ஓம் பற்றி உபநிஷத்துகளும், அபிதான சிந்தாமணியும் (Post No. 3501)

Compiled by London swaminathan

 

Date: 31 December 2016

 

Time uploaded in London:-  13-50

 

Post No.3501

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“தமிழ் இலக்கியத்தில் ஓம்காரம்”,

“ ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்”

–என்ற இரண்டு கட்டுரைகளைத்  தொடர்ந்து அபிதான சிந்தாமணியில் உள்ள ஓம் பற்றிய குறிப்பையும் உபநிஷத்தில் ஓம் பற்றியுள்ள ஒரு நூலின் பக்கங்களையும் வெளியிடுகிறேன்.

 

அபிதான சிந்தாமணி பக்கம் 1118

பிரணவம்:-

இது மூன்றக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய், ஏகாக்ஷரமாய், ஏக பதமாய், ஏகார்த்தப் பிரகாசமாய் இருக்கும்.

இதில் முதல் எழுத்தாகிய அகரம், ஒப்பற்ற முதல்வனாகிய  பகவானைத் தெரிவிக்கும். மத்ய பதமான உகரம், அவதாரணவாசியாய் இருக்கும்.மூன்றாவதான மகரம், ஆத்ம ஸ்வரூபத்தை விளக்கும்.  இம்முன்று எழுத்துகளும் மூன்று வேதங்களின் ஸாரமாகும்.

 

இதன் முதல் எழுத்துக்குப் பொருள் ரக்ஷகம் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் சகல ஐஸ்வர்ய த்தோடு கூடிய

ஈச்வரனுக்கேயன்றி  மற்றவருக்கில்லாமையால் அது பகவானைத் தெரிவிக்கும். மற்ற அக்ஷரங்கள் முன்சொன்னபடி உணர்த்தும். இது வைத்துதி, தாமஸி, நிர்குணாவிர்த்தி,  என மூவிதப்படும். இது, சகல தேவர்க்கும் பிறப்பிடமாயும் மந்திரங்களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும்.

 

 

இது சமஷ்டி, வியஷ்டி என இருவிதப்படும். இதனை வேத ஆரம்பத்திலும் முடிவிலும் உச்சரிப்பர்.  இதனை உத்கீதை எனவும், சுத்தமாயை எனவும்  கூறுவர். இதில் எல்லா உலகங்களும்  எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்குமென்பர். இதன் உற்பத்தியை சூத சம்ஹிதையில் இவ்வகை கூறியிருக்கிறது. ஒருமுறை பிரமன், திரிலோகங்களை நீராக்க அதினின்று அக்கினி, காற்று, சூரியன் தோன்றினர். மீண்டும் தபோ அக்கினியால் அவைகளை அழிக்க அவற்றினின்றும் அகர உகர மகரங்களுண்டாயின. அம்மூன்று எழுத்துக்களையும் திரட்டி ஓம் என வைத்தனன். இது வலம்புரிச் சங்கின் வடிவினது.

 

இதன் பெருமைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் இருந்து சாகோப சாகைகள் தோன்றுமாறுபோல இதில் மந்திரம் புவனம் முதலிய சராசரங்கள் எல்லாம் தோன்றும். இதன் விரிவை உபநிஷத்து ஆதி பெருநூல்களிற் கண்டுகொள்க.

b9321-om2bflower

உபநிஷத்துகளில் பிரணவம் எனப்படும் ஓம் பற்றிய விஷயங்கள்:-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Pages from the book Siva Parakramam

–Subham–

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: