Written by S. NAGARAJAN
Date: 2 October 2016
Time uploaded in London:5-34 AM
Post No.3209
Pictures are taken from various sources; thanks
By ச.நாகராஜன்
தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்பதை சமீபத்தில் நடந்த ஊரி சம்பவத்தால் உலகமே அறிந்து கொண்டது.
தக்க பதிலடியாக உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த ராணுவங்களுள் ஒன்றானதும் மிகப் பெரிய ராணுவமுமான இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. இந்தியர்கள் பெருமிதப்படுகின்றனர் ஏனைய நாடுகள் ஆச்சரியத்தின் உச்சியில் அதிசயித்து நிற்கின்றன.
எல்லைக் கோட்டின் அப்பால் உள்ள தீவிரவாதிகளை அதிரடியாகத் தாக்கி ஒழித்த இந்திய ராணுவத்திற்குப் பணிவான வணக்கங்கள். கூடவே மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
மூன்றாம் உலக மகாயுத்தம் பற்றிய கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மிகப்படுத்தப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் சிலருக்கு எழக்கூடும்.
ஆனால் அதை ‘டெம்ப்ளேட்டாக’ வைத்துக் கொண்டு சிரியாவோ, ஜெர்மனியோ, ஸ்விட்சர்லாந்தோ, பிரான்ஸோ, பிரிட்டனோ, அமெரிக்காவோ எந்த நாட்டை வேண்டுமானாலும் அதன் மீது வைத்துப் பார்க்கலாம்.
விஷயங்களை எந்த ஒரு தனி நபரும் தானே தொகுக்கலாம்; உண்மையைக் கண்டறியலாம்.
பாகிஸ்தானின் மதவெறியைச் சற்று பார்க்கலாம்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து எழுபதுகளிலிருந்தே பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளின் பாட புத்தகங்களில் இந்தியா ஒரு எதிரி எனச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் என்ற நாடு ஹிந்துக்களுக்கு எதிரானது என்பதைச் சித்தரிக்க வேண்டியிருப்பதால் ஹிந்துக்கள் அனைவரும் இயல்பான எதிரிகள் என்று அங்கு சித்தரிக்கப்படுகிறது.
National Commission for Justice and Peace என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளது. அது பாகிஸ்தானின் பள்ளிப் பாட புத்தகங்கள் வேண்டுமென்றே ஹிந்துக்கள் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற விஷமத்தனமான பாடங்களைக் கொண்டிருக்கிறது என்று தன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
அரசின் சார்பில் வெளியிடப்படும் இந்த அரசின் பாட புத்தகங்கள் ஹிந்துக்கள் மூட நம்பிக்கைக்காரர்கள் என்றும் ஹிந்து இனம் பின் தங்கிய இனம் என்றும் கூறுகின்றன.
இஸ்லாமின் தொன்று தொட்டு இருந்து வரும் பகைவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் கொள்கைப்பிடிப்புள்ளவர்கள் என்றும் அவை சித்தரிக்கின்றன.
விக்கிபீடியா இந்த அறிக்கையைத் தருகையில், “Textbooks reflect intentional obfuscation. Today’ students, citizens of Pakistan and its future leaders are the victims of these blatant lies” என்று கூறுகிறது.
1947ஆம் ஆண்டு பிரிவினை கேட்டுப் பிரிந்த் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் ஜனத்தொகை 15 சதவிகிதமாக இருந்தது.இப்போதோ அது வெறும் 1.7 சதவிகிதமாகி விட்டது.
2014இல் ஒரு சட்ட நிபுணர் நேஷனல் அசெம்பிளியில், “ஒவ்வொரு வருடமும் 5000 ஹிந்துக்கள் அங்குள்ள கொடுமைக்குப் பயந்து பாகிஸ்தானை விட்டு வெளியேறுகின்றனர்” என்றார். ஹிந்துப் பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வது தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.
சிந்தில் உள்ள மதர்ஸாவான Dargah Alia Qadria Bharchundi Shariff வெளிப்படையாக 2000 ஹிந்துப் பெண்களை இஸ்லாமுக்கு மாற்றுவதே தங்கள் நோக்கம் என்று கூறியிருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியப் பாதுகாப்புப் படையின் ஏஜண்டுகள் என்று கூறி அவர்கள் மீது தீங்கு தொடர்ந்து இழைக்கப்படுகிறது.
மைனாரிடி ஹிந்துக்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஒரு அளவே இல்லை.ஸ்வாத்தில் உள்ள தாலிபான்கள் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக சிவப்பு டர்பன்களை தலையைச் சுற்றி அணியச் செய்கின்றனர்.\2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஹிந்து இளைஞன் கராச்சியில் ஒரு மசூதிக்கு அருகில் இருந்த குழாயிலிருந்து நீரைக் குடித்தான் என்பதற்காக பெரிய கலவரம் ஒன்று நடத்தப்பட்டது. ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் கழகம் தனது 2010ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறைந்தப்ட்சமாக மாதம் ஒன்றுக்கு இருபது ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
-அடுத்த கட்டுரையுடன் முடியும்
You must be logged in to post a comment.