Written by S NAGARAJAN
Date: 23 February 2017
Time uploaded in London:- 5-58 am
Post No.3661
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
10-2-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன ஜென்மத்தில் எந்த நடிகராக இருந்தார்?
ச.நாகராஜன்
அதிர்ஷடவசமாக எதிர்பாராத நல்ல காரியங்கள் நம்க்கு நடக்கும் போது பூரித்துப் போகிறோம். ஆனால் தொடர்ந்து கஷ்டங்கள் அடுத்தடுத்து வந்தால் எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது என்று வ்ருத்தமும் மனச்சோர்வும் அடைகிறோம்.
இதற்கெல்லாம் கர்ம பலனே காரணம் என்கினறன நமது அற நூல்கள்.
மேலை நாட்டிலும் கூட இப்போது கர்ம பலன் கொள்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அங்கு கடுமையான வியாதியால் அவஸ்தைப் படுவோரும், கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படும் போது மனம் வருந்துவோரும் பாஸ்ட் லைஃப் ரிக்ரெஷன் (Past Life Regression) எனப்படும் சென்ற ஜென்ம நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்; அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இதைத் தெர்ந்து கொள்வதற்காக. இதற்கென உள்ள ஹிப்நாடிஸ மையங்களில் உள்ள சைக்கிக் நிபுணர்களிடம் செல்கின்றனர் அவர்கள்.
சென்ற ஜென்மத்தில் என்ன செய்ததால் இப்படித் தமக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் ஆழ் உறக்க நிலையில் கூறி விடுகின்றனர்.
நமது முந்தைய ஜென்ம நினைவு விமானத்தின் ப்ளாக் பாக்ஸ் போல நம்மிடமே இருக்கிறது. அதை ரீ-வைண்ட் செய்து பார்க்க வேண்டியது தான் பாக்கி என்கின்றனர் நிபுணர்கள்.
இதனால் கணவன், மனைவி உறவு சீராகிறது. ஆஸ்த்மா போன்ற வியாதிகளுக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
உலகெங்குமுள்ள மக்களில் ஏராளமானோருக்கு பூர்வ ஜென்ம நம்பிக்கை உண்டு. மாவீரன் நெப்போலிய்ன தன்னை ரோம சாம்ராஜ்ய சக்ரவர்த்தியான சார்லிமக்னே என்று நம்பினார். ரோமானிய நாகரிகத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அதையெல்லாம் தன் வாழ்வில் அவர் அமைத்துக் கொண்டார். தனது அரண்மனையைக் கூட அவர் ரோமானிய நாகரிகப் படி ‘செட்-அப்’ செய்து கொண்டார்.
அமெரிக்க இராணுவ தளபதியான பேட்டனுக்கு முன் ஜென்மத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. தான் பலமுறை கிரேக்க போர்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் ந்மபினார். அவர் ஒரு கவிஞரும் கூட. Through a Glass Darkly என்ற கவிதையில் அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் விவரங்கள் சுவையானவை.
பிரபல ஹாலிவுட் நடிக்ரான ஸில்வஸ்டர் ஸ்டெல்லோனுக்கும் பூர்வ ஜென்ம நம்பிக்கை உண்டு. அவர் தனது முந்தைய நான்கு பிறவிகள் தனக்குத் தெரியும் என்கிறார். சென்ற பிறவிகளில் ஒன்றில் பிரெஞ்சு புரட்சியின் போது அவரது தலை துண்டிக்கப்பட்டதாம்.
பிரபல ஆக் ஷன் ஹீரோவான ஸ்டீவன் சீகல் தான் புத்த மதத்தைச் சேர்ந்த லாமாவாக போன ஜென்மத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
அது சரி, ந்மது பாலிவுட்டிற்கு வருவோம், அமிதாப் பச்சன் எட்வின் பூத் என்ற நடிகராக 1860இல் விக்டோரியன் காலத்தில் இருந்தாராம், இதை முந்தைய ஜென்மங்களைக் கண்டுபிடித்துக் கூறும் டாக்டர் வால்டர் செம்கிவ் கூறுகிறார். அமிதாப் பச்சனின் புகழோங்கிய காலத்தில் அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் பிரபல் நடிகை ரேகா. அவர் சென்ற ஜென்மத்தில் அவரது முதல் மனைவியாக மேரி டெவ்லின் என்ற பெயருடன் இருந்தாராம். இப்போது அமிதாப் பச்சனின் மனைவியாக் உள்ள ஜயா பச்சன் அப்போது அவருக்கு இரண்டாவது மனைவியாக மேரி மக்விக்கர்ஸ் என்ற பெயருடன் இருந்தாராம்.
டாக்டர் வால்ட்ர் செம்கிவ் ‘பார்ன் அகெய்ன்’ (Born Again) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் பிரப்லமாக உள்ள இன்னொரு முந்தைய ஜென்ம கண்டுபிடிப்பு நிபுணரின் பெயர் ப்ரையன் லெஸ்லி வெய்ஸ் (Brian Leslie Weiss). இவர் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் ஒரு நாள் அவரிடம் ஹிப்நாடிஸ சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியான காத்ரீன் என்பவர் அவரிடம் தனது பழைய ஜென்ம நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தார். முதலில் அதை நம்பாத வெய்ஸ் எல்லா ரிகார்டுகளையும் தானே சென்று சரி பார்த்த போது காத்ரீன் சொன்ன அனைத்துமே உண்மை என்பதைக் க்ண்டு ஆச்சரியப்பட்டார். விளைவு, தன் பாதையை மாற்றிக் கொண்டு முழுநேர பாஸ்ட் லைஃப் ரிக்ரெஷன் நிபுணராக் மாறி விட்டார். சுமார் 4000 பேர்களுக்கு முந்தைய ஜென்மத்தைக் கண்டுபிடித்து இந்தப் பிறவியில் உரிய சிகிச்சை அளித்ததாக அவர் கூறுகிறார். பிரபலமான அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ ஏராளம். 2012இல் வெளியான ‘மிராக்கிள்ஸ் ஹாப்பன்’ என்ற அவரது நூலும் ‘தி ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் ஹீலிங் பவர் ஆஃப் பாஸ்ட் லைஃப் மெமரீஸ்’ என்ற அவரது இன்னொரு நூலும் பிரபலமானவை!
அட, நமது வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட ஊர்களில் நாடி ஜோதிடத்தில் இல்லாத விஷயமா என்ன, என்று தமிழர்களாகிய நாம் கேட்டால அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நிஜமான நல்ல நாடிஜோதிடர் ஒருவரிடம் சென்று ந்ம் கையைக் காண்பித்தால் உரிய ரேகையின் பெயரைச் சொல்லி அத்ற்கான சுவடியை அவர் எடுக்கிறார்; படிக்கிறார். அதில் முதல் பகுதியே நமது முந்தைய ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பது பற்றி விரிவாகச் சொல்லப்படும் பகுதி தான்!
பின்னரே இந்தப் பிறவியில் என்ன தேதி என்ன நட்சத்திரத்தில் பிறந்தோம், ஜாதக அமைப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் எதிர்காலம் பற்றியும் வரும். நம்மை முன் பின் பார்த்திராத ஒரு நபர் நமது நட்சத்திரத்தையும் பிறந்த தேதியையும் கூறுவது ஆச்சரியப்படவைக்கும் ஒரு விஷயம் தானே! ஆனால் உண்மையான நாடி ஜோதிட சுவடிகளை வைத்திருப்போர் மட்டுமே துல்லியமாகக் கூற முடியும்!
தமிழ் நாட்டில் பலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நாடி ஜோதிடத்தின் ஒரு பகுதிக்கு இப்போது மேலை உலகத்தில் மவுசு கூடி விட்டது. அதை ஹிப்நாடிஸ்த்தின் வாயிலாக அவர்கள் சொல்கின்றனர்.
டெல்லி, பம்பாய், பங்களூர் போன்ற நகரங்களில் சென்ற ஜென்மங்களை அறிந்து சொல்லும் ஹிப்நாடிஸ மையங்கள் இப்போது பெருகி வருகின்றன.
என்ன ஆவல் மனதில் ஊறுகிறதா,, போன ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்று தெரிந்து கொள்ளத்தான்!
********