கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)

Picture of Sri Balamurali Krishna

 

Written by London swaminathan

 

Date: 5 December 2016

 

Time uploaded in London: 9-24 AM

 

Post No.3419

 

Pictures are taken by ADITYA KAZA; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் 3-12- 2016ல் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற என்னையும் அழைத்திருந்தனர். முதலில் அதில் கேட்ட, பிறர் சொன்ன சுவையான விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

பாரதியார் மற்றும் சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் அவர்கள் கஷ்டப்பட்டபோதெல்லாம் இறைவனை நினைத்து கவிகளையும், கீர்த்தனைகளையும், கிருதிகளையும் இயற்றியதைப் படிக்கிறோம்.

 

 

 

லண்டன் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பாரதீய வித்யா பவன் டைரக்டர்  டாக்டர் நந்த குமாரா சொன்னதாவது:

“ஒரு முறை சங்கீத மாமேதை பாலமுரளி கிருஷ்ணா, ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்தார். ஹோட்டலில் நான்கு நாட்கள் தனியாகத் தங்கி இருந்தார். அங்கு மரக்கறி (சைவ) உணவு கிடைப்பது அபூர்வமாக இருந்தது. ஒரு புறம் தனிமை; மறுபுறம் வயிற்றைக்கிள்ளும் பசி; ஹோட்டல்காரர் களிடம், ‘ அப்பா! கொஞ்சம் தயிராவது கொடேன் என்று பாலமுரளி சொன்னார். உணவு விடுதிக்காரரும் மறுநாள் நல்ல கெட்டித் தயிர் கொண்டுவந்தார்.

“ஒரே ஆச்சரியம். அட இந்த உறைபனி வெப்ப நிலையிலும் இப்படி வெண்ணை போலத் தயிர் கொண்டு வந்துவிட்டீர்களே! என்றார் பாலமுரளி

Dr Nandakumara, Director, B V Bhavan, London Kendra

அந்த உணவுவிடுதிக்காரர் சொன்னார், “அது ரொம்ப எளிது, ஸார். நாங்கள் விரைவில் தயிர் ஆக அதில் ஒரு மீனைப் போட்டுவிடுவோம் என்றார். இதைக் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா, நொந்து போய், மனம் வெந்து போய் அதை நைஸாக ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்து விட்டு ஜன்னல் வழியாக வெட்ட வெளியைப் பார்த்தார். நள்ளிரவு. ஆனாலும் சூரியன் தெரிந்தது (துருவத்தை ஒட்டி, வட அட்ச ரேகைகளில் இருக்கும் நாடுகளில் நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கலாம்.) உடனே அவருக்கு ஒரு கவிதை (க்ருதி) பிறந்தது. இறைவா! சூரியனே நீதான் எங்கு போனாலும் எனக்குத் துணை” என்று.

 

(என் கருத்து: நமக்குக் கஷ்டங்கள் வந்தால் கோபப் படுவோம். இறைவன் மீது கூட அந்த சினம் பாயும் . ஆனால் பெரியோர்களுக்குக் கஷ்டம் வந்தாலோ அது பாட்டாக மலரும்)

 

அடுத்ததாக லண்டனிலுள்ள சீனியர் மிருதங்க வித்துவான் திரு கிருஷ்ண மூர்த்தி பேசினார்; அவர் சொன்னதாவது:

 

ஒரு முறை என் குருநாதருக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் அவருக்கு வந்த எல்லா மிருதங்கக் கச்சேரிப் பணிகளையும் ரத்து செய்துவிட்டார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வாசிக்க ஒப்புக்கொண்டது மறந்து போயிற்று. எதேச்சையாக சபா காரியதரிசி என் குரு நாதரைப் பார்த்து “நாளை கச்சேரி; அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்று வந்தேன் என்று சொல்ல, என் குருநாதர் “முடியவே முடியாது என் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

சபா காரியதரிசியோ, இவ்வளவு கடைசி நேரத்தில் நான் போய் யாரைக் கேட்டாலும் வர மாட்டார்கள்; உங்கள் சிஷ்யன் கிருஷ்ணமூர்த்தியை (என்னை) வாசிக்கச் சொல்லுங்களேன் என்றார். அதற்கு என் குருநாதர் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, பாலமுரளி ஸார் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்றார்.

Senior Mridangist Mr Krishnamurthy (first in the row)

சபா காரியதரிசி பாலமுரளி கிருஷ்ணாவைக் கேட்டவுடன் அவர் இசைவு தெரிவித்தார். மறு நாள், நான் பயந்துகொண்டே போய் வாசித்தேன். அவர் எனக்கு மிகவும் ஆதரவு கொடுத்துப் பாடினார் — என்றார் திரு கிருஷ்ணமூர்த்தி

 

இதற்குப் பின், நான் பேசினேன்.

என் சிற்றுரை:

கூட்டத்தில் நான் (லண்டன் சுவாமிநாதன்) பேசியதாவது.

 

என்னைப் பேச அழைத்த வயலின் வித்வான் திரு நாகராஜு அவர்களுக்கு நன்றி.

டாக்டர் நந்தகுமாரா பேசி முடித்தவுடன் இதையெல்லாம் புத்தகமாக எழுதுங்கள் உங்கள் அனுபவம் எல்லாம், எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் என்றேன். அது போல கிருஷ்ணமூர்த்தி ஸாரும் அவரது அனுபவங்களை எழுத வேண்டும். அவர் நீண்ட காலத்துக்கு முன்னர் எதிர்பாராத விதமாக பாலமுரளிக்கு வாசித்தபோது அவர் எவ்வளவு ஆதரவு கொடுத்தாரோ அதை பாலமுரளி கிருஷ்ணா கடைசி வரை செய்து வந்ததை நான் FACE BOOK பேஸ் புக் மூலம் அறிவேன். தினமும் யாராவது ஒரு இளம் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் ஆசி பெறுவது போல படஙகள் வரும். நமக்குத் தெரியும்; பிரபல பாடகி சுதா ரகுநாதன் முதல் புதிய கலைஞர்கள் வரை அனைவரும் அவரது ஆசியையும் ஆதரவையும் பெற்றவர்கள் என்பது.

 

நான் ஒரு திரைப்படப் பாடல், இரண்டு சம்பவங்கள் , மூன்று திருக்குறள்கள் சொல்லி அதில் அவரது வாழ்வு எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்று காட்ட விழைகிறேன்.

 

திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் ஒரு நாள் போதுமா என்ற அருமையான பாட்டு பாலமுரளி குரலில் ஒலித்தது. அதை எழுதியவர் கவிஞர் கண்ண்ணதாசன். கவிஞர்களின் வரிகள் எப்போதுமே தீர்க்கதரிசனம் உடைய வரிகள். அவர் பாலமுரளியின் வாய் மூலம் வரவழைத்த ஒவ்வொரு வரியும் எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்று பாருங்கள் (நான் ஆங்கிலத்தில் பேசியதால் ஒவ்வொரு வரியையும் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்).

Mr Prabhakar Kaza, London swaminathan and Dr Nandakumara with his wife.

பாடல்: ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

………………………………….

………………………….
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? – என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? – என்
………………………………………
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் – என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் –

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

……………………………….
கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா

 

 

கண்ணதாசன் வரிகளில் வந்தது போல பால முரளியின் கானம் தேவ கானம், அவருடைய பாட்டுக்கு இந்த நாடே இணையாகாது, அவரது பாட்டைக் கேட்க எல்லோரும் எழுந்தோடி வந்தனர்; அவர் சொன்னது போலவே அவர் இசைத் தெய்வம். எனக்கு முன்னே பேசியோரும் பாலமுரளியை சங்கீத சார்வபௌமன் என்றும் அவதாரம் என்றும் போற்றினர். எவ்வளவு உண்மை! எவ்வளவு உண்மை!

நான் சொல்ல விரும்பும் இரண்டு சம்பவங்களும் விக்கிபீடியாவில் உள்ள விஷயங்கள்தான். தந்தை விரும்பாதபோதும் எப்படி அவர் தானே ஒரு வயலின் செய்து வாசித்து தந்தையையும் இணங்க வைத்தார் என்பதும், அபூர்வ ராகங்கள் என்ற படத்திற்கு அவர் எப்படி மஹதி ராகத்தில் அதிசய ராகம் பாடல் எழுதினார் என்பதும் இரண்டு சம்பவங்கள் (விக்கி பீடியாவில் காண்க)

 

 

அடுத்ததாக மூன்று திருக்குறள்கள்; அவை எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்பதைச் சொல்கிறேன்.

Mr Nagaraju playing on violin

-தொடரும்…………………….

 

 

 

Leave a comment

1 Comment

  1. சங்கீத ஞானி அவருக்கு கீர்த்தனை எந்த சமயமும் நல்ல சமயம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: