Picture of Ka (Brahma)
Written by London swaminathan
Date: 8 March 2017
Time uploaded in London:- 21-32
Post No. 3705
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்தில் (NTR) இந்திரன்
எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!
God in Egypt (NTR = Intra) Indra Dwaja in Egypt
பிரம்மா வழிபாடு
தத் (THOTH) என்ற எகிப்திய தெய்வம் மொ”ழிக்கும் வார்த்தைகளுக்கும் படைப்புக்கும்” உள்ள தெய்வம். இதன் பங்கு பணிகளைப் படித்தால் அப்படியே பிரம்மாவுக்கு உள்ள எல்லாம் இருக்கும். பிரம்மாவுக்கு ஹம்சம் வாஹனம். அங்கு மற்றொரு நீர்ப்பறவையின் (IBIS) முகத்தை தத்– துக்குப் பொருத்தி இருக்கிறார்கள்.
தத்-தின மனைவி பெயர் செஷட் (Seshat). இவள் எழுத்துக்கு அதிதேவதை. நமது சரஸ்வதியை செஷட் என்று உச்சரிக்கிறார்கள்!
க (KA) என்னும் எழுத்து பற்றி ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது. க என்பது பிரம்மாவைக் குறிக்கும் . எகிப்தில் க என்பதை பிராமி, தமிழில் உள்ளதைப் போலவே சித்திரத்தில் காட்டினர்!
நாராயணன் என்பதை நுன் (Nun) என்று வழிபட்டனர். நுன் என்பதே நாம் சொல்லும் பாற்கடல்; பரந்தாமன் அங்கே தானே பள்ளிகொண்டிருந்தார்.
தத்தாத்ரேயர் வழிபாடு
எகிப்திய எழுத்துக்களைப் படிக்க உதவிய ரோஸட்டா கல்வெட்டில் தத் என்ற தெய்வம் கிரேக்க நாட்டின் ஹெர்ல்மிஸ் ற்றைஸ்மெஜிச்டஸுக்கு (Hermes trimegistus)) என்று கூறியுள்ளனர். ஹெர்மிஸ் பற்றிப் படித்தால் அப்படியே இந்து தெய்வமான தத்தாத்ரேயரின் குணங்கள் முழுதும் இருக்கும் இதில் தத் என்ற சொல் வருவதைப் பாருங்கள் (தத்– தாத்ரேயர்)
ட்ரைமெஜிஸ்டஸ் என்றால் மூன்று குணங்கள் ஒன்றானது. ததாத்ரேயர் பிரம்ம-விஷ்ணு-சிவன் மூன்று அவதாரங்களின் சங்கமம். மேலும் கிரேக்க தெய்வம் “அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி” போன்ற கருத்துக்களைச் சொன்னதாகவும் என்சைக்ளோபீடியா கூறும். இவை இந்துமத உபநிஷத வாக்கியங்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
காயத்ரீ, சூர்ய வழிபாடு
இந்த வரிசையில் எழுதிய 16 கட்டுரைகளில் ஹதோர் (Hathor) என்னும் தேவி சவிதுர் என்னும் வேத கால தெய்வம் என்பதையும், ஹோரஸ் (Horus) என்பது சூர்யஸ் என்பதன் திரிபு என்றும் விளக்கி இருக்கிறேன். ஆக, அங்கு காயத்ரீ, சூர்ய வழிபாடும் இருந்தன.
எகிப்தில் பவித்ரம் (Ankh)
எகிப்தியர் அங்க் (Ankh) என்ற அடையாலத்தை உபயோகித்தனர். இதன் தோற்றம் மர்மமானது என்று எகிப்தியல் நிபுணர்கள் கூறுவர். இது இந்துக்கள் பூஜை காலத்தில் பயன்படுத்திய பவித்ரம் ஆகும்.
விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட் (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.
விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட் (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.
Picture of Sekhemet -Narasimha avatar
எகிப்தில் திருமூலர் கருத்துகள் என்ற கட்டுரையில் திருமூலர் பாடலை ஒட்டிய கருத்துகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.
எகிப்தில் மாதா (ma’at) பிதா (Ptah) என்ற தெய்வங்கள் வழிபடுவது பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். உடம்பைக் கூடாகவும் ஆன்மாவைப் பறவையாகவும் சித்தரிக்கும் எகிப்தின் வழக்கத்தையும் திருக்குறளில் இருப்பதைக் காட்டினேன்.
ஆசிரிஸ் – சேத் பகைமை
ஆசிரிஸ் – சேத் (Osiris Vs Seth) பகைமை என்பது பருவ காலங்களின் மாறுபாட்டைக் காட்டுவது போன்றது. நமது ஊரில் இந்துக்கள் காம தகனம், ஹோலி முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுவது போல அவர்களும் ஆசிரிஸ்- செத் மோதலை பண்டிகை யா
கக் கொண்டாடுவர்.
இந்துக்களைப் போலவே கோவிலகளுக்கு நிலம் அளித்து அதற்கு வரிவிலக்கும் தந்தனர்.
இந்துக்கள் கோவில்களுக்கு சிவப்பு வெள்ளை அடிப்பது போல அரணமனைச் சுவர்களுக்கு சிவப்பு-வெள்ளை வர்ணம் பூசினர்.
எகிப்திய பிரமிடுகளின் சுவர்களில் உள்ள விஷயங்கள், மரணப் புத்தகத்திலுள்ள விஷயங்கள் முதலியன வேத மந்திரங்களைப் போல இருப்பதையும், நட்சத்திரங்கள் பற்றிய அவர்களுடைய நம்பிக்கைகள் நம்மைப் போலவே இருப்பதையும் முன்னரே காட்டிவிட்டேன்.
xxxxxxxxxxx
My Research Articles on Egypt
Did Indians build Egyptian Pyramids?
27 august 2012
Hindu Gods in Egyptian Pyramids
16 september 2012
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda
26 september 2012
Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014
Vedas and Egyptian Pyramid Texts
29 August 2012
(Part 3)
5 september 2012
More Tamil and Sanskrit Names in Egypt
Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.
Flags: Indus Valley-Egypt similarity
15 october 2012
First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!
14 october 2012
எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!
Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்
POST No. 716 dated 21 Novemeber 2013
சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!
15 September 2014
எகிப்திய அதிசயங்கள் 16 கட்டுரைகள்
எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017
எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017
எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648) posted 18-2-2017
எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017
ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017
எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on 21-2-2017
எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on 23-2-2017
எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)
posted on 24-2-2017
பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670) posted on 25-2-2017
பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11, posted on 27-2-2017
வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on 2-3-2017
சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687) posted on 3-3-2017
மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on 4-3-2017
சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)
posted on 5-3-2017
விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on 6-3-2017
எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on Date: 12 May 2016
2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on Date: 12 May 2016
3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809) BY S NAGARAJAN; posted on Date: 14 May 2016
Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)