Compiled by London swaminathan
Date: 20th August 2016
Time uploaded in London: 14-23
Post No.3077
Pictures are taken from various sources; thanks for the pictures.
மஹா பாரதத்தில் 18 பர்வங்கள் உண்டு. அதில் மூன்றாவதாக அமைந்த வனபர்வத்தின் மற்றொரு பெயர் ஆரண்ய பர்வம். இதை வால்மீகி ராமாயணத்திலுள்ள ஆரண்ய காண்டத்துடன் குழம்பிக்கொள்ளக்கூடாது.
வனபர்வம் எனப்படும் ஆரண்ய பர்வம் பஞ்சபாண்டவர்களி ன் 12 ஆண் டு கானுறை வாழ்வைச் சித்தரிக்கும் பர்வம். அதற்குள் 21 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் மனைவி பற்றிய ஒரு பாடல் (ஸ்லோகம்) மனைவியை “சர்வ துக்க நிவாரணி” என்கிறது.
நாம் சர்வ ரோக நிவாரணி – என்று மருந்துகளுக்குக் கொடுக்கும் விளம்பர ங்களைப் படித்திருக்கிறோம். சர்வ துக்க நிவாரணி என்பதை பொதுவாக கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் மஹா பாரதமோ மனைவியை கைகண்ட மருந்து என்றும், எல்லா துக்கங்களையும் போக்குபவள் என்றும் சித்தரிக்கிறது.
இதோ அந்த ஸ்லோகம்:–
ந ச பார்யா சமம் கிஞ்சித் வித்யதே பிஷஜாம் மதம்
ஔஷதம் சர்வ துக்கேஷு சத்யமேதத் ப்ரவீமி தே
–ஆரண்ய பர்வம்
பொருள்:-
“மனைவிக்குச் சமமான ஒன்றுமே இல்லை; எல்லா துக்கங்களுக்கும் மருந்தாக இருப்பவள் மனைவி என்பவளே. உண்மையைச் சொல்லுகிறேன்.”
இன்னொரு பாடல் அம்மாதான் நன்கு சாப்பாடு போடுபவள், மனைவிதான் நன்கு சந்தோஷப்படுத்துபவள் என்று பாராட்டுகிறது.
உடலைப் போஷிக்கும் விஷயங்கள்
மாத்ரா சமோ நாஸ்தி சரீர போஷணே
பார்யா சமோ நாஸ்தி சரீர தோஷணே
வித்யா சமோ நாஸ்தி சரீர பூஷணே
சிந்தா சமோ நாஸ்தி சரீர சோஷணே
உடலை வளர்க்க உதவுவதில் அம்மாவுக்குச் சமமானவள் யாரும் இல்லை;
நம்மை மகிழ்விப்பதில் (சந்தோஷப்படுத்துவதில்) மனைவிக்குச் சமமானவள் எவரும் இல்லை;
ஒருவரை அலங்கரிக்கச் செய்யும் விஷயத்தில் கல்விக்குச் சமமான எதுவும் இல்லை
உடலை வாடச் செய்யும் விஷயத்தில் துக்கத்துக்குச் சமமான எதுவும் இல்லை
–Subham–
You must be logged in to post a comment.