தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்! (Post No.3174)

tamil-1

Written by London swaminathan

Date: 21 September 2016

Time uploaded in London: 8-02 AM

Post No.3174

Pictures are taken from various sources; thanks.

 

தமிழ் மொழி பழைய மொழி, சிவன் உருவாக்கிய மொழி, அகத்தியரால் இலக்கணம் படைக்கப்பட்ட மொழி, சிவ பெருமானும் முருகனும் பேசிய மொழி —  என்ற கருத்துக்களை 2000 ஆண்டுகளாக மக்கள் நம்புகின்றனர்.

 

 

இந்த உண்மைகள் பற்றி அவ்வப்போது மனதில் சில சந்தேகங்கள் எழும். ஆகவே தடைகலை எழுப்பி விடை காண்போம்:-

 

ரொம்ப நாளாக எனக்கு ஒரு டவுட்டு (Doubt)

 

ஆசிரியரிடம் மாணவன் கேள்வி

siva-with-jewels

அகத்தியனோ பார்ப்பனன்; இமய மலையில் வாழ்ந்த ரிஷி; அவரை ஏன் சிவன் அனுப்பினார்?

 

அகத்தியன் வெறும் ரிஷி மட்டு மல்ல. பூகோளமும் ( Geography நிலவியல்), சரித்திரமும் (History வரலாறு), அரசியல் தந்திரமும் (Politics), பொறியியலும் (Enginering எஞ்சினீயரிங்), தெரிந்தவர். ஆகையால் தமிழ் மொழிப் பணி மட்டும் அன்றி காவிரியை திருப்பிவிட்ம் பொறியயல் பணி, தென் கிழக்கு ஆசியா (South East Asia)  முழுதும் இந்திய கலாசாரத்தைப் பரப்பும் பணி, வாதாபி, இல்வலன் போன்ற மனிதர்களை உண்ணும் அரக்கர்களை (Cannibals) தந்திரத்தால் வெல்லும் பணி ஆகிய வற்றை மனதிற்கொண்டு சிவன், அவரைத் தெரிவு செய்தார். பகீரதன் பெரிய (Engineers) எஞ்சினீயர்களுடன் கலந்தாலோ சித்து எப்படி கங்கையைத் திருப்பிவிட்டானோ அது போல காவிரியையும் திருப்பிவிடும் செயல்திட்டத்துடன் அனுப்பி வைத்தார்.

 

அது சரி, சிவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

 

ஆஹா! அப்பொழுது அகத்தியருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்ததை ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?

 

ஆமாம் , இதில் என்ன சந்தேகம். பாரதி கூட

 

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

 

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ.

 

அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படை த்தார்  என்று சொல்லுகிறார்.

tamil-2

சரி, அகத்தியரோ வேத மந்திரங்ங்களைக் கண்டுபிடித்த அகத்திய கோத்திரத்தில் வந்த ஒரு ரிஷி. அவரது பெருமை ரிக்வேதம் மற்றும் இதிஹாச, புராணங்களில் உள்ளது. அவருக்குத் தமிழ் தெரியுமா?

 

அவருக்குத் தமிழ் தெரியாது ஆனால் முதலில் சிவ பெருமானும், பின்னர் முருகனும் சொல்லிக் கொடுத்தனர்.

 

அட, இது என்ன புதுக்கதை? முருகனுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

 

சிவ பெருமான் மகனாகப் பிறந்தாலும் அவர் பிறவியிலேயே பெரிய ஜீனியஸ் Genius – எல்லாம் அறிந்தவர் — ஓம் என்னும் ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது– அந்தப் பிரணவ மந்திரத்தின் பொருளை யே அவர் சிவனுக்குச் சொல்லிக் கொடுத்ததால் அவனுக்கு சாமி நாதன் என்று பெயர். அவருக்குத் தமிழ்மீது அலாதிப் பிரியம்; அதனால் தமிழில் திட்டினால்கூட , அட இனிமையாக இருக்கிறதே என்று அவருக்கு வரம் கொடுப்பான் என்று அருணகிரி நாதரே சொல்லிவிட்டார் – தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்கிறார். தமிழ் மொழி அவ்வளவு இனிமையான மொழி. இதை வைத்துதான்

பாரதியும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – என்றார்.

 

சரி, தமிழ் மொழி பழைய மொழி என்பதை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்; ஆரியத்துக்கு (சம்ஸ்கிருதத்துக்கு) நிகரானது என்றும் ஒப்புக் கொண்டீர்கள்; அகத்தியருக்கு முன்னர் அதற்கு இலக்கணம் இல்லையா?

 

அகத்தியர்தான் முதலில் இலக்கணம் படைத்தார் என்பதே ஆன்றோர் வாக்கு. இதற்குப் பின்னர் வந்ததே ஐந்திரம், தொல்காப்பியம் என்னும் இலக்கணங்கள்

 

shiva-ganesh

நான் இப்பொழுது ஒரு பாயிண்டில் (One Point) உங்களைத் திணறடிக்கப் போகிறேன்/ ஆரியம் என்று சம்ஸ்கிருதத்துக்கு பாரதியாரே பெயர் சூட்டி விட்டார். மேலும் பாணினி இலக்கணம் தான் சம்ஸ்கிருததின் புகழ்மிகு இலக்கணம் என்று சொல்லுகிறீர்கள். அகத்தியரின் காலமோ கி.மு800 முதல் கி.மு1000 என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன; பாணினியின் காலத்தை கி.மு 700 என்றே சொல்லுவர். அப்படியானால் ஆரியர்கள் பேசியது சம்ஸ்கிருதம் என்பதையும் பாணினி இலக்கண த்துக்கு முன்னரே சம்ஸ்கிருத இலக்கணம் இருப்பதையும் ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!!

அருமையான கேள்வி; முதலில் ஆரிய என்ற சொல்லுகு சரியான பொருள் தெரிந்துகொள்ளுங்கள் ‘திராவிட’ என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். இதே போல ‘ஆரிய’ என்ற சொல்லும் சம்ஸ்கிருத சொல். பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்லை நூறுக்கக் ணகான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். புற நானூற்றுப் புலவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆரிய என்றால் பண்பாடுடையோர், வடக்கில் வாழும் ரிஷி முனிவர்கள் என்றே பொருள்.

 

மதத்தைப் பரப்ப வந்த , நாடு பிடிக்க வந்த அயோக்கியர்கள் 300 ஆண்டுகளாக திராவிட (தென் பகுதி) ஆரிய (மாண்புமிகு, முனிவர்) என்ற சொற்களில் இன விஷத்தைப் புகுத்திவிட்டனர். இதைக் கேட்ட ஹிட்லரும் நான் தான் ஆரியன்;  ஜெர்மானிய வெள்ளையர்தான் ஆரியன் என்று சொல்லி லட்சக்கணக் கானோரைக் கொன்றுவீட்டான்.

 

பாணினி இலக்கண த்துக்கு முன்னர் இலக்கணம் இருந்திருக்கலாம் அது இன்று நம்மிய்டையே இல்லை என்பது பெரிய குறையே! ஆனால் பாணினி சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண கர்த்தா அல்ல. அவனுக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின் நீண்ட பட்டியலை அவனும் பலரும் தந்திருக்கின்றனர். அவைகளும் அகத்தியம் போல ம  ந்துவிட்டன. நாம் எப்படித் தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பவனந்தி முனிவரின் நன்னூலைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல சம்ஸ்கிருத மக்களும் பாணினியைப் பயன்படுத்துகின்றனர். பாணினிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேத கால சம்ஸ்கிருத இலக்கணமே வேறு –

 

ரிக் வேதத்திலேயே 400-க்கும் மேலான புலவர்கள் பெயர்கள் உண்டு; விந்தையிலும் விந்தை அவர்களில் இருபது பேர் பெண் புலவர்கள்! இது உலக அதிசயம். எந்த மொழிக்கும் இல்லாத சிற ப்பு; சம்ஸ்கிருதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுக்கு பின் எழுந்த சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இப்படிப் பெண் புலவர்களை ப் பார்க்கலாம். உலகிலேயே முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள், நாகரீகம் படைத்தவர்கள் இந்துக்களே  என்பதற்கு இந்த இரண்டும் சான்றுகள்.

 

tamil-4

சரி இன்னும் ஒரே ஒரு சந்தேகம்; பார்ப்பன அகத்தியன் தமிழுக்கு இலக்கணம் படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்ரனர். ஆனால் பார்ப்பனர்கள், சம்ஸ்கிருதம் பேசுபவர்கள்;  தமிழ் நாட்டின் பூர்வகுடிகள் இல்லை என்று திராவிடங்களும் அதுகளும் இதுகளும் அவ்வப்போது வெட்டி முழங்குகின்றனவே!

 

உண்மைதான் ‘வோட்டு’களுக்காக அரசியல் நடத்துவோர், நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். நீங்களே அதுகளும் இதுகளும் என்று அஃறிணை யில் பேசிவிட்டீர்கள் அதுவே போதும்.

 

உண்மை யில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் மூன்றில் ஒரு பகுதி பார்ப்பனர் இயற்றிய பாடல்கள்தான்; கபிலன் என்னும் “புல ன் அழுக்கற்ற  அந்தணாளந்தான்” அதிக பாடல்களை  இயற்றிய ர்; “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞான சம்பந்தனும் பார்ப்பனனே! மூழ்கிப் போகும் நிலையில் இருந்த  தமிழ் மொழியை கரையேற்றிய பாரதியும் உ.வே.சா.வும் பார்ப்பனர்கள்; அதிகமாக உரைகள் எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன்”  ஒரு பார்ப்பனன்.

 

அவரோ தொல்காப்பியனும் ஒரு பார்ப்பனன்; அவன் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் சொல்லுகிறார். அதை ஒப்புக்கொள்ளாத வர்களும் தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் CERTIFICATE கொடுத்தது அதங்கோட்டு ஆச்சார்யன் என்பதை மறுக்கவில்லை. ஆக ஒரு பார்ப்பனன் சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னரே அதை தமிழ் கூறு நல்லுலகம், நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்கு வெளியே உலா வர அனுமதித்தது. தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்களை யும் தமிழில் வேள்வி போன்ற மூலச் சொற்கள் இருப் பதும் தமிழ் பண்பாடுதான் இந்தியா முழுவ தும் நிலவிய பண்பாடு என்று ஐயம் திரிபறச் சொல்லும்.

 

வாழ்க தமிழ்

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: