பண்டித மோதிலாலை பறிகொடுத்தோமே! பரிதவித்தோமே! (Post No.3232)

438_motilal_nehru

Written by London Swaminathan

 

Date: 8 October 2016

 

Time uploaded in London: 13-57

 

Post No.3232

 

Pictures are taken from various sources; thanks.

 

 

மொழி என்பதற்கு எத்தனை சொற்கள்?(Post No.3233)

 

அமரகோஷம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத  நிகண்டு மொழிக்கான சொற்களின் பட்டியலைத் தருகிறது:-

 

வாக் வர்க:

ப்ராஹ்மி து பாரதீ பாஷா கீர்வாக்வாணீ சரஸ்வதீ

வ்யாஹார உக்திர்  லபிதம் பாஷிதம் வசனம் வச:

 

உரைகாரர்கள் கொடுக்கும் அர்த்தங்கள்:–

ப்ராம்மி- பிரம்மாவைச் சேர்ந்தவள் (சரஸ்வதீ);

பாரதீ- உலகிலுள்ள எல்லாப் பொருட்களிலும் பரந்து இருப்பதால் (எல்லாப் பொருட்களையும் சொல்லால் விளக்குவதால்); பிரம்மனுக்குத் துணையானதால்; (பரத= பிரம்மா, ஆதித்யம்)

பாஷா = பேசுவதால் பாஷை

கீர்- பாடப்படுவதால் கீர்; பாடப் பயன்படுவதால்;உச்சரிப்புகள் வெளிவருவதால்;

வாக்- சொல்லப்படுவதால்

வச: – சொல்லுவதால் (வாக்கியம்)

சரஸ்வதீ- எங்கும் ஓடுவதால் (எங்கும் செல்லுபடியாவதால்; பயன்படுவதால்)

வ்யாஹார: – சொல்லப்படுவதால்

உச்யா – உரைக்க படுவதால்

லபிதம் = சொல்லுவதால்

பாஷிதம் – பாசிப்பதால்/பேசுவதால்

 

xxx

 

அபப்ராம்சோ அபசப்த: ச்யாத் சாஸ்த்ரே சப் தஸ்து வாசக:

திங்சுபந்தசயோ வாக்யம் க்ரியா வா காரகான்விதா

 

உரைகாரர்கள் கொடுக்கும் அர்த்தங்கள்:–

அபப்ராம்சோ – கொச்சையான மருவிய மொழி

அபசப்த-  ப்ரஷ்டமான சப்தம்; ஏற்றுக்கொள்ளப்படாத சப்தம்

 

வாக்யம் – பொருளுடைய சொற்றொடர்

திங்சுபந்தம்- திகந்தம்+ சுபந்தம் (வினை+ பெயர்ச் சொல்)

காரகன் – எழுவாய்

motilal-2

 

அபசப்தம்: = சபையில் சொல்லக்கூடாத சொற்கள்

 

ஒரு முறை மதுரை தினமணி அலுவலகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 என்பது அலுவலகம் மூடப்பட்டதால் பெரிய அளவில் சுதந்திர தினம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியன நடை பெறும். நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து நாலைந்து ஆண்டுகளில் மதுரையில் தினமணிப் பதிப்பு துவங்கப்பட்டது.

விழா நாளன்று பிரார்த்தனை பாட கூப்பிடப்பட்ட ஆள் வராததால் பிரார்த்தனை என்று அறிவித்தவுடன் ஒரே அமைதி. திடீரென்று அதிகம் படித்தறியாத ஒரு கம்பாசிட்டர் (compositor) மேடைக்கு வந்தார். மைக் முன்னர் தைரியமாக நின்றார்; முழங்கினார்:

 

பண்டித மோதிலாலை பறிகொடுத்தோமே, பரிதவித்தோமே

பண்டித மோதிலாலை பறிகொடுத்தோமே, பரிதவித்தோமே

 

கூட்டத்தில் ஒரு பக்கம் சிரிப்பு; இன்னொரு பக்கம் அதிர்ச்சி. இரண்டு மூன்று பேர் மேடைக்கு ஓடிப்போய் “டேய் நிறுத்தடா; பிரார்த்தனை என்றால் ஒப்பாரி வைக்கிறாயே” என்று அவனை அதட்டி விரட்டினர். பாவம் அறியாமையினால் வந்த விளைவு. அந்தக் காலத்தில் சுதந்திர தினம் என்றால் இப்படி பழைய, காலஞ்சென்ற தலைவர்கள் குறித்து பாடுவது பழக்கம். அதையொட்டி அந்த ஆளும் பாடிவிட்டார். ஆனால் இது பிரார்த்தனை அல்ல; பிலாக்கணம் என்பது அவருக்குப் புரியவிலை.

 

நான் தினமணிப் பத்திரிக்கையில் (1971) சேர்ந்து சப் எடிட்டராகப் பணியாற்றிய போதும் கம்பாசிடர் ஆறுமுகம் பணியாற்றினார். அவர் எங்கள் மேஜையில் ‘புரூப்’புகளை வைத்துவிட்டு உள்ளே சென்ற பின்னர் நாங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் பார்த்து பண்டித மோதி லாலை பறிகொடுத்தோமே! பரிதவித்தோமே என்று பாடி சிரிப்போம்.

 

 

இதே போல இன்னொரு சம்பவம்– மதுரை மீனாட்சி கோவிலில் நடந்தது. ஆடிவீதியில் அனந்தராம தீட்சிதரின் ராமாயண உபந்யாசம் ஏற்பாடாகி இருந்தது. ஊர்ப் பிரமுகர் ஒருவர் நிறைய நன்கொடை வழங்கியதால் அவரை மேடைக்கு அழைத்து கவுவித்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள் என்று பணித்தனர். அவர் தனது உரையில் இரண்டு மூன்று தடவை ராமயானம், ராமயானமென்று சொல்லியவுடன் கூட்டத்தில் ஒரே சிரிப்பு! என்ன என்ன ஆயிற்று? என்று அவர் திரும்பித் திரும்பி பார்க்கிறார். உடனே மேடையில் இருந்த ஒருவர் அவரிடம் ராமாயணம் என்று உச்சரிக்க வேண்டும் என்றார். அவர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். அப்போதும் ராமயானம் என்று சொல்லவே கூட்டத்தில் முன்னைவிட பெரிய சிரிப்பொலி. அவர் பார்த்தார். தனக்கு ராமாயணமும்   வராது; கீமாயணமும் வராது என்று தெரிந்து கொண்டார். அடுத்த முறை ராமயானம் என்று சொல்லிவிட்டு; இப்படியும் சொல்லலாம்; ஐயர் சொன்ன மாதிரியும் சொல்லலாம் என்று சமாளித்தார் (ஐயர்= அனந்தராம தீக்ஷிதர்)

 

xxxx

skt-alphabet

ச்ருதி: (ஸ்த்ரீ) வேத ஆம்நாய த்ரயீ தர்மஸ்து தத்விதி:

ஸ்ச்த்ரீயாம்ருக் சாம யஜுஷீ இதி வேதாஸ்ரயஸ்த்ரயீ

சிக்ஷோத்யாதி ச்ருதேரங்க ஓம்கார ப்ரணவௌ சமௌ

உரைகாரர்கள் கொடுக்கும் அர்த்தங்கள்:–

 

வேதத்தின் மற்ற பெயர்கள்:-

ச்ருதி-காதால் கேட்கப்படுவதால் ச்ருதி; தர்மம் எது, அதர்மம் எது என்பதைக் காட்டுவதால் ச்ருதி;

 

வேத: –ஞானத்தைக் கொடுப்பதால் வேதம்; வேதம் என்பது அறிவு

ஆம்நாய:– விதி, கட்டளை, பரம்பரையாக வரும் விதிகள்

த்ரயீ- ருக், யஜுர், ஸாமம் எ ம் முன்று வேதங்களை

உடையதால் த்ரயீ;

 

சிக்ஷதி- எழுத்துமுறைகளைப் போதிக்கும் சிக்ஷா இதன் ஒரு அங்கம்

சிக்ஷா – தண்டனை; வேதத்தின் ஆறு அங்கங்களின் ஒரு அங்கம்

 

தர்ம: — வேதமே தர்மம்

“தாரயதி ஜகந்தி இதி தர்ம:” = இந்த உலகங்களைத் தாங்குவது தர்மமே:

அறநெறி வாழ்க்கை தர்மம் எனப்படும்; நீதி நெறியற்ற வாழ்க்கை நிலவுமானால் மோதல்கள் ஏற்பட்டு போர், இரத்தக்களரியில் உலகம் அழியும்.

 

ரிக்- ருச்யதே, ஸ்தூயதே (துதிக்கப்படுவதால் ரிக்

பாபத்தை அழிப்பதால் சாமம் எனப்படும்

யஜூர்- வேள்வி வேட்பதால் யஜூர்;தேவ பூஜனம், இஷ்டி பூர்த்தி, வரவேற்றல் என்ற பொருளும் உண்டு

 

ஓம்காரம் – வேதத்தின் இன்னொரு பெயர்; எல்லா மந்திரங்களும் ஓம்காரத்துடன் துவங்குவதால்; ஓம் என்பதன் பொருளை விளக்குவதால்

 

பிரணவம் = ஓம்காரத்தின் இன்னொரு பெயராதலால் வேதத்திற்கும் ஆகுமாம்.

 

–Subham–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: