எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638)

Written by London swaminathan

 

Date: 15 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 8-50 am

 

Post No. 3638

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்துக்கு மிஸ்ர தேசம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். பாரதியாரும் தனது கவிதையில் எகிப்து தேசத்தை இவ்வாறு குறிப்பிடுவார்.

 

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடுபாரதியார் பாடல்

 

மிச்ரம் என்றால் கலப்பு என்று பொருள்; அங்கு பலதேச மக்களும் பலமொழி பேசும் மக்களும் குடியேறியதால் இப்படிப் பெயர். சம்ஸ்கிருத நூல்களில் இப்படிப் பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பதை பிரபல எகிப்திய அறிஞர் கூறுவதைப் படித்தால் வியப்படைவோம்:-

 

எழுபது ஆண்டுக்காலம் எகிப்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட சர் ப்ளிண்டர்ஸ் பெற்றி (Sir Flinders Petrie) சொன்னார்:

 

“எகிப்து என்னும் நாடு எந்தப் புதிய நாகரீகத்தையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் மற்ற நாட்டவர்களின் எண்ணங்களுக்கு விளை நிலமாக இது விளங்கியது. பல நாட்டவரும் இங்கே அவரவர் யோஜனைகளை விதைத்தனர். பாரதியார் பாடலின்படி பார்த்தால் தமிழ்நாட்டவர்களின் பங்களிப்பும் அங்கே இருந்துள்ளது!

 

 

மிஸ்ர என்பதற்கு வேறு ஒரு பொருளும் உண்டு

மிஸ்ர, மிஸ்ரா என்பது பிராமணர்களின் ஒரு பிரிவு. இந்தப் பிரிவு பிராமணர்கள், வடநாட்டில், குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், நேபாளத்தில் அதிகம். ஆனால் எகிப்தின் பெயருக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

எகிப்தியர்களுடன் மிகவும் தொடர்புடைய பண்ட் PUNT என்னும் தேசம் பாண்டிய நாடாக இருக்கலாம் அவர்களுடன் தொடர்புடைய ஓபிர் OPHIR என்னும் பிரதேசம் சோபிரSOPHORA என்னும் மேலைக் கடற்கரை நகருடனோ அல்லது புராணங்கள் குறிப்பிடும் ஆபீர ABHIRA தேசமாகவோ இருக்கலாம் என்று பல ஆராய்ச்சியளர்கள் குறிப்பிட்டு, எப்படியும் இவர்கள் கீழ் திசை நாட்டிலிருந்து (Eastern Origin) வந்தவர்களே என்று எழுதியுள்ளனர்.

 

எகிப்திய வரலாறு 5000 ஆண்டு வரலாறு ஆகும். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கடவுளர்களும், கலைகளும் தோன்றின. (Mixed= Misra) ஆயினும்  அதிகமாக மெசப்பொடோமிய செல்வாக்கு உடைய நாகரீகம் இது என்று பெற்றி கருதினார். அந்த நாகரீகத்தின் ஆதிகர்த்தாக்கள ஆப்பிரிக்க நாட்டவர் இல்லை என்றும் கருதினார். அவருடைய கருத்துப் படி எழுத்து, விவசாயம் ஆகியன ஓரிடத்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவி இருக்க வேண்டும் என்பதாகும்.

அண்மைக் கால ஆராய்ச்சிகள், எகிப்திய நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகின்றது. ஆகையால் ஆரம்ப கால எகிப்தியர்கள் நைல் நதிக்கரையில் மேய்ச்சலில் ஈடுபட்டவர்களே என்பது அவர்களுடைய கருத்து.

 

எழுத்து என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மெசபொடோமியாவுக்கும் எகிப்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. எகிப்தின் சித்திர எழுத்துக்கள் (Hieroglyphs) முற்றிலும் வேறுபட்டவை.

 

 

 

இன்னொரு புதிர்: எகிப்தின் ஆதி அரசர்கள் யார்?

முதல் அரசர் பெயர் நர்மேர் Narmer ( நர+ மேரு) என்று இதுவரை கருதப்பட்டது. ஆனாம் அபிதோஸ் (Abydos) கல்லறையில் , அவருக்கும் முந்தைய அரசர் பெயர்கள் இருக்கக்கூடும். மெனெஸ் (மனு) Menes என்பவர் முதல் மன்னர் என்று அபிதோஸ் கல்வெட்டுகள் சொல்கின்றன. இன்னும் சிலர் நர்மேர், மனஸ் என்பன ஒரே ஆள்தான் என்றும் கருதுவர்.

 

மனிதர்கள் பலி- நர பலி

 

பூர்வீகக் கல்லறைகளில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அரண்மனையின் உயர் அதிகாரிகள் மன்னனுடன் புதைக்கபட்டனர்

 

இன்னும் ஒரு புதிர் படகுப் புதையல்.

 

மன்னர்களுடன் பெரிய படகுகளும் புதைக்கப்பட்டன. ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. மேல் திசைப் பாலைவனப் பகுதியில் மன்னர் கல்லறைகளுக்கு அருகில் படகுகள் புதைக்கப்பட்டன.

 

 

இந்தியர்கள் தொடர்பு:

மிஸ்ர (கலப்பினம்) என்ற பெயரை நமது நூல்கள் மிகப் பழங்காலத்திலேயே சொல்லி இருப்பதால் வேறு எவரையும் விட நாமே எகிப்தை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

 

மேலும் நர மேரு, மனு(ஸ்) என்பன இந்திய சம்ஸ்கிருத பெயர்களாக உள்ளன.

 

எகிப்திய வரலாறு

 

எகிப்திய வரலாற்றுக் காலத்தைப் பொதுவாக ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்:-

 

ஆரம்ப கால ராஜ வம்சம் Early Dynastic (முதல் இரண்டு வம்சங்கள்)

கி.மு.3000 (BCE)

 

…………….

 

பழைய ராஜ வம்சம் Old Kingdom (மூன்று முதல் எட்டு வரையான ராஜ வம்சம்)

கி.மு.2600

 

 

முதல் இடைக்காலம் First Intermediate Period ( 9 முதல் 11 வரையான ராஜக்கள்)

 

……………………

 

மத்திய கால ராஜ வம்சங்கள் Middle Kingdom

கி.மு.2400

 

இரண்டாவது இடைக்காலம் Second Intermediate Period (15 முதம் 17 வரையான ராஜ வம்சம்)

 

……………………..

 

புதிய ராஜ வம்சம் New Kingdom

கி.மு.1550

 

மூன்றாவது இடைக்கால ராஜாக்கள் Third Intermediate Period (21 முதல் 24 வரை வம்சங்கள்)

 

…………………………..

 

பிற்கால ராஜ வம்சங்கள் Late Period

கி.மு.715

 

கிரேக்க- ரோமானிய அரசுகள் Greco-Roman Period

 

முடிவு கி.பி.395 (CE)

 

……………………

 

மேலும் பல அதிசயங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. Shyne R

     /  February 16, 2017

    Hello sir

    I am a subscriber of your page.
    I have read the above article and I suppose miziram may mean Mizoram in
    North East India.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: