ஒரு யானையின் சோகக் கதை!(Post No.3379)

Compiled by London Swaminathan

 

Date: 22 November 2016

 

Time uploaded in London: 19-49

 

Post No.3379

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

1907ஆம் அண்டு வெளியான தமிழகம் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு சம்பவத்தை கீழே காண்க. இதே போல உ.வே.சாமிநாத அய்யர் எழுதிய ஒரு யானையின் கதையை முன்னரே எழுதியுள்ளேன்.

 

 

 

 

 

 

Leave a comment

2 Comments

  1. மனதை உருக்கும் கதை, மானிடர்களுக்கு புத்தி புகட்டும் கதை. பஞ்சதந்திரம் போன்ற நமது பழைய இலக்கியங்களில் மிருகங்களைப் பற்றியும், மனித-மிருகத்தொடர்பு பற்றியும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. இவற்றை வெறும் கட்டுக் கதையென்று விட்டுவிடுகிறார்கள். நமக்கு பூர்வீகர்கள் சொன்னவற்றில் பூரண நம்பிக்கை இல்லை; ஆராய்ச்சிசெய்து உண்மையைக் கண்டறியும் சாமர்த்தியமும் இல்லை.

    மேலை நாட்டினரோ, உண்மையான ஆராய்ச்சி செய்கின்றனர். காட்டு விலங்குகளையும் அவற்றின் இயற்கைச் சூழலிலேயே கண்டு ஆராய்கின்றனர். இவற்றின் விளைவாக பல வியக்கத்தகு உண்மைகளைக் கண்டறிந்து வருகின்றனர். விலங்குகள் பேசவியலாது, ஆனால் தமது கருத்தை, உணர்ச்சிகளை வெளியிடத்தெரியும், மனிதருடன் தொடர்புகொள்ளத்தெரியும் , நன்றி பாராட்டவும் செய்யும் எனப் பல விஷயங்களைக் கண்டு சொல்கின்றனர். நாய், பூனை, பசு போன்ற வீட்டு செல்லப் பிராணிகளைப் பற்றி நாம் ஓரளவு அறிவோம். காட்டு விலங்குகளைப்பற்றியும் இத்தகைய விஷயங்களைப் பற்றி பலர் எழுதிவருகின்றனர். காட்டில் அனாதையாய்க் கண்டெடுத்த சிங்கக்குட்டியை வளர்த்து அதைமீண்டும் வனவிலங்காக்க முயன்று வெற்றியும் கண்ட சொந்த அனுபவத்தை Born Free, Living Free, Forever Free என்ற புத்தகங்களில் Joy Adamson உருக்கமாக எழுதியிருக்கிறார். காட்டுக் குதிரைகளைப் பழக்க முரட்டுத்தனமான வழக்கங்கள் இருந்தபோது, அதை எதிர்த்து , அவற்றுடன் அனுபவபூர்வமாகப் பழகி, அவற்றுடன் “பேசி- communicate செய்து அவற்றின் சம்மதம் பெற்றே அவற்றைப் பழக்கிய விதத்தையும் வித்தையையும் Monty Roberts, The Man Who Could Talk to Horses என்ற புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.

    இப்படி ஒவ்வொரு விலங்கைப் பற்றியும் பல புத்தகங்கள் இருக்கின்றன, ஆனால் மனிதனுக்கும் யானைக்கும் உள்ள தொடர்பு தெய்வீகமானது. மிருகங்களிலேயே மனிதனைப் போன்ற மனோபாவம் உள்ள பிராணி- குடும்பப் பாசம், நன்றி மறவாமை, தன் இனத்தாருடனான இணக்கம். நினைவாற்றல், ESP ஆற்றல், போன்ற பல அம்சங்களில் மனிதையும் மிஞ்சும் சுபாவம் கொண்டது. இத்தகைய பல உண்மை நிகழ்ச்சிகளை The Elephant Whisperer என்ற புத்தகத்தில் Lawrence Anthony விளக்கியிருக்கிறார். Caitlin O’Connell என்பவர் எழுதிய The Elephant’s Secret Sense என்ற புத்தகத்திலும் இதைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்.இன்னும் எத்தனையோ புத்தகங்கள்!

    பகவான் ரமணரிடம் வந்த லக்ஷ்மி என்ற பசு பகவான் கரத்திலேயே முக்தி பெற்று, அவருடைய பாடலையும் பெறும் பாக்யம் பெற்றது!

    குருவாயூர் ஸ்ரீ க்ருஷ்ணர் கோவிலில் இருந்த கேசவன் என்ற யானை மிகப் பிரசித்தமானது. இதன் வரலாறு அற்புதமானது. இதை உன்னிக்ருஷ்ணன் புதூர் விரிவாக எழுதியிருக்கிறார்.

    இதையெல்லாம் பார்த்தால் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்ற பாரதியாரின் வரியில் உள்ள சத்தியம் நம்மைத் தொடுகிறது! அதே சமயம் மனிதனைப் போன்ற கொடிய விலங்கு உலகிலேயே இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது!
    .

  2. Thanks for adding relevant and very useful notes to our posts. Please continue the work.
    I read all your replies and Nagarajan’s acknowledgements.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: