மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்? (Post No.3304)

 

 

Written  by London Swaminathan

 

Date: 30 October 2016

 

Time uploaded in London: 16-56

 

Post No.3304

 

Pictures are taken from various sources; thanks to Facebook friends.

 

 

மானவ தர்ம சாச்திரம் எனப்படும் உலகத்தின் முதல் சட்டப் புத்தகத்தில் உள்ள இடைச் செருகல்களைக் காட்டி அதற்கு அவப்பெயர் உண்டாக்குவதில் திராவிடக் கட்சிகளும், மார்கசீயவா ((ந்)) திகளும், வெள்ளைத் தோல் வெளிநாட்டினரும் சமர்த்தர்கள். ஆனால் இதற்கு நேர் மாறாகத் தமிழ் கல்வெட்டுகளும் தமிழ் இலக்கியமும், குறிப்பாக கம்பராமாயணமும் மனு நீதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. மனுநீதிச் சோழன் பற்றிய இலக்கியக் குறிப்புகளைத் தந்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிவிட்டதால், அதை மீண்டும் கூற விழையவில்லை.

 

கம்பராமாயணத்தில் சில பாடல்களை  மட்டும் ஈங்கு தருவன்.

 

அகத்தியனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை அழகாகப் பாடிவிட்டு கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான் ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில்:–

 

வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்

ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே

ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.

 

தமிழ் முனிவன்  பற்றி கம்பன் செப்பிய பாடல்களை அடுத்து இப்பாடல் வருவதால் இராமன் தென்னாட்டிற்கு வந்தது — தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வந்தது தெள்ளிதின் விளங்கும்.

 

பொருள்:–

“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.

 

கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–

 

இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-

அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்

குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ

இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா

பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்

 

பொருள்:-

ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?

 

இதற்கு இராமன் அளித்த பதில்:–

 

தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள

மக்களும் விலங்கே மனுவின் நெறி

புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே

 

(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)

 

 

இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,

மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.

 

இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு:

 

நஞ்ச மன்னவரை நலிந்தாலது

வஞ்சமன்று மனு வழக்காதலால்

அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்

 

பொருள்:-

 

விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை 5 வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.

 

மனு நீதி என்பது என்ன என்பதை மனினுநீதிச் சோழன் கதையில் கண்டோம்; தவறிழைத்தவன் மன்னன்    மகனே ஆனாலும் மந்திரி மகனே ஆனாலும் பாமரனுக்குள்ள அதே நீதிதான் அவனுக்கும். தேரின் காலில் கன்றைக் கொன்றதால் அரண்மனைக்கு ஓடிச் சென்று மணி அடித்த பசுவுக்காக தன் மகனையே பலி கொடுத்த மாமன்னன் மனு நீதிச் சோழன்.

 

கொலை போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுவோரை தீர்த்துக் கட்டுவது அரசன் கடமை என்று வள்ளுவனும் (குறள் 550) மனுவும் (7-10) செப்புகின்றனர்.

 

இன்னொரு பாடலில் இலக்குவனையும் மனுவின் கோமகன் (மனுவின் வழியில் வந்தவன்) என்று புகழ்வான் கம்பன்.

 

 

 

இப்படிக் கம்ப ராமாயணம் முழுவதும் பல இடங்களில் மனுவைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறான் கம்பன். கல்வெட்டுகளில் மனு நீதி பற்றி வரும் விஷயங்களை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

 

–சுபம்–

 

 

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: