ஆண் புலி பாண்டு மஹாராஜன்! செக்ஸ் பற்றிய உண்மை! (Post No.3698)

01647-pandu2b3

Written by London swaminathan

 

Date: 6 March 2017

 

Time uploaded in London:- 20-32

 

Post No. 3698

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மஹாபாரதத்தில் பலருடைய விசித்திரமான பிறப்புகளின் பின்னுள்ள உண்மைகளை — அறிவியல் உண்மைகளை — நிறைய எழுதிவிட்டேன். இன்று பாண்டு, திருத ராஷ்டிரன் பிறப்புகளில் உள்ள விஞ்ஞான உண்மைகளைத் தொட்டுக் காட்டுகிறேன்.

 

மஹாபாரத மாவீரர்களில் அதிகம் போற்றப்படாதவர்களில் ஒருவர் பாண்டு மஹாராஜன். ஆனால் மஹாபாரதத்தில் இவரைப் பற்றிப் பல பாராட்டுரைகள் உள்ளன. மனிதர்களுள் ஆண்புலி என்று வருணிக்கப்படுகிறார்.

கணவனும் மனைவியும் படுக்கையில் இன்பம் அனுபவிக்கும்போது வேண்டா வெறுப்பாக ஒருவர் இருந்தாலும், அது பிறக்கப் போகும் குழந்தையைப் பாதிக்கும் என்பது பாண்டு-திருதராஷ்டிரர் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது..

 

மேலை நாடுகளிலும் கூட, பெற்றோர்கள் குடி, கூத்து, போதை மருந்து,  மற்றும் பல தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

 

எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் மிகச் சுருக்கமாக சொல்கிறேன். விசித்திரவீர்யனின் இரண்டு மனைவிகளுக்கும் மகப்பேறு இல்லாததால் நாட்டை ஆள்வதற்கு சந்ததி இல்லாமல் போய்விடுமே என்று வியாசர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வியாசரின் தாயாரே எற்பாடுசெய்கிறார். அக்காலத்தில் ராஜ வம்சம் நசித்துப் போகாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு இருந்தது. விசித்ர வீர்யனின் இரண்டு மனைவியர் அம்பிகா, அம்பாலிகா. இருவரிடமும் வியாசர் வரப்போகிறார் என்று சொன்னவுடனே முகம் சுழித்தனர். ஏனெனில் வியாசர் கருப்பர். அவர் பெயரே கருப்பு (க்ருஷ்ண த்வைபாயன)! அழகும் கிடையாது. ஆனால் உலக சாதனையில் அவரை மிஞ்ச இன்று வரை யாரும் பிறக்கவில்லை. பிரம்மாண்டமான வேதங்களை நான்காகப் பிரித்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபரதத்தை எழுதினார். இதில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை.

8ad17-pandu2

அவர் படுக்கை அறையில் நுழைந்தவுடன் அம்பிகா வெறுப்புற்று கண்களை முடிக் கொண்டார். வியாசரோ முற்றும் துறந்த முனிவர். அது பற்றிக் கவலைப் படாமல் தாயார் இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு பாலியல் இன்பத்திற்காகவன்றி, வம்ச விருத்திக்காக மட்டுமே என்று,  சொன்ன செயலைச் செய்துவிட்டு வெளியேறினார். கண்னை மூடி வெறுப்புக் காட்டிய அம்பிகாவுக்கு கண்கள் தெரியாத திருதராஷ்டிரன் பிறந்தான். அவனும் வெறுப்புடன் பிறந்ததால் இறுதிவரை பாண்டவர் மீது வெறுப்பைப் பொழிந்தான்; அழிந்தான்.

 

அம்பாலிகாவுக்கும் இதே வெறுப்புதான். அவளும் வேண்டா வெறுப்பால முகம் வெளுத்து பயந்து போய் படுக்கையில் படுத்தாள் . அவளுக்குப் பிறந்த பாண்டு மஹாராஜன் வெளுத்த தோலுடனும், செக்ஸில் ஈடுபட முடியாத பயத்துடனும் பிறந்தான்..

 

இது  மஹாபாரதம் கற்பிக்கும் பாடம்; செய்யும் செயலை — செக்ஸே ஆனாலும் — மனமுவந்து செய்ய வேண்டும் அப்படி செய்யாவிடில் குழந்தைகள், குறையுடன் பிறக்கலாம்.

 

பாண்டுவின் மற்ற கதை எல்லோரும் அறிந்ததே. குந்தி என்ற முதல் மனைவியும் மாத்ரி என்ற இரண்டாவது மனைவியும் உண்டு. ஒரு முறை வேட்டையாடும் போது மான் தோல் போற்றிய கிண்டம ரிஷியை உண்மையான மான் என்று நினத்து அம்பெய்திக் கொன்றுவிட்டார். அப்போது அந்த ரிஷி தன் மனைவியுடன் படுத்திருந்தார். உடனே அவர் ஒரு சாபம் இட்டார். நீ உன் மனைவியுடன் படுத்தாயானால் இறந்து போவாய் என்று.

441dd-pandu1

பாண்டுவும் பயந்துபோய் காட்டிற்குத் தவம் செய்யப்போனார். அவருடன் இரண்டு மனைவியரும் சென்றனர். ஒரு நாள் மாத்ரியும், பாண்டுவும் உணர்ச்சிவயப்பட்டு படுத்தபோது பாண்டு இறந்தார். சாபத்தை அறிந்தும் கணவனை எச்சரிக்காமல் போனோமே என்று வ ருந்தி மாத்ரியும் பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி போல கணவருடன் தீப்பாய்ந்தாள்.

 

குந்திக்கும் மாத்ரிக்கும் மந்திரம் மூலம் பிறந்த பஞ்ச பாண்டவர்களையும் வளர்க்கும் பொறுப்பை குந்தி ஏற்றாள்.

 

(மஹா    பாரதத்திலுள்ள டெஸ்ட் ட்யூப் TEST TUBE BABY குழந்தை, செக்ஸ் மாற்ற ஆபரேஷன் SEX CHANGE OPERATION, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை (SIAMESE TWINS சயாமீஸ் ட்வின்ஸ்) முதலிய பத்து ரஹசியங்களை பழைய கட்டுரைகளில் காண்க)

 

பாண்டு மஹாராஜன் பற்றி மஹா  பாரதத்தில் உள்ள ஓரிரு ஸ்லோகங்களைக் காண்போம்:-

 

 

அயம் ச புருஷ வ்யாக்ரஹ புனர் ஆயாதி தர்மவித்

யோ ந ஸ்வான் இவ தாயாதான் தர்மதஹ பரிரக்ஷதி( 1-199-17)

 

ஆண்களில் புலி போன்ற வீரம் படைத்த அவர் (பாண்டு)  மீண்டும் வந்து விட்டார்; குணங்களை நன்கு அறிந்தவர். தர்ம விதிப்படி நம்மை தனது சொந்தக்கார ர்கள் போலப் பாதுகாக்கிறார்.

 

கேசாம் சித் அபவத் ப்ராதா

கேசாம் சித் அபவத் சகா

ர்ஷயஸ் த்வ அபரே சை நாம்

புத்ரவத் பர்யபாலன் 1-113-3

 

பாண்டு காட்டில்ச தவம் செய்த போது சிலரை சகோதர்களாகவும் சிலரை தோழர்களாகவும் நடத்தினார். ஆனால் ரிஷிகளோவெனில் பாண்டுவை தனந்து சொந்த மகன் போல நடத்தினர்.

 

பாண்டு ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் காட்டில் தவம் செய்தபோது ஒரு பிரம்ம ரிஷி போல ஒளியுடன் விளங்கினார்:

 

ப்ரம்மரிஷி சத்ருச பாண்டுர்

இவ்வாறு பல இடங்களில் பாண்டு போற்றப்படுகிறார்.

 

–Subam–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: