அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28 (Post No. 3554)

Written by S NAGARAJAN

 

Date: 18 January 2017

 

Time uploaded in London:-  6-34 am

 

 

Post No.3554

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 28

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 95. வசந்த காலம் வந்தது. வின்ய பள்ளியை மேம்படுத்துவதற்காக தர்மா மாஸ்டர் சி ஷோவை தலைமை ஆசிரியராக இருக்குமாறு ஸு யுன் கேட்டுக் கொண்டார்.

இரண்டாம் மாதத்தில் ஒரு நாள்  மாலை ஸு யுன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது ஆறாம் குலபதி அவர் முன் தோன்றினார். அது நிச்சயமாக கனவு இல்லை. “நீ போகும் காலம் வந்து விட்டது” என்று அவர் தெளிவாகக் கூறினார். ஆறாம் குலபதி என்பவர் ஹூய் நெங் என்ற பெயரைக் கோண்டவர். (அவர் வாழ்ந்த காலம் கி.பி.638-713) அவரால் தான் மனம் பற்றிய புதிய மார்க்கம் சீனாவில் பரவியது.

அடுத்த நாள் ஸு யுன் இதை தன் சிஷ்யரான குவன் பென்னிடம் குறிப்பிட்டு, “ஒரு வேளை நான் பூமியிலிருந்து போக வேண்டிய காலம் வந்து விட்டதோ என்னவோ?” என்றார்.

 

குவான் பென் தன் மாஸ்டரான் ஸு யுன்னுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

நான்காம் மாதத்தில் திரும்பவும் அதே தோற்றம்! ஆறாம் குல்பதி மூன்று முறை ஸு யுன்னை திரும்பிப் போகும்படி வற்புறுத்தினார்.

மறுநாள் குவாங்டாங் மடாலயத்திலிருந்து தந்தி ஒன்று வந்தது அங்குள்ள ஆறாம் குலபதியின் ம்டாலயப் பொறுப்பை ஏற்க முன் வருமாறு ஸு யுன்னுக்கு அழைப்பு அந்த் தந்தியின் மூலம் வந்திருந்தது.

அந்த ம்டாலயம் மிகவும் சிதிலமடைந்திருதது. ஸு யுன் அங்கு கிளம்ப முடிவு செய்து புறப்பட்டார்.

 

1933 நவம்பர் முதல் ஆரம்பித்த புனருத்தாரண பணி 1934 அக்டோபரில் முடிந்தது. அங்கு தர்ம சூத்ரங்களை ஸு யுன் விளக்க ஆரம்பித்தார்.

காண்டன் மற்றும் ஷோவாகுவான் நகரத்தைச் சேர்ந்த பெரும் அதிகாரிகளும் அவர்கள் குடும்பத்தினரும் திரள் திரளாக வந்தனர். அவர்கள் அனைவரும் ஸு யுன்னின் சிஷ்யர்களாக ஆயினர்.

பதினொன்றாம் மாதம் 17ஆம் நாள் மாலை விளக்கவுரை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு புலி அங்கு வந்தது. அனைவரும் பயந்து நடுநடுங்கினர். ஆனால் ஸு யுன்னோ தொடர்ந்து விளக்கவுரையை புலிக்கும் கூறலானார்.அகதி சூத்ரத்தைக் கேட்ட புலி சாதுவாக திரும்பிச் சென்றது.

 

 

1934ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் நாள் திரளான் அதிகாரிகள், சிஷ்யர்களுடன்  ஸு யுன்  காவோஸி என்ற இடம் நோக்கிச் சென்றார். அங்கு குலபதியின் பிறந்த தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஸு யுன் தர்ம சூத்ரங்களைச் சுருக்கமாகப் பாடினார்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 96. வ்சந்த காலத்தின் போது அதுவரை நல்ல ஆதரவு நல்கி வந்த ஜெனரல் லி ஹான் – யுன் கிழக்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

 

ஹாங்காங்கில் உள்ள டோங்குஹா மருத்துவமனைக் குழுமம் ஸு யுன்னை உடனே வருமாறு அழைப்பு விடுத்தது. நீரிலும் நிலத்திலும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய சடங்குக்ளைச் செய்ய வேண்டும் என்பது அங்குள்ளோரின் விருப்பம்.

இதற்கென அங்குள்ள டாங் லியான் மற்றும் ஜூ யுவான் ஆலயங்களில் ஒரு விசேஷ பீடம் நிறுவப்பட்டது.  இந்த சடங்குகள்  முடிந்த பின்னர் நேராக  கு ஷான் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு தனது ராஜிநாமாவைச் ச்மர்ப்பித்தார்.

பிறகு நான் ஹுவா மடாலயம் திரும்பிய ஸு யுன் ஆறாம் குலபதியின் பிரதான் ஹாலைப் புதுப்பித்தார். அவலோகிதேஸ்வரருக்கு அங்கு ஒரு சந்ந்தியைப் பிரதிஷ்டை செய்தார்.

குளிர் காலத்தில் அங்கு பட்டுப்போயிருந்த மூன்று செடார் மரங்கள் திடீரென்று துளிர் விட்டு மீண்டும் தழைக்க ஆரம்பித்தன.

நெடுங்காலமாக வாடி இருந்த அவை இப்படி மலர்ச்சியுற்றதைத் தொடர்ந்து அங்கிருந்த அவைத் தலைவர் மாஸ்டர் குவான் பென் இந்த நிகழ்ச்சியை ஒரு பாடலாகப் பாடினார். அந்தக் கவிதையை உபாசகர் ஜென் ஸூ லூ ஒரு கல்வெட்டில் பொறித்து அங்கு நிறுவினார்.

ஸு யுன்னுக்கு இப்போது வயது 97. நான் ஹுவா மடாலய கட்டிடம் வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்ட பின்னர் படிப்படியாக முழுமை பெற்றது.

 

குடியரசுத் தலைவர் லின் ஷென், காபினட் மந்திரியான சூ ஷெங்,  ஜெனரல் சியாங் கே ஷேக் ஆகியோர் ஸு யுன்னைப் பார்க்க வருகை புரிந்தனர். லின்னும் சூ ஷெங்கும் பெரிய அளவில் நிதி உதவி அளித்தனர். சியாங் கே ஷேக்கோ காவோக்ஸி நீரோடையை தடம் மாற்றுவதற்காக தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய ஊதியத்தைத் தர முன் வந்தார்.

பழைய காலத்தில் காவோக்ஸ் நீரோடை ம்டாலயத்திலிருந்து சுமார் 1400 அடி தள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கு ஏராளமான புதர்களும் பாறைகளும் வரவே அது பாதை மாறி மடாலயம் நோக்கிப் பாய ஆரம்பித்தது. பழைய தடத்திற்கு அதை  மாற்ற 3000 தொழிலாளிகள் தேவையாக இருந்தது.

அந்தப் பணி தொடங்க இருந்த நாள் நெருங்கியது.

 

ஏழாம் மாதம் இருபதாம் நாளன்று மாலை திடீரென இடி ஒலி கேட்டது, அப்போது ஆரம்பிதத் இடியோசை இரவு முழுவதும் தொடர்ந்தது. தொடர்ந்து காவோக்ஸி நதியில் பெருவெள்ளம் பொங்கியது. ஆனால் என்ன ஆச்சரியம், அந்த வெள்ளப் பெருக்கு காவோக்ஸியின் பழைய தடத்தைப் புதுப்பித்து அதன் வழியாகவே நீர்ப் பெருக்கு செல்ல ஆரம்பித்தது. எந்த ஒரு மாபெரும் பணி தொடங்க இருந்ததோ அது சில மணி நேரங்களுக்குள் தானாகவே முடிந்து விட்டது!

இந்த அதிசயத்துடன் வருடம் முடிவுக்கு வந்தது.

தொடரும்

*********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: