கைதிகள் விடுதலை: காளிதாசன் சொன்னதை ஒபாமா செய்தார்! (Post No.3612)

Written by London swaminathan

 

Date: 6 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  21-14

 

Post No. 3612

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இரண்டாராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் சொன்னதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் செய்தது வியப்பூட்டும் ஒற்றுமையாகும்.

 

சிறைக் கைதிகளைச் சந்தித்து உணவளித்து ஆறுதல் கூறிய மணிமேகலை பற்றி சீழ்த்தலைச் சாத்தனார் பாடியதை முன்னரே ஒரு கட்டுரையில் கொடுத்தேன். சிறைச் சாலைகளில் சமூக சேவை செய்த முதல் பெண், உலகில் மணிமேகலைதான்! இதுபோல கைதிகள் விடுதலையிலும் முதன்மை வகித்தது இந்தியாதான்!

 

இந்தியாவில் மன்னர்களுக்கு குழந்தை பிறந்தாலோ இளவரசன் இளவரசிக்கு கல்யாணம் நடந்தாலோ, இளவரசன் பட்டம் ஏற்றாலோ அன்று நாடே கொண்டாடும். இதில் வியப்பல்ல. ஆனால் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர். இதுகூட உலகில் சில நாடுகளில் இருக்கலாம். ஆனால் இந்து இந்தியாவில் பறவைகளைக்கூட கூட்டிலிருந்து திறந்து  விட்டுவிடுவார்கள். குதிரை, வண்டி மாடு ஆகியவற் றை அன்றொரு நாள் வேலை வாங்காமல் சுதந்திரமாக விட்டுவிடுவார்கள் காக்கை குருவி எங்கள் ஜாதி என்பதையும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதையும் இந்து இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.

 

அமெரிக்க ஜானதிபதி பராக் ஒபாமா, பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் சுமார் 1000 கைதிகளை விடுதலை செய்தார் அல்லது பலருடைய தண்டனையப் பாதியாகக் குறைத்தார். இதிலும் இந்தியாவை யாரும் மிஞ்ச முடியாது. மரணதண்டனை கூட ரத்து செய்ப்பட்டதாக காளிதாசனின் ரகு வம்ச காவியம் கூறுகிறது.

 

இதோ ரகுவம்ச ஸ்லோகங்கள்:

 

அதிதி, தான் பட்டபிஷேகம் செய்துகொண்ட நாளில் சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளித்தான். மரண தண்டனையை ரத்து செய்தான். பாரம் சுமக்கும் பிராணிகளுக்கு பாரம் சுமப்பதிலிருந்து விடுவித்தான். பசுக்களிடம் அன்று பால் கறக் காமல் சுதந்திரமாக விடும்படி ஆணையிட்டான். (17-19)

 

கூண்டுகளில் அடைக்கப்பட்ட வளர்ப்புப் பறவைகளான கிளி முதலியவற்றை விடுதலை செய்ய உத்தரவிட்டான். கூண்டுக் கிளிகளுக்கே இவ்வளவு உபசரிப்பு என்றால் மற்றதை விளம்பவும் வேண்டுமோ! (17-20)

 

 

கைதிகள் பற்றி மனு

 

உலகின் பழமையான சட்டப் புத்தகம் மனுதர்ம சாத்திரம். மனுவின் பெயர் ரிக் வேதத்திலேயே வருகிறது. மனுவும் கைதிகள் பற்றி மூன்று ஸ்லோககங்கள் எழுதியுள்ளார்..

கைதிகள் அடைக்கப்படும் சிறைச் சாலைகள எல்லோரும் காணும்பாடியாக ராஜ பாட்டையில் வைக்கவேண்டும் என்பது மனுவின் சிபாரிசு. அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைய எல்லோரும் கண்டால் குற்றங்கள் குறையும் அல்லவா? (9-288)

 

சிரார்த்தம் முதலிய நீத்தார் கடன்களுக்கு கைதிகளை அழைக்கக்கூடாது என்பார்.(3-158)

கைகளில் விலங்கு பூட்டப்பட்ட ஆள் பரிமாறும் உணவையும், அவனுக்காக சமைக்கப்பட்ட உணவையும் பிராமணர்கள் சாப்பிடக்கூடாது (4-210)

 

உலகின் முதல் பொருளாதார நூல் எழுதிய கௌடில்யரும் சிறைக் கைதிகள் விடுதலை செய்ய்ப்பட வேண்டிய முக்கிய நாட்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னருக்கு குழந்தை பிறந்தாலோ, பட்டாபிஷேகம் நடந்தாலோ  சிறைக்  கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பார்.

 

 முந்தைய கட்டுரை
தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை
(Posted on March 23, 2013)

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: