Written by London swaminathan
Date: 25 January 2017
Time uploaded in London:- 8-43 am
Post No.3575
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
இவைகளில் சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்க தேவர். அதில் ஒரு பாடலில் அவர் நாட்டில் அமிர்தம் எது, காட்டில் அமிர்தம் எது என்று வரிசைப் படுத்துகிறார். அதற்கு உரை எழுதிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்ர்கினியர் (மதுரை நகர பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பனன்) நமக்கு அரிய பெரிய தகவல்களை அளிக்கிறார்.
அமிர்தம் என்பது சம்ஸ்கிருதச் சொல்; சங்க இலக்கியத்தில் மூன்றுவித ஸ்பெல்லிங் SPELLING உடன் இச்சொல்லைப் பயின்றுள்ளனர்.
இனி சீவக சிந்தாமணியின் அற்புதப்பாடலைக் காண்போம்:
வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற் |
பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென் |
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங் |
கிறைவனுந் தமர்களைப் பணிப்ப |
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து |
நல்வரை யமிர்தமு மல்லாக் |
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக் |
கண்ணகன் புறவெதிர் கொண்டார். |
பாடல் 2110-ன் பொருள்
அந்நாட்டு மன்னன் உத்த்ரவுக்கு இணங்க சீவகனை எப்படி வரவேற்றனர் என்பதில் நாட்டில் கிடைக்கும், கடலில் கிடைக்கும், காட்டில் கிடைக்கும், மலையில் கிடைக்கும் ஐந்து ஐந்து வகையான பொருள்களுடன் சீவகனை வரவேற்றனர்.
அவை யாவை:
நாட்டில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்: நெல், பயறு, இளநீர்,கரும்பு, வாழை
கடலில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
முத்து, பவளம், சங்கு, உப்பு, ஓர்க்கோலை (ஆம்பர் எனப்படும் திமிங்கிலக் கழிவுப் பொருள்)
மலையில் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
தக்கோலம் (வால் மிளகு அல்லது சிறுநாவல் பூ), தீம்பூ (வாசனைத் திரவியங்களில் ஒன்று அல்லது கிராம்பு) ஏலம், கற்பூரம், ஜாதிக்காய்
காட்டில் கிடைக்கும் கிடைக்கும் ஐந்து அமிர்தங்கள்
தேன், அரக்கு, சந்தனம் ,மயில் பீலி, நாவி (கஸ்தூரி அல்லது புனுகு)
இதோ பாடல் வடிவில்:–
நாட்டிலமிர்து :’செந்நெல் சிறுபயறு செவ்விள நீர், செழுங்
கன்னல் கதலியோ டைந்து’
கடலமிர்து :’ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
நீர்ப்படும் உப்பினோ டைந்து’
வரையமிர்து :’தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
கர்ப்பூரம் சாதியோ டைந்து’
காட்டிலமிர்து :’அரக்கிறால் செந்தேன் அணிமயிற் பீலி
திருத்தகு நாவியோ டைந்து’
-subham-