அதிசய புத்த துறவி ஸு யுன்! – 33 (Post No.3712)

Written by S NAGARAJAN

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:-  5-15 am

 

 

Post No.3712

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 33

ச.நாகராஜன்

 

112ஆம் வயது – தொடர்ச்சி  (1951-1952)

ஸு யுன் மெல்லிய குரலில் சொல்லலானார்:

“நான் துஷிடா சுவர்க்கத்தில் மைத்ரேய புத்தரின் அந்தரங்க அறைக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அழகிலும் கம்பீரத்திலும் அது பூமியை விடப் பல மடங்கு மேலானது. மைத்ரேய புத்தர் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு சூத்ரங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பெரிய கூட்டம் நிரம்பி இருந்தது. அதில் எனக்குத் தெரிந்த பத்து குருமார்கள் இருந்தனர்.

நான் இரு க்ரங்களையும் குவித்து வணங்கிய போது முதல் வரிசையில் காலியாக இருந்த மூன்றாம் இருக்கையைச் சுட்டிக் காட்டினார்கள். ஆர்ய ஆனந்தர் தான் கூட்டத்தின் தலைவர். நான் அவர்கள் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன். மைத்ரேயர் மனம் பற்றிய தியானத்தில்  பிரக்ஞையை ஒரு நிலைப்படுத்துவததப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தவர் பாதியில் அதை நிறுத்தி விட்டு என்னை நோக்கினார்.

“நீ திரும்ப உன் இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்று அவர் என்னப் பார்த்துக் கூறினார்.

நான்,”எனது கார்மிக பந்தம் மிகவும் பெரியது. ஆகவே அங்கு திரும்பிச் செல்ல எனக்குப் பிடிக்கவில்லை” என்றேன்.

அவர், “உனது கார்மிகம் மிகவும் பெரியது. அது இன்னும் முடியவில்லை. நீ இப்போது திரும்பிப் போக வேண்டும். பின்னர் வரலாம்” என்றார்.

பின்னர் ஒரு அருமையான கீதத்தை இசைக்கலானார்:

ஞானிகளும் உலகமும் நன்மையும் தீமையும் சந்தோஷமும் கூட வானத்தில் தோன்றும் மலர்கள் போல அனைத்தும் மாயையே

துன்பக் கடலில் பயணமுறும் போது

தயையிலிருந்து நீ திரும்பாதே

சேற்றிலிருந்து தாமரை  மலர்கிறது

புத்தரை நடுவிலே இருத்திக் கொண்டு”

இன்னும் ப்ல கீதங்கள் இசைக்கப்பட்டன. எனக்கு நினைவில் இல்லல.”

இந்த மாதிரி தியான சமாதியில் மாஸ்டர் ஸு யுன்  தனக்கு ஏற்பட்ட் அனைத்துத் துன்பங்களையும் துடைத்து எறிந்தார்.

பழைய காலத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) மாஸ்டர் ஜி பாய் (1543-1604) ஆகியோரும் இதே சமாதி நிலையில் தான் இருந்தனர். தர்மத்தின் உயரிய நிலை பற்றி அறியாதோருக்கு இது புரியாது.

ஸு யுன்னை அடித்த் கம்யூனிஸ்டு குண்டர்கள் இந்த அற்புதமான காட்சியைக் கண்டனர். தங்களுக்குள் ஒருவ்ருக்கொருவர் முணுமுணுத்துப் பேசிக் கொண்டனர். அவர்கள் மிகவும் பயந்து போனார்கள்..

அந்தக் குண்டர்களின் தலைவன் ஒரு பிட்சுவை நோக்கி, “ஏன் இவர் எங்கள் அடிக்குப் ப்யப்படவில்லை” என்று கேட்டான்.

 

அதற்கு அவர், “உலக் மக்களுக்காக எங்கள்  மாஸ்டர் துன்பங்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களின் தொந்தரவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க அவர் உதவுகிறார். பின்னால் அவர் ஏன் உங்கள் அடிகளுக்கு இலக்காகவில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

நடுநடுங்கிப் போன அந்த குண்டன், பின்னால் ஒரு போதும் அவரை அடிக்க நினைக்கவில்லை.

தாங்கள் நினைத்தது போல எந்த ஒன்றும் அங்கு கிடைக்காததனாலும், அங்கு அவர்கள் சித்திரவ்தை செய்யப்பட்டது வெளியில் பரவி விடும் என்பதாலும் மடாலயத்திலேயே தங்கிய அவர்கள் பிக்ஷுக்களை ஒருவரோடொருவர் பேசவிடவில்லை.  அவர்களுக்குத் தரப்பட்ட உணவும் நீரும் கூட தலைவன் சோதித்த பின்னரே தரப்பட்டது, இந்த நிலை ஒரு மாத காலம் நீடித்தது.

 

பயங்கரமான அடியின் காரணமாக மாஸ்டர் ஸு யுன் சொல்ல்வொண்ணாத வலிக்கும்வேதனைக்கும் ஆளானார்.அவர் படும் வேதனையைக் கண்ட சீடர்கள் அவர் இறந்து விடுவாரோ என்று எண்ணினர்.

அவர்கள் அனைவரும் அவரைத் தங்கள் சுய சரிதையை எழுதுமாறு வேண்டினர்.

அத்னால் தான் எழுந்தது இந்த EMPTY CLOUD என்னும் சுய சரிதை.

 

நான்காம் மாதத்தில் யுன் மென்னில் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தி ஷாஷோவை அடைந்தது. அங்குள்ளோர் இதை பீஜிங்கிற்கு சொல்லி அனுப்பினர். அவர்க்ள் மூலமாக் உலகெங்கும் வெளிநாடுகளில் வாழும் பௌத்தர்களுக்கு இந்தச் செய்தி பரவியது.

உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்தனர். எப்பாடுபட்டேனும் ஸு யுன்னைக் காப்பாற்றத் துடித்தனர்.

இதன் விளைவாக பீஜிங்கில் உள்ள அரசு குவாண்டாங் மாகாண அதிகாரிகளுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

குண்டர்கள் படிப்படியாக  மடாலயத்தை விட்டு வெளியேறினர். என்றாலும் போகும் போது ஒட்டு மொத்தமாக ஆடைகளையும் உணவுப் பொருள்களையும் சுருட்டிக் கொண்டு ஓடினர்.

இந்த சித்திரவதைக்குப் பின்னர் மாஸ்டர் ஸு யுன் கஞ்சி கூட அருந்தவில்லை. நீர் மட்டும் அருந்தினார்.

அவர் இதர் பிட்சுக்களை நோக்கி, “என்னால் உங்களுக்கு இப்படி நேர்ந்ததற்கு நான்  மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய பெரிய தீய கர்மம் உங்களையும் பாதித்து விட்டதே! உடனடியாக இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள். எங்காவது சென்று வாழுங்கள்” என்றார்.

ஆனால் சீடர்கள் அவரை விட்டுப் போக மறுத்து விட்டனர்.

பின்னால் காட்டுப் பகுதியில் உள்ள சுள்ளிகளைப் பொறுக்கி அதை உள்ளூர் சந்தைகளில் விற்று சிறிது அரிசியை வாங்கி கஞ்சி தயாரிக்குமாறு ஸு யுன் அவர்களிடம் கூறினார்.

இப்படியாக கஞ்சி உணவுடன் காலை மற்றும் மாலை தியானம் மற்றும் சூத்திரங்களை இசைத்தல் ஆகியவை மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன.

முதல்  மாதம் பதினைந்தாம் நாளனறு பீஜிங் அரசு தொழில்நுட்ப வல்லுநர்களை டேப் ரிகார்டர்கள் காமராக்களுடன் அனுப்பி என்ன நடந்தது என்பதை விசாரிக்க முனைந்தது.

வந்த குழுவினர் முதலில் ஸு யுன்னிடம் விசாரித்தனர். கட்டிலில் படுத்திருந்த அவருக்கு யார் வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பேசுவதும் கேட்கவைல்லை.

அவரிடம் முதலில் விசாரித்த போது, அவரோ பேச மறுத்தார்.

 

என்றாலும் இடைவிடாத வற்புறுத்தலுக்குப் பின்னர் அவரை யாராவ்து துன்புறுத்தினார்களா என்று கேட்ட போது இல்லை என்றார். மடாலயத்தில் ஏதாவது கொள்ளையடிக்கப்பட்டதா என்று கேட்ட போதும் இல்லை என்றார்.

வந்தவர்கள் தாங்கள் யார் என்று தங்கள் அடையாள அட்டையைக் காட்டிய பின்னர் அவர்களிடம் என்ன நட்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை அப்படியே பீஜிங்கிற்கு அனுப்புமாறு அவர் கூறினார்.

வந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து பிக்ஷுக்களையும் உடனடியாக விடுவிக்க ஆணையிட்டனர்.

யுன் மென் மடாலயத்தில் இப்படியாக இரண்டாம் மாதம் இருபத்திநாலாம் நாளனறு ஆரம்பித்த துரதிர்ஷ்ட சம்ப்வங்கள் ஐந்தாம் மாதம் இருபத்திமூன்றாம் நாளனறு முடிவுக்கு வந்தது.

 

இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் மாஸ்டர் ஸு யுன் தேறி வந்தார். அவர் கூறிய படியே காட்டிலுள்ள சுள்ளிகளைப் பொறுக்கு உள்ளூர் சந்தையில் விற்று அரிசி வாங்கி கஞ்சி தயார் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் குண்டர்கள் மடாலயத்தை விட்டுச் சென்று விட்டனர் என்பதை அறிந்த பக்கத்து கிராம மக்கள் எல்லோரும் மடாலயம் வந்து அவரை நலம் விசாரித்தனர்.

வெளியிடங்களில் இருந்த அவரது சீடர்கள் அவரை யுன் மென்னை விட்டு உடனடியாக நீங்குமாறு வற்புறுத்தினர்.

மாகாண உயர் அதிகாரிகளுக்கு எழுதி மாஸ்டருக்குப்  பாதுகாப்புக் கொடுக்குமாறு அவர்கள் வற்புற்த்தினர்.

இப்படியாக 112ஆம் ஆண்டு முடிந்தது.

 

****

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: