகடுகம் என்ற தமிழ் நூல் மூன்று மூலிகைச் சரக்குகளின் பெயரில் எழுந்தது. அந்த மூன்று மூலிகைகள் என்ன என்ன?
2.மீமாம்ச சாத்திரத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அவை யாவை?
1.ஏகாக்ஷரீ மந்த்ரம் (ஓரெழுத்து மந்திரம்) என்பது என்ன?
விடைகள்:–
- பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்
9.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்
8.அஷ்ட லெட்சுமி: தன (செல்வம்), தான்ய, தைர்ய (துணிவு), வீர, விஜய(வெற்றி), வித்யா (கல்வி) ,சந்தான (பிள்ளைப்பேறு), கஜ (யானை)லக்ஷ்மி
7.முக்திதரும் ஏழு தலங்கள்:- அயோத்தி, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி(வாரணாசி), காஞ்சி, அவந்திகா(உஜ்ஜைனி),துவாரகா
6.அறு சுவை:- இனிப்பு, கார்ப்பு (காரம்), துவர்ப்பு, கசப்பு, கைப்பு(உப்பு), புளிப்பு
5.ஜீலம், சீனாப், ராவி, பியாஸ்(வியாச), சட்லெஜ் நதிகள்
- சாம (சமாதானம்), தான (பொருள் கொடுத்தல்), பேத (பிரித்தாளும் சூழ்ச்சி), தண்ட (தண்டித்தல் அல்லது தாக்கி அழித்தல்)
3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி
3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி
2.பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் (அத்வைதம்)
1.ஓரெழுத்துமந்திரம்:– ஓம்
Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
- Are you familiar with Number Four ?( (5 February 2014)
- நீங்கள் நாலும் தெரிந்தவரா? (5 February 2014)
- முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ posted on 30 April 2016
28. நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா? ,30 April 2015
29.Hindu Flower Quiz (15 August 2014)
- பூ………….. இவ்வளவுதானா?, posted on 15 August 2014
31.இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு? 16 July 2014
32.Do you know Indra?,16 July 2014
- புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி-பதில் (க்விஸ்), posted on 6 May 2014
34.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? 27-3-14
35.Interesting Quiz on Logos (30 July 2012)
36. Answers for Interesting Quiz on Logos (31 July 2012)
You must be logged in to post a comment.