Compiled by London swaminathan
Date: 6 January 2017
Time uploaded in London:- 9-03 am am
Post No.3519
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
முதல் பகுதி நேற்று “செத்தாரைப் போலத் திரி” என்ற தலைப்பில் வெளியானது. இது இரண்டாம் பகுதி
23.வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்று எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வம் என் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே
xx
24.ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கிட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேசம் இதே
xx
25.பேய் போற்றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர் ஞானந் தெளிந்தவரே
xx
26.ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம்படங்கப்
போரீர் சாணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையில்
சாரீர் அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சக்நகைக்க
ஏரீர் உமக்கவர் தாமே தருவர் இணையடியே
xxx
27.ஓம்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து
பாங்காய் முளைத்த பயனறிந்தால் பதினால் உலகும்
நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
ஆங்காரமானவர்க்கு எட்டாக் கனி வந்தமர்ந்திடுமே
xxx
28.நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம் மதியாமல் அரும்
பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே
xxx
29.வானத்தின் மீனுக்கு வந்தூண்டில் இட்ட வகையது போல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே
xx
30.நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்த்ர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசனைகள் சர்ப்பனையே
xx
31.மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ
ஐயாநின் மாயை யுருவெளித்டோற்றம் அகிலத்துள்ளே
மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே
xxx
32.உளியிட்ட கல்லையு ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாளிரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று
வெளியிட்டடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே
xxx
33.முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ முள்க மூள்கவே!
xxx
34.அத்தி முதல் எறும்பீறான உயிர் அத்தனைக்கும்
சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோணரே
xxx
35.ஒன்பது வாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாஞ்சாயே! – வன்கழுக்கள்
தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப் பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு
xxx
36.முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை
நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்
xxx
37.இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருகும் தீங்கினையென்னாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மததென்று தாமிருக்க தான்
xxx
38.எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்
காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தேதான்
xxx
39.நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாடியரைக் கூடிப்
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளை யிற் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
xxx
40.பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கிப்
பரவையார் உடலை மாற்ற
ஏவலராகி இரவெலாம் உழன்ற
இறைவனே ஏகநாயகனே
–சுபம்-