Picture sent by Dr Devaraj: Buddha statue in Dambulla, Sri Lanka
Written by S NAGARAJAN
Date: 27 February 2017
Time uploaded in London:- 4-41 am
Post No.3673
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 30
by ச.நாகராஜன்
104ஆம் வயது (1943-1944)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 104. முதல் மாதத்தில் நாட்டின் நலனுக்காக சடங்குகளை ஸு யுன் ஆரம்பித்தார். அது 26ஆம் நாளன்று முடிவடைந்தது. ஜனாதிபதி லின் ஷென், ஜெனரல் சியாங் கே ஷேக், மந்திரி டால், ஜெனரல் ஹோ மற்றும் முக்கிய அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ஸு யுன்னை சைவ விருந்துக்கு அழைத்தனர். சியாங் கே ஷேக் தர்மம் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். பொருளியல் வாதம் என்றால் என்ன, இலட்சிய வாதம் என்றால் என்ன என்பது பற்றியும் கிறிஸ்தவ மதம் பற்றியும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். அவருக்கு ஒரு கடிதம் மூலமாக விரிவான பதிலை ஸு யுன் அனுப்பினார்.
பிறகு ஸி யுன் மற்றும் ஹுவா யான் ஆலயங்களில் விரிவுரை ஆற்றிய பின்னர் ஸு யுன் நான் ஹூவா மடாலயம் திரும்பினார். இறந்த சீடர்களுக்காக அங்கு ஒரு ஸ்தூபத்தை எழுப்புவதற்காக பூமி தோண்டப்பட்ட போது அங்கு காலியாக இருந்த ச்வப்பெட்டிகள் காணப்பட்டன ஒவ்வொன்றும் 16 அடி நீளம் இருந்தது. எட்டு அங்குல சதுரத்தில் கறுப்பு ஓடுகள் வேறு கிடைத்தன. அதில் பல்வேறு பறவைகள், மிருகங்கள், ஜோதிட அடையாளங்கள் இருந்தன. ஆனால் தேதி ஒன்றும் பொறிக்கபப்டவில்லை.
ஆறாம் மாதம் வினய பள்ளி திறக்கப் பட்டது. அங்கு உள்ளூரில் இருந்த ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது. குளிர்காலத்தில் ஸ்தூபம் கட்டி முடிக்கப்பட்டது.
105ஆம் வயது (1944-1945)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 105. 1940ஆம் ஆண்டில் ஆறாம் வமிச அரசரின் மடாலயம் திருப்பிக் கட்டப்பட்டவுடன் பிக்ஷு ஃபு கோவுடன் க்விஜியாங்கிற்கு ஸு யுன் சென்றார். லிங் ஷு வின புராதன மடாலயத்தை அவர் தேடினார். ஆனால் அது காணப்படவில்லை. மவுண்ட் யுன் மென்னுக்கு வந்த போது அங்கிருந்த அடர்ந்த காட்டில் யுன் மென் பள்ளியை நிறுவிய சிதிலமடைந்து கிடந்த ஆலயத்தை அவ்ர் பார்த்தார்.
அருமையான் அந்தப் புனிதத் தலத்தின் இன்றைய நிலையைக் கண்டு ஸு யுன்னுக்கு கன்ணீஈ ததும்பியது. 1938 ஆம் ஆண்டிலிருந்து மிங் காங் என்ற துறவி தனியே அங்கு வாழ்ந்து வந்தார். அந்தப் பிரிவை நிறுவியவரின் நினைவைப் போற்றும் வ்கையில் பல்வேறு துன்பங்களையும் ஏற்று அவர் அங்கு வாழ்ந்தார். அந்த மடாலயம் உடனடியாகக் கட்டப்படாவிடில் அது முற்றிலுமாக அழிந்து படும்.
நான் ஹூவா மடாலயம் திரும்பினார் ஸு யுன். ஒரு நாள் சேர்மன் லி ஹான் யுன்னும் மார்ஷல் லி ஜி ஷென்னும் அவரைப் பார்க்க வந்த போது தான் பார்த்த காட்சியை ஸு யுன் அவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் தங்களது பயணத்தின் போது அங்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்தனர். உடனடியாக சங்கத்தைச் சேர்ந்த அனைவரையும் அவர்கள் அழைத்தனர். ஸு யுன்னிடம் அந்த ம்டாலயத்தை புனரமைக்கும் பணி வழங்கபப்ட்டது. நான் ஹுவாவுக்கு யுத்தம் வருவது நிச்ச்யம் என்ற நிலையில் ஸு யுன் ஆறாம் வமிச அரசர் மற்றும் மாஸ்டர் ஹான் ஷான் ஆகியோரின் உடல்களை இரகசியமாக யுன் மென்னுக்கு கொண்டு வந்தார் ஸு யுன்.
யுன் மென்னில் இடிந்து விழும் நிலையில் இருந்த ம்டாலயத்தைப் பார்த்த ஸு யுன் அங்கு ஒரு சிறிய அறையில் தங்கி புனித தலத்தை மீண்டும் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். குளிர் காலத்தில் நான் ஹுவா திரும்பிய அவர் நீரிலும் நிலத்திலும் இறந்தோரின் ஆன்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினார்.
106ஆம் வயது (1945-1946)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 106. வசந்த காலத்திற்கும் கோடை காலத்திற்கும் இடையே வடக்கு குவாங் டாங் பகுதியை ஜப்பானிய படைகள் ஆக்கிரமித்தன. ரு யான் பகுதியில் இருந்த அகதிகள் யுன் மென்னிற்கு தப்பியோடினர். அங்கு அவர்களுக்கு அரிசிக் கஞ்சி யாம் மாவு உள்ளிட்டவை தரப்பட்டன. அந்த அகதிகளுள் தச்சர்கள், கொத்தனார்கள் கட்டிடக் கட்டுமானப் பணியார்கள் உள்ளிட்டோர் இருந்தனர். மடாலயத்தைப் புனரமைக்க அவர்கள் கூலி இன்றி தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர்.
கோடை காலத்தில் சீனத் துருப்புகள் வேறு ஒரு இடத்திற்கு விரைந்த போது கொள்ளைக்காரர்கள் அதை அவர்கள் பின் வாங்குவதாகப் புரிந்து கொண்டு அவர்களைத் தாக்கிப் பெருமளவில் ரேஷன் பொருள்களைக் கைப்பற்றினர்.
விரைந்து உதவித் துருப்புகள் வரவே நாற்பது கிராமங்களில் உள்ள கொள்ளைக்காரர்களைத் தாக்க துருப்புகள் திட்டமிட்டன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும் ம்டாலயம் வந்து ஸு யுன்னிடம் ஏதேனும் செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். ஸு யுன் உடனடியாக யுத்த கமாண்டரைச் சந்தித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட் பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன,
ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ச்கஜ நிலை மீண்டது.
அன்றிலிருந்து அந்தக் கிராமங்களின் மக்கள் ஸு யுன்னை அன்புத் தாயாக உருவகித்து அவரை வணங்கலாயினர். ஜப்பானிய படைகள் நகரை ஆக்ரமித்த போதிலும் கூட அவர்கள் யுன் மென்னுக்கு வரவில்லை.
-தொட்ரும்
***