சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)

IMG_5583

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  21-18

 

Post No.3083

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் என்ற பெரிய வேள்வியைச் செய்ததை புறநானூறு மூலம் நாம் அறிகிறோம் அவனைக் குறித்து நான்கு பாடல்கள் 16, 125, 367, 377) உள்ளன. அவற்றை முறையே பாண்டரங் கண்ணனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஔவையார், உலோச்சனார் ஆகியோர் பாடினர்.

 

இராஜசூய வேள்விக்கு சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒருங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஔவையாருக்கு பெரிய மகிழ்ச்சி. நீங்கள் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களைவிட, மழைத் துளிகளைவிட அதிக நாட்கள் வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

IMG_5584

ராஜசூய யக்ஞம் என்றால் என்ன?

இது குறித்து லாத்யாயன ஸ்ரௌதசூத்ரம் சொல்கிறது. அரசர்கள் ஜாதியான க்ஷத்ரியர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ராஜ சூய என்றால் அரசனை ‘உற்பத்தி செய்தல்’, ‘கடைந்தெடுத்தல்’ என்று பொருள். அதாவது ஒரு மாமன்னனை உருவாக்குதல்.

 

இந்த வேள்வியைச் செய்த, பெருநற்கிள்ளி தன்னுடைய பெயருக்கு முன்பாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பட்டம் வைத்துக் கொண்டதிலிருந்தே இதன் பெருமையும் மகிமையும் விளங்கும்.

 

இதைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை!

பங்குனி மாத சுக்லபட்ச முதல்நாளில்  தீட்சை எடுத்துக்கொள்வர்.

முதலில் சோமரசம் தொடர்பான சடங்குகள் ஐந்து நாட்களுக்கு நடக்கும். பின்னர் ஓராண்டுக்கு சிறிய யாகங்கள் நடக்கும்.

 

அதன் பிறகு 12 நாட்களுக்கு நீடிக்கும் சடங்குகள் நடைபெறும்.

 

அரசனுக்கு அபிஷேகம் செய்து முடிசூட்டுதலே முக்கியமான — முத்தாய்ப்பான — நிகழ்ச்சி. பல புண்ய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை மந்திரம் சொல்லி அரசனின் தலையில் ஊற்றுவர் பிராமணர்கள். அபோழுது பிராமணர்களுக்கு நிறைய தானங்கள் வழங்கப்படும்

 

இதை ஔவையார் பாராட்டுகிறார்:-

வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை — என்பார்.

 

ஒருவர் செய்த நல்வினைதான் அவர் இறந்த பின்னர் அவருக்கு துணையாக வரும் – என்பதே இதன் பொருள்.

 

ஆகையால் பிராமணர்களுக்கு கைநிறைய தங்கக் காசுகள கொடு என்கிறரர்.

 

ஏற்ற பார்ப்பர்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

 

வாழ வேண்டும் என்று அறிவுரை பகர்கிறார். (Puram.367)

 

இதற்குப் பிறகு தேரோட்டும் பந்தயம் (ரேஸ்) நடக்கும்

அதைத் தொடர்ந்து ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் நடக்கும்.

இதில் சுமார் 100 பசுக்கள் இருக்கும்

 

(தமிழ் நாகரீகம், பண்பாடு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆநிரை மீட்டல், கவர்தல் ஆகியன மஹா பாரதத்திலும் உண்டு. சங்க இலக்கியத்திலும் உண்டு. பிராந்தியத்துக்கு பிராந்தியம் உலகம் முழுதும் சில விநோத வழக்குகள், இசை நடனம் முதலியன இருக்கும் அது போல இந்தியாவிலும் 25 மாநிலங்களில் 25 விதமான பழக்க வழக்கங்கள் , நடை உடை பாவனைகள் இருக்கும்.)

IMG_5585

மன்னன் , தேரிலிருந்து இறங்கிய பின்னர் முடி சூட்டு வைபவம் நடக்கும்.

 

இறுதியாக சொக்கட்டான் ஆட்டம் நடைபெறும். இதில் மன்னர்தான் வெற்றி  பெ றுவார்.  சொக்கட்டான் ஆட்டம் புற நானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளதே.

 

இதற்குப் பிறகு சுனஸ்சேபன் கதை உபந்யாசம் நடக்கும்.

அடுத்த பத்து நாட்களுக்கு சிறிய யாகங்கள் நடத்தப்படும். இதற்குப் பின் மன்னன், ஓராண்டு காலத்துக்கு சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

இவ்வளவையும் சோழ மன்னன் பெருநற்கிள்ளி செய்தது ம் அதை மற்ற புலவர்களும், புரவலர்களும் போற்றியது ம் எதைக் காட்டுகிறது?

 

தமிழ் மன்னர்களுக்கு யாக யக்ஞங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பார்ப்பனர் பற்றியும், வேள்வி பற்றியும், நான்மறைகள் குறித்தும், யூப நெடுந்தூண்கள் (வேள்வித் தூண்) பற்றியும் சங்க இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

 

32,000 பசு, 16000 பசு 8000 பசு தானம்!

 

ராஜ சூய வேள்வியை செய்வதற்கு 4 புரோகிதர்கள் தேவை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் 32,000 பசுக்கள் தட்சிணை!

இரண்டாம் நிலையிலுள்ள 4 ஐயர்களுக்கு தலா 16,000 பசுக்கள் தட்சிணை.

 

மூன்றாம் நிலையிலுள்ளோருக்கு தலா 8000, அதற்கடுத்த நிலையிலுள்ளோருக்கு தலா 4000 பசுக்கள் தட்சிணை என்று சாத்திரங்கள் செப்புகின்றன.

ஆச்வலாயன, பாரத்வாஜ, ஆபஸ்தம்ப, காத்யாயன ச்ரௌத சூத்ரங்களில் இதன் விவரங்களைக் காணலாம்.

 

சிந்து சமவெளி நாகரீகம்

 

சிந்து சமவெளி நாகரீகத்திலும் எடைக்கற்கள் இதே வீதத்தி ல்தான் இருக்கின்றன.4, 8, 16, 32, 64 ….

 

வேத கால தட்சிணையும் இதே வீதாசாரத்தில்தான் இருக்கும். ஆக வேத கால நாகரீகமும் சிந்து சம்வெளி நாகரீகமும் ஒன்றே.

 

இப்போதுள்ள ரூபாய்க்கு முன் இந்தியாவில் தம்பிடி, அணா, ரூபாய் என்ற முரை இருந்தது மூன்று தம்பிடி= காலணா, நான்கு காலணா = ஒரு அணா, 16 அணா = ஒரு ரூபாய் (அதாவது 64 காலணா அல்லது 192 தம்பிடி). இதுவும் சிந்து சம்வெளி விகிதாசாரமே!

 

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: