சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

kumkum

Research article written by London Swaminathan

Date: 28 September 2016

Time uploaded in London: 17-51

Post No.3197

Pictures are taken from various sources; thanks.

சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

“வேதத்தில் சிகை அலங்காரம்” பற்றி சென்ற ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு ஒரு ஆசிரியை த்ங்களுடைய பள்ளிக்கூடம் டில்லியில் உள்ளது என்றும் இவ்வாண்டு பெண்களுக்குப் பழங்கால இந்தியாவில் சிகை அலங்காரம் என்ற ப்ராஜெக்ட் PROJECT எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விவரங்கள் கிடைத்தால் நல்லது என்றும் எழுதி இருந்தார். இப்பொழுது நமது இலக்கியங்களைத் தோண்டதோண்ட தொட்டனைத்தூறும் மணற்கேணி என நிறைய விஷயங்கள் ஊற்றெடுக்கின்றன.

 

சீமந்தம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யும் ஒரு சடங்கு. இந்துக்கள் பிறந்தது முதல் இறந்தது வரை செய்யும் 40 சம்ஸ்காரங்களில் — மதச் சடங்குகளில் — இதுவும் ஒன்று. இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு கர்பத்தின் ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் நடைபெறும். சிலர் கர்ப்பம் பற்றிக் கணக்கு செய்யும் முறை காரணமாக இதை 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்களிலும் சொல்வர்.

 

சீமந்தம் என்றால் வகிடு — தலை முடியில் பகுப்பு — எடுப்பது என்று பொருள். இந்தச் சடங்கின் பெயரையே “வகிடு எடுத்தல்” என்று அழைத்தால் அதில் ஏதோ முக்கியம் இருக்க வேண்டும் அல்லவா?

img_9979

முள்ளம்பன்றி முள் (Picture)

இந்தச் சடங்கு தென் இந்தியாவிலேயே சிறப்பாக நடை பெ xx  கிறது. 2000 ஆண்டுக் காலமாக வட இந்திய இந்துக்கள் பல்வேறு இனத்தினர், மதத் தினரின் படை எடுப்புக்குள்ளானதால் இந்தச் சடங்கு வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

சீமந்தத்தின் போது பூரண கும்பம் வைத்து வேத மந்திரம் முழங்க நீர் எடுத்து கர்ப்பிணியைக் குளிப்பாட்டுவர். அத்தோடு இறைவழிபாடு, சீர், செட்டு, பரிசுகள், வளையல்கள், விரு ந்துகள் எல்லாம் நடக்கும் இது எல்லாம் பெண்ணின் மனதில் ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டும். பெரும்பாலும் ஆண் குழந்தையை வேண்டி பிரார்த்தனை செய்தாலும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எந்தக் குழந்தையையும் இரு வீட்டாரும் மனமுவந்து வரவேற்கிறார்கள்.

 

இந்த சீமந்தத்தின் போது வகிடு எடுக்க ஒரு முள்ளம் பன்றியின் (Porcupine)  முள்ளை வைத்துக் கோடு போடுவர். இந்த அக்குபங்க்சர் அல்லது அக்கு பிரஸ்ஸரில் ( acupuncture or acupressure ) ஏதோ மர்மம் இருக்க வேண்டும். மதச் சடங்கில் முள்ளம் பன்றி முள்ளுக்கு என்ன வேலை? இதில் ஏதோ மர்ம இருக்கக்கண்டுதான் நம் முன்னோர்கள் இதை வைத்திருக்க வேண்டும்

 

பீஷ்மர் எப்படி அம்புப் படுக்கையில் படுத்து acupuncture or acupressure மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினாரோ அது போல இதிலும் ரகசியம் உளது.

இந்துக்கள் குழந்தை பிறந்தவுடன் காது குத்துவது, பெண்களானால் காது,  மூக்கு இரண்டையும் குத்தி, தங்கம் அல்லது வெள்ளீ ஆபரணங்களை அணிவிப்பது எல்லாவற்றிலும் இதே ரகசியம் உளது. அக்குப்ரஸ்ஸர் என்பது அழுத்தம் மட்டும் கொடுக்கும் மருத்துவ சிகிச்சை; பல ஆசனங்கள் செய்யும்போதும் இது கிடைக்கும் அக்குபங்சர் என்பது ஓட்டை போடுவது (காது, மூக்கு குத்தல்)

 

மேலும் பெண்கள் அந்த தலை முடி வகிட்டில் குங்குமம் இடுவதும் வழக்கம். இது லெட்சுமி வசிக்கும் இடம் என்பதால் வீட்டில் வளம் கொழிக்க இது வகை செய்யும் அத்தோடு திருமணமான பெண் என்ற டையாளத்தையும் வெளிப்படுத்தும். காலில் மெட்டி, தலை வகிட்டில் குங்குமம இரண்டில் எது தென் பட்டாலும் அவர்களைத் தாய் போல நடத்த வேண்டு ம் என்பதற்காக இந்த அடையாளம். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு.

 

ஆதி சங்கரர் இயற்றிய அற்புதமான சௌந்தர்ய லஹரியின் 100 ஸ்லோ   கங்களில் அம்பாளின் அழகு வருணிக்கப்படுகிறது. அதில் 44, 45 ஆவது ஸ்லோகங்கள் இந்த தலை முடி வகிடு, அதன் மங்கலத் தனமை, லெட்சுமீகரம் ஆகியவற்றை விளக்குகிறது.

kumkum-2

பொருள் (44ஆம் பாட்டு)

உன்னுடைய முக அழகின் வெள்ளப் பெருக்கு வழிந்தோடும் வாய்க்கால் போல இருக்கும்– தலை வகிட்டின் கோடானது — குங்குமத்தைத் தரித்து இருக்கிறது. அது எங்களுக்கு நன்மை அளிக்கட்டும். இருள் போன்ற உனது கூந்தல் அந்த குங்குமத்துடன் விளங்குவது சூரிய ஒளியிடம்  சிக்கிய இருள் (நீங்கி) போலப் பிரகாசிக்கிறது

 

பொருள் (45ஆம் பாட்டு)

மலர்ந்த புன்சிரிப்பு — பிரகாசிக்கும் பல்வரிசை – நறுமணத்துடன் கூடிய தாமரை போன்ற முகம் — (இவைகளைக் கண்டு) மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் வண்டுகள்  மயங்குகின்றன. உன்னுடைய நெற்றி இயற்கையாகவே சுருண்டு விழும் முன் நெற்றி மயிர்களால் அழகு பெறுகின்றது. இது வண்டுகள் நெற்றியை மொய்ப்பது போல உள்ளது. இது தாமரையை பரிகாசம் செய்வது போல இருக்கிறது.

 

 

 

ஆக சீமந்தம்,  தலை முடி வகிடு எடுத்தல், அதில் மங்களகரமான குங்குமத்தை வைத்தல், அதுவும் மருத்துவ முறையில் செய்யப்பட்ட மஞ்சள் குங்குமத்தை வைத்தல் ஆகிய அனைத்தும் விஞ்ஞான — அறிவியல் — அடிப்படையில் அமைந்தவையே. இதைப் பின்பற்றி எல்லா வளங்களும் பெறுவோமாக.

 

–சுபம்–

Leave a comment

2 Comments

  1. இந்தமாதிரி விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் நமது மரபுவழி நம்பிக்கைகளை வலுப்படுத்துகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதைச் சரியாக அனுசரிப்பதற்கு வேண்டிய சூழ்நிலைகள் மாறிவருகின்றன என்பது வருத்தமளிக்கிறது.

    நம்மிடையே வயதுவந்த பெண்கள் வகிடுஎடுத்து ஒற்றைப்பின்னல் தான் பின்னிக்கொள்வர். பெண்குழந்தைகளுக்கு தலைமயிர் சிக்கெடுத்து தலைவாரிவிடுவதே ஒரு சடங்குபோல் நடக்கும். இதுவும் ஒருவகை அக்குப்ரஷர் எனலாம்! இன்று இங்க்லிஷ் மீடியம் ஸ்கூல் போகும் அவசரம்- இது அனேகமாக நடப்பதில்லை. பலர் பெண்குழந்தைகளுக்கு பாப் செய்துவிடுகிறார்கள். சொல்லும் காரணம்? பள்ளியில் பேன் தொல்லை அதிகரிக்கிறது!

    சிறுபெண்களுக்கு இரட்டைப்பின்னல் பின்னிவிடுவார்கள். இதைப்பற்றிய ஒரு ரசமான சம்பவம்: ரமணபக்தர் புரொஃபஸர் சுப்பராமையா ஒருமுறை தன் பெண்ணுடன் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவள் அங்கு விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு தலைவாரி இரட்டைஜடை போட்டிருந்தது. இந்தமாதிரி விஷயங்களில் எப்பொழுதுமே தன் கருத்தை வெளியிடாத வழக்கமுடைய பகவான், அன்று சுப்பராமையாவிடம் குழந்தைவிளையாடுவதைக் காட்டி ” ஆனால் இரட்டை ஜடை எதற்கு?” என்று கேட்டாராம். அக்குழந்தைக்கு இரட்டை ஜடை பின்னியது அதுவே கடைசிமுறை என்று சுப்பராமையா தன் நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார்.. ரமணர் சொன்னார் என்றால் அதில் காரணம் இருக்கும்.

    இரட்டை ஜடையை விடுங்கள். இன்று பொதுவாக படித்த இளம் பெண்கள் தலையை வாரிக்கொள்வதே இல்லை! அலுவலகம் போகும் மணமான பெண்கள்கூட தலையை வாரிக்கொண்டோ, முடிந்துகோண்டோ போவதில்லை. இதைப் பார்க்கும் போதெல்லாம் எத்தகையவர்கள் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று அருணகிரி நாதர் பாடியது நினைவுக்கு வருகிறது;

    1. காளி : ” சரிவளை விரிஜடை எரிபுரை வடிவினள் ” [தேவேந்திரசங்க வகுப்பு]
    2. அசுரர்கள் : “விரித்த குஞ்சியர் எனும் அவுணர் ” [உனைத்தினம்- திருப்பரங்குன்றம் திருப்புகழ் ]
    3வதும் ஒருவகை உண்டு. ஆனால் சொல்ல மனம் கூசுகிறது.

    இப்படி ஒரு பக்கம் விஞ்ஞானரீதியிலான விளக்கம்; மறுபக்கம் நல்ல பழக்கங்களயும் நாசம் செய்யும் காலத்தின் அவலம்!

    சீமந்தத்தின்போது, ஒரு இடத்தில் மந்திரம் சொல்லி, வீணை வாசிக்கச் சொல்வார்கள். மேலாகப் பார்த்தால் ,வீணையின் நாதமே ஓங்காரம்! சீமந்தத்தின் போது சிசுவுக்கு கேட்கும் சக்தி வந்துவிடும்; அது கேட்கும் முதல் நாதம் ஓங்காரமாக இருக்கவேண்டும் என்பது காரணமாகலாம். இங்கும் உங்கள் ஆராய்ச்சி நோக்கு தேவைப்படுகிறது!

  2. CHO on Pumsavana Seemantham

    சீமந்த சுபநிகழ்வின் போது மந்திரங்கள் தாய் சேய் நலத்திற்காகவும், பிறக்கும் பிறவி நல்ல பிறவியாக அமைவதற்கும், அப்படி பிறந்த பிறப்பு தன் உயர் லக்ஷியமாம் பிறப்பின் தளை அறுத்து வீடுபேற்றை அடைய வேண்டி வேத மந்திரங்கள் ஓதி வேள்வி செய்யப்படுகிறது.

    பும்சவனம் என்பது பிள்ளை வரம் வேண்டி செய்யப்படும் சடங்கு. பிள்ளைக் குழந்தைகள் சந்ததிகள் என்று கருதப்படுவதால், பிள்ளை வரம் வேண்டுகின்றனர். கர்ப்பகால அறிகுறிகள் தெரியும் போதே பும்சவனம் செய்யப்படவேண்டும் என்பது நியதி. சில சாரார்களின் வழக்கப்படி, முள்ளம்பன்றியின் முள்ளினால் வகிடு எடுக்கப்படுகிறது. புத்தி கூர்மையுள்ள சிசு பிறக்கவேண்டும் என்பதற்காகவும், கர்பமுள்ள ஸ்த்ரீயை அழகு படுத்தி, சந்தோஷபடுத்தும் வகையில் வகிடு எடுத்து, தலை பூச்சூட்டி, அலங்கரித்தும் நடத்தப்படுகிறது. அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.

    முள்ளம்பன்றியின் முள் கொண்டு வகிடு எடுத்தல் பல இனத்தவரிடையே இருந்து வரும் பழக்கம். அவர்கள் கற்பிக்கும் காரணங்கள் வித்தியாசமாகவும் வெவ்வேறாகவும் இருக்கிறது. கொங்கிணி பேசும் சில இனத்தவரும் இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், முள்ளம்பன்றியின் முள்ளால் நன்கு (இரத்தம் வரும் அளவு) அழுத்தல் வேண்டும். அப்படி அழுத்தும் பொழுது கர்பஸ்த்ரீ வலி பொறுக்கிறாள். இது பேறு கால வலிக்கு ஒரு முன் அறிவிப்பைப் போல் அவளை தயார் படுத்துவதற்காக செய்யப்படுகிறதாம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: