ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் (Post No. 3465)

Written by S NAGARAJAN

 

Date: 20 December 2016

 

Time uploaded in London:- 5-48 am

 

Post No.3465

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

நல்ல புத்தகம்

ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்

(Brindavan Express – A train of thought)

ச.நாகராஜன்

 

 

நல்ல எழுத்தாளர் தேசிகன்

 

நண்பர் வி.தேசிகனின் ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் ஒரு அழகிய பயணத்திற்கு அடி கோலுகிறது.

 

தேசிகன் ஒரு சிறந்த விஞ்ஞானி. மதுரையில் செந்தமிழ் மணம் கமழ வளர்ந்தவர். பாரம்பரிய மிக்க குடும்பத்தில் அற நெறியை வழுவாது காக்கும் குல மரபைப் பின்புலமாக கொண்டு வளர்ந்தவர்.

 

எலக்ட்ரானிக்ஸ் மாஸ்டர் டிகிரியை மதராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பெற்று விட்டு டிஃபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் பணியாற்றச் சேர்ந்தார்.

நீண்ட நெடும் பணிக் காலத்தில் அவர் அடைந்த அனுபவங்கள் பல.

 

 

1983ஆம் ஆண்டு பாரத பிரதம்ர் இந்திராகாந்தி அவர்களிடமிருந்து “ஸ்யிண்டிஸ்ட் ஆஃப் தி இயர்” (Scientist of the Year) என்று சிறந்த விஞ்ஞானிக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் விருதைப் பெற்ற பெருமைக்குரியவர்.

ஏராளமான தொழில்நுட்ப ஆய்வுப் பேப்பர்களை சரளமாக் எழுதும் ஆற்றல் பெற்ற அவர், தனது எழுத்துத் திறமையால் அன்றாடம் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் வாழ்வினில் ஏற்படுத்தும் தாக்கங்களை இந்த நூலில் அழகுற விளக்குகிறார்.

 

 

சம்பவக் கோவைகள்

 

அவரது மேல் அதிகாரியுடனான சந்திப்பு. அவர் வாழ்நாள் சாதனையாக அவர் உருவாக்கிய 40 அடி நீளமுள்ள சங்கம் என்று பெயரிடப்பட்ட அற்புதமான ஆய்வு வாகனம், அதை அப்துல்கலாம் உள்ளிட்டவர்கள் கண்டு பாராட்டிய பாங்கு, மரீனா பீச்சில் சுண்டல் விற்கும் அழகு, மதுரைவீரன் படத்தைப் பார்க்க அந்தக் கால வழக்கப்படி க்யூவில் நண்பர்களுடன் நின்ற நினைவு,விம்பிள்டனில் உள்ள ஆல் இங்க்லேண்ட் களப்பிற்குச் சென்றது என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் நகைச்சுவை மிளிர அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

 

சிந்தனைச் சிதறல்களாக அரும் பெரும் கருத்துக்கள் பளிச் பளிச்சென ஆங்காங்கு கட்டுரையில் மின்னும் போது அதில் மனம் ஆழ்ந்து லயித்து விடுகிறது.

 

சிந்தனைக்கும் விருந்து

 

சிறந்த நாவல்கள், சிறந்த  முடிவுகள் (Great Novels, Great endings) என்ற கட்டுரையில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலான எ டேல் ஆஃப் டூ சிடீஸில் ( A Tale of Two Cities) வரும் சிறந்த கதாபாத்திரம் சிட்னி கார்டனை நினைவு  கூர்ந்து நாவலின் கடைசி வரியைச் சுட்டிக் காட்டுகிறார் அவர்.

 

இன்னும் பல அழகிய நாவல்களின் முடிவுகளை அவர் சுட்டிக் காட்டும் பாணியே தனி!

 

தன் உள்ளத்தில் ஊறி இருக்கும் பிரபல கவிஞர்கள் மற்றும் மேதைகளின் சிறந்த வரிகளை ஆங்காங்கே பொருத்தமான் இடத்தில் கட்டுரைகளில் மேற்கோளாகப் பயன்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது கட்டுரையின் விஷயம் கனமாக ஆகிறது. இப்படி ரவீந்திரநாத் தாகூர், ஹாரி எமர்ஸன் ஃபாஸ்டிக், வில்லியம் ஹாஸ்லிட் உள்ளிட்ட ஏராளமானோரின் பொன் மொழிகளைப் படிக்கும் போது உள்ளம் உவகையுறுகிறது..

 

நேனோ டெக்னாலஜியைப் (Nano technology)  பற்றிய பல செய்திகளை நம் முன் வைத்து எதிர்கால தொழில்நுட்பத்தைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறார்.

 

பேத்தி தாரா அவருக்கு ஸ்காட்லாந்தில் பிறந்த தின வாழ்த்தைச் சொல்லிய பாங்கைப் படித்து நாம் நெகிழும் போதே அவரது மனைவிக்கு அடுப்பங்கரையில் உதவி செய்யப் போய் அல்லாடியதையும் சேர்த்து ரஸிக்கிறோம்.

 

 

வாழ்க்கை!

பன்முக உணர்வுகளைத் தூண்டும் வாழ்க்கை!

உறவுகள், அதில் ஊறும் சிலிர்ப்புகள்! நண்பர்கள், அவர்களுடனான சந்திப்புகள், இழப்புகள், அதனால் மனதில் ஏற்படும் ஆறாத வ்டுக்கள் – இப்படி எல்லாவற்றையும் படிக்கும் போது எடுத்த புத்தகத்தை (239 பக்கங்கள்)  முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

 

அழகிய சரளமான ஜிலு ஜிலுவென்ற ஆங்கில நடையில் தேசிகன் எழுதிய கட்டுரைகள் பிரபல ஆங்கில நாளிதழான டெக்கான் ஹெரால்டில் நடுப்பக்கத்தில் வந்து விடும்.

 

அவற்றின் தொகுப்பும், பல்வேறு வலைத்தளக் கட்டுரைகளும் சேர்ந்த ஒரு கலவையாக மின்னுகிறது இந்த நூல்

இந்த நூலை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ஆக்கமும் ஊக்கமும் தந்த நண்பரான ஆர்வி ராஜனே அதை அழகுற அச்சிட்டும் தந்துள்ளார் நல்ல நண்பர். அழகிய தாளில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வெளியீடு.

 

புத்தகம் எழிலுற உயர்ந்த தரத்துடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

விலை ரூ 350. கிடைக்குமிடம் Bookventure, 38, Thanikachalam Road, T.Nagar, Madras, 600 017, India.

 

புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்:

 

About his Boss:

 

My boss Burman, a confirmed bachelor was in charge of system integration. He was a chain smoker. If he liked someone, he would call him an ‘idiot’ or ‘a fool’ –  I was one of his favorite idiots!

 

On seeing his dream vehicle,  the 40 feet long SANGAM:

 

I went towards my favorite SANGAM  and stood there for a long time. I looked at her and gently whispered (what Brutus told Cassius):

‘Forever and forever farewell, my dear

If we do meet again, why, we shall smile.

If not, why then this parting was well made.’

 

About ஸSundal :

 

If there be Chat Centres, fast food outlets all over our cities, why can’t someone open a ‘Sundal Center’?

 

About KDK (Kumbakonam Degree (Coffee) Kaapi :

 

Thank you KDK

You bring me joy in the morning

You bring me joy in the morning;

 

About the requirement of a positive newspaper :

 

I have a real problem on hand. All my life I have enjoyed sipping my morning coffee, reading the morning newspaper. I have recently discontinued my habit as it is no more a pleasant experience. Now I need a ‘Positive Newspaper’ badly.

 

I have a dream:

 

My idea of Next-gen city is that it should be

Totally green and with Zero pollution

With efficient and complete public transportation

With minimum private vehicles

Total Connectivity – Airports, roads, sea (where applicable)

Full Safety

 

ஒரு பானைச் சோறுக்கு ஒரு  சோறு பதம்! ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸ் ஒரு சுவையான விருந்து!

 

வாழ்த்துக்கள் தேசிகன், வாழ்த்துக்கள்!!

******

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: