கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா? (Post No.3652)

 

 

 

Written by S NAGARAJAN

 

Date: 20 February 2017

 

Time uploaded in London:-  5-48 am

 

 

Post No.3652

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

10-2-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

.நாகராஜன்

“கொஞ்சமாக இருக்கும் தத்துவ அறிவு நம்மை நாத்திகத்தின் பக்கம் திருப்புவது உண்மை தான்! ஆனால் ஆழ்ந்த தத்துவ அறிவு நம்மை  மதத்தின் பக்கம் திருப்பும்” சர் பிரான்ஸிஸ் பேகன்

 

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

இது பற்றி அடிக்கடி பிரம்மாண்டமான மாநாடுகள் நடப்பது வ்ழக்க்மாகி வ்ருகிறது. உல்கெங்கிலுமிருந்து வரும் விஞ்ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் காரசாரமாக விவாதித்து கலைவது வழக்கம்.

மிக பிரம்மாண்டமான் ஆய்வு ஒன்றை நடத்த ஆக்ஸ்போர்ட் பல்க்லைக் கழகம் தீர்மானித்தது. இதற்கென ஒதுக்கப்பட்ட தொகை பிரிட்டிஷ் பவுண்டில் 19 லட்சம். (ஒரு பவுண்டின் மதிப்பு 85 இந்திய ரூபாய்)

உலகெங்கிலுமுள்ள 20 நாடுகளில் உள்ள 53 பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வில் மூன்று ஆண்டுகள் ஈடுபட்டன. தத்துவம், உளவியல், மானுடவியல் உள்ளிட்ட விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் உள்ளோர் இதில் ஈடுபட்டனர்.

தெய்வீகத்தில் நம்பிக்கை இருக்கிறதா, மறுபிறப்பில் நம்பிக்கை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை காணுவதே ஆய்வின் நோக்கம். ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள் ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடம் கேட்ட போது அவர்களுக்கு சூப்பர் ஹ்யூமன் செயல்களை நம்புவது சுலபமாக இருப்பதைக் கண்டனர்.

சீனாவில் நடந்த ஆய்வோ பல்வேறு கலாசாரம் கொண்டவர்களும் கூட ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதர்களுக்கு  மறுபிறப்பு என்பது உண்டு என்பதையும்  நம்புவதைத் தெரிவித்தது.

ஆய்வின் இணை டைரக்டரான பேராசிரியர் ரோஜர் ட்ரிக் (Roger Trigg) தங்களது ஆய்வு ஆன்மீகம் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் கோல்ஃப் விளையாடுவதற்கு பதிலாக சர்ச்சுக்கு செல்லும் சமாசாரம் இல்லை என்பதைத் தெரிவிக்கிறது என்று கூறுகிறார்.

 

வெவ்வேறு சமூகங்களிலும் கூட கடவுள் நம்பிக்கை பொதுவாக நிலவுவதை தங்கள் ஆய்வு அதிகாரபூர்வமாக அறிந்து விட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். இதனால்  மதத்தை நசுக்குவது என்பது முடியாத காரியம் என்பது ஆய்வின்  முத்தாய்ப்பான முடிவு.

இந்த ஆய்வுத் திட்டத்தின் மானுடவியல் மற்றும் மனம் பற்றிய பிரிவின் டைரக்டரான டாக்டர் ஜஸ்டின் பாரட்,“உலகெங்குமுள்ள வெவ்வேறு சமூகங்கள் இணக்கமாக இணைய மத நம்பிக்கை உதவுகிறது” என்று கூறுகிறார்.

ஆனால் பெரும் நகரங்களில் இந்தக் கடவுள் நம்பிக்கை சற்று குறைவாகத் தான் இருக்கிறது என்கிறார் அவர்.

இன்னொரு ஆய்வு 51 சதவிகிதம் பேர் கடவுள் உண்டு என்று திடமாகக் கூறுவதையும் 17 பேர் தங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று கூறுவதையும் 18 சதவிகிதம் பேர் நிச்ச்யம் கடவுள் இல்லை என்று கூறுவதையும் தெரிவிக்கிறது.

கடவுள் உண்டு என்பதை இந்தோனேஷிய மக்களில் 93 சதவிகிதம் பேரும் துருக்கியில் 91 சதவிகிதம் பேரும் நம்புகின்றனர்.

பல க்டவுளர் உண்டு என்பது இந்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.பிரான்ஸ், ஸ்வீடன்,  பெல்ஜியம், பிரிட்டன், ஜப்பான் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடவுள் நம்பிக்கை சற்று குறைந்து வருகிறது.இந்த நாடுகளில் 33 சதவிகிதம் பேர் கடவுளை நம்ப மறுக்கின்றனர்.

 

 

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், ‘மர்மமான ஒன்றைப் பற்றி அனுபவம் பெறுவதே வாழ்க்கையின் அழகிய விஷயமாகத் திகழ்கிறது’ (The most beautiful thing we can experience is the Mysterious) என்கிறார். வாழ்ந்து வரும் விஞ்ஞானியான் ஸ்டீபன் ஹாகிங் கடவுளே இல்லை என்கிறார். டார்வினோ இது பற்றி உறுதியாகத் தன்னால் எதையும் சொல்ல  முடியவில்லை என்கிறார்.

வாழ்ந்து வரும் பிரபல விஞ்ஞானியான ஃப்ரான்ஸிஸ் காலின்ஸ் கடவுளை கதீட்ரலிலும் காண்லாம்; லாபரட்டரியிலும் காணலாம் என்று  முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

இது ஒருபுறமிருக்க விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அதிகமாக அதிகமாக விஞ்ஞானிகளே பல விஷயங்களையும் பற்றி ஆச்சரியபப்ட ஆரம்பிக்கின்றனர்.

உடலைப் பற்றிய ஆய்வு முக்கியமான ஒன்று. மனித உடலானது வலிமை வாய்ந்த அதிர்வுடன் கூடிய ஒரு டிரில்லியன் (டிரில்லியன் என்பது ஒன்றுக்கு பின்னால் 12 பூஜ்யங்கள் கொண்ட மிகப் பெரிய எண்ணிக்கை) அணுக்களால் ஆகியுள்ளது.

இந்தத் தொகை அதிக ஜனத்தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு லட்சம் நாடுகளின் ஜனத்தொகை ஆகும்! அல்லது உலக ஜனத்தொகை முழுவதும் எடுத்துக் கொண்டால் அது போல 15000 மடங்கு அதாவது பதினைந்தாயிரம் உலகங்களின் ஜனத்தொகையாகும்.

அதாவது ஒரு மனித உடலில் மட்டும் உள்ள அணுக்களைப் பற்றியே நாம் சொல்கிறோம். உலகிலுள்ள 700 கோடி மக்களின் அணுக்களைப் பற்றிச் சிறிது எண்ணிப் பார்த்தால் தலையைச் சுற்ற வைக்கும் பிரம்மாண்டமான எண் வருகிறது!

உடலில் தான் எத்தனை பிரிவுகள், எத்தனை இயக்கங்கள்! இன்னும் மூளை, மனம், பிரக்ஞை அல்லது உணர்வு போன்றவை பற்றியெல்லாம் நாம் அறிவது மிக மிகக் கொஞ்சமே! இவற்றைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ! விஞ்ஞானிகள் பிரமிக்கின்றன்ர்!

கடைசியில் ஒரு ஜோக்கைப் பார்க்க்லாம்:

கடவுள் இனி தேவை இல்லை என்று தீர்மானித்த விஞ்ஞானிகளின் குழு கடவுளை வரவழைத்துத் தங்கள்  முடிவைத் தீர்க்கமாக்த் தெரிவித்தனர்.

“கடவுளே! இனி நாங்களே எல்லாவற்றையும் படைத்து விடுவோம். நீங்கள் தேவையில்லை” என்றனர் அவர்கள்.

கடவுள் ஆச்சரியத்துடன், “அப்படியா”! என்றார்.

“ஆமாம், இதோ இந்த மண்ணை எடுத்துக் கொண்டு எங்கள் படைப்பைப் படைத்துக் காண்பிக்கிறோம் பாருங்கள்” என்ற விஞ்ஞானிகள் ஒரு பிடி மண்ணை எடுத்தனர்.

“ஒரு நிமிடம்” என்ற கடவுள், “இந்த மண் வேண்டாம்! நீங்கள் படைத்த மண்ணை எடுத்துக் கொண்டு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்” என்றார். ஆக ஐன்ஸ்டீன் சொன்னது போல நமக்குத் தெரியாத ஒரு மர்மத்தில் அழகிய அனுபவம் மிளிர்வது உண்மையே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

எட்வர்ட் ஃப்ராங்க்லேண்ட் (Edward Frankland தோற்றம் 18-1-1925 ம்றைவு  9-8-1899) பிரிட்டனைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி. மருத்துவராக விரும்பியவர் ஆறு ஆண்டுகள் படிப்பை முடித்த போது ஒரு நண்பர் இரசாயன இயலைப் படிக்கத் தூண்டினார்.  28ஆம் வயதில் பெரிய விற்பன்னராக ஆனார். காலராவினால் மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கிலாந்தில் இறந்த போது மிகத் தீவிரமான் ஆராய்ச்சியால் தண்ணீர் தான் இந்த் வியாதிக்குக் காரணம் என்பதைக் கூறினார். லண்டனில் மட்டும் 20000 பேர் மரணம்டைந்தனர். கழிவுநீரும் சுத்த நீரும் கலப்பதால் வியாதிகள் உருவாவதால் சுத்தமான நீரை விநியோகிக்க வேண்டும் என்றார் அவர். முதன் முதலாக சுத்த நீர் வேண்டும் என்பதைச் சொல்லியதோடு அது ஏன் வேண்டும் என்பதையும் அவர் நிரூபித்தார்.

ஏழைகளின் வியாதி என்று பெயரிடப்பட்ட காலராவை ஒழிக்க அவரது ஆய்வு பெரிதும் உதவியது. விக்டோரியா மஹாராணியார் அவரது அறிவுரையை ஏற்று முதலில் லண்டனில் பருகும் நீரை விநியோகிக்க உத்தரவிட்டார். உலகில் இப்போது குழாய் வழியே நல்ல நீர் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் ப்ராங்க்லேண்டே தான்!

****

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: