கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)

girls school

Written by London Swaminathan

 

Date: 28 August 2016

 

Time uploaded in London: 7-09 AM

 

Post No.3098

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

children 1

லண்டனுக்கு வருகை தந்துள்ள மாயூரம் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரை 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன்; இந்துக்களின் விடுமுறை பற்றி அவர் சொன்னதை நேற்று வெளியிட்டேன்; இன்று கல்வி என்பது பற்றி இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர் கூறியதைப் பார்ப்போம்.

 

நீங்கள் நடத்தும் வேத பாடசாலையில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கிறீர்கள், எத்தனை ஆண்டுகள் என்று கேட்டேன்?

வேதத்தில் தேவையான சில பகுதிகளும் ஆகமங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் பின்னர் ஒரு சான்றிதழ் வழங்குகிறோம். அது தமிழ்நாடு அரசு அங்கீக ரம் பெற்ற தகுதி. கோவில்களில் அர்ச்சகராகப் பணி செய்ய அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றார்.

 

நீங்கள் ஆங்கிலம் முதலிய விஷயங்களை ப் பள்ளிக் கல்வி போல கூடவே சேர்த்துக் கற்றுத் தரலாமே; அவர்களின் பிற்காலத்துக்கு உதவுமே என்றேன்.

 

ஆஸ்திரேலியாவில் வசித்த சங்கரன் என்ற நல்ல உள்ளம் படைத்த ஒருவர், வேத பாடசாலைகளுக்குச் சென்று, பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து வருகிறார். அவர் கிராமங்களுக்கும் சென்று எல்லா வகுப்பினருக்கும் இப்படி ஆங்கிலம் கற்பிக்கிறார். தனது சொந்தக் காசை செலவழித்து அரிய பணியைச் செய்கிறார். அவர் எங்களுடைய வேத பாட சாலைக்கும் வந்து அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தருகிறார். எனக்கும் இதன் தேவை புரிகிறது. இன்று உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள்  தேவைப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் பொது அறிவும் தேவைப்படுகிறது ; அதையும் நாங்கள் சொல்லித் தருகிறோம் என்றார்.

children 2

எனக்கு அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. நல்ல கல்வித் தகுதி இல்லாவிடில் அவர்கள் வருங்கால உலகில் வாழ்வது கடினமே; எப்படி முழு அறிவு பெற முடியும்? என்றேன்.

 

“வேதக் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்குள், கற்றுத தந்த விஷயங்களை விவாதிக்கும் வகுப்பும் உண்டு” என்றார்.

(அதாவது லண்டனில் எனது பிள்ளைகள் பள்ளி வகுப்பில் நடந்தது போல அந்தக் காலத்தில் இருந்தே, இந்துக்கள் கல்வி கற்கும் இடங்களில் ரிவிஷன், விவாதம், கலந்துரையாடல் இருப்பது எனக்கு புதிய, மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது).

அவர் மேலும் சொன்னார்:

கல்வி என்பது ஆசிரியர் மட்டும் கற்றுத் தருவது அல்ல;

 

 

आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया ।
सब्रह्मचारिभ्यः पादं पादं कालक्रमेण च ॥

 

 

ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா

சப்ரம்மசாரிப்ய: பாதம் பாதம் காலக்ரமேன ச

என்று அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பொருள்:

 

ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது கால்வாசி (25 சதவிகிதம்) ; மாணவன் சுயபுத்தியால் கற்றுக்கொள்வது இன்னொரு கால் வாசி; சக மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது கால் வாசி; காலம் செல்லச் செல்ல கற்றுக் கொள்வது இன்னொரு கால் பகுதி.

 

என்று  சுவாமிநாத சிவாச்சாரியார்  சொன்னார்.

என்ன அற்புதமான ஸ்லோகம் என்று சொல்லி வியந்தேன்.

boys play 1

என் கருத்து:

 

நேற்று, மனனம் செய்தல் (Memory Techniques), அதைத் திருப்பிச் சொல்லி நினைவுகூறுதல் (Revision), மாதத்துக்கு குறைந்த எட்டு நாள் விடுமுறை விடுதல் (8 Days Holiday a month) ஆகியன பற்றி எழுதினேன். இன்று இந்த ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள். என்ன அற்புதமான ஒரு கல்விக் கொள்கை (Concept of Teaching)  நம் முன் னோர்களிடம் இருந்தது என்பதை அறிய முடியும்.

 

ஒரே ஆசிரியர் ஒரே மாதிரி எல்லோருக்கும் கற்று த் தருகிறார். அதில் ஒருவர்தான் தலை சிறந்த கல்விமானாகவோ, விஞ்ஞானியாகவோ, நாட்டின் தலைவராகவோ வருகிறார். ஏன்? ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது 25 சதவிகிதமே; மாணவன் சுய புத்தியைப் பயன்படுத்தி அதைத் துருவித் துருவி ஆரா ய்ந்து மேலும் கற்க வேண்டும்; தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் மனக் கோட்டை கட்டாமல் மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடி, மாற்றுக் கருத்துகளைக் கிரஹிக்க வேண்டும். இறுதியில் மூளை வளர்ச்சியினாலும், அனுபவ அறிவாலும் கடைசி 25 சதம் அறிவு வந்து 100 சதவிகித அறிவு பெற்றவனாக திகழ முடியும்.

 

உலகில் பெண் கல்விக்கே முதலில் சிலபஸ் (Syllabus) போட்டுக் கொடுத்தது இந்துக்கள்தான் என்று 64 கலைகள் பற்றிய கட்டுரையில் காட்டினேன். அது வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திரத்தில் உள்ள பட்டியல். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் 64 கலைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நாடு இது.!!

children 3

வளர்க கல்வி: மிளிர்க பாரத மணித் திரு நாடு!!

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: