அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34 (Post No.3518)

Written by S NAGARAJAN

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:-  8-10 am

 

 

Post No.3718

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34

ச.நாகராஜன்

 

113ஆம் வயது – (1952-1953)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 113. வசந்த காலம் வந்தது. அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.மிகவும் மோசமான தருணங்களை எப்ப்படிக் கையாளுவது என்பத்ற்காக சான் தியான பயிற்சியை அவர் நடத்தினார்..

பீஜிங் அரசிடமிருந்து முதல் மூன்று மாதங்களில் நான்கு முறை பீஜிங் வருமாறு தந்தி வந்தது. அவரை அழைத்துச் செல்ல அதிகாரிகள் பீஜிங்கிலிருந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து போக வேண்டாம் என்றனர்.

அதற்கு ஸு யுன், “காலம் கனிந்திருக்கிறது. ஒரு நல்ல தலைவன் இல்லாததால் நமது பணிகளைச் செய்ய முடியாமல் துரதிர்ஷ்டம் வந்து தடுக்கிறது. நான் தர்மத்தைக் காக்க அங்கு செல்ல வேண்டும். அது எனது பொறுப்பாகும்.” என்றார்.

யுன் மென் மடாலயத்தை நிர்வகிக்க சில மூத்த பிக்ஷுக்களை அவர் தேர்ந்தெடுத்தார். பின்னர் விடை பெறுமுன் இரு துண்டுச் சீட்டுகளில் இப்படி எழுதினார்:

“ஐந்து ஆட்சிகளையும் நான்கு வம்சங்களையும் நான் பார்த்துக் கொண்டிருந்த போது பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.

சொல்லவொண்ணாத ஏற்ற இறக்கங்கள் உலகின் நிலையில்லாத் தன்மையை எனக்குப் புரிய வைத்தன.”

நான்காம் மாதம் நான்காம நாள் அவர் அதிகாரிகளுடன் அவர் புறப்பட்டார். பல நூறு பேர்கள் திரண்டு வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். டா ஜியான் மடாலயத்தில் அவர் தங்கிய சமயத்தில் ஏராளமானோர் வந்து அவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். ஆட்சி மாறினாலும் அவரது மதிப்பு மாறாது என்பதை இது காட்டியது.

ப்த்தாம் நாளன்று அவர் காண்டன் ஹாங்கோ ரயிலில் ஏறி வுசாங் சென்றார்.

அங்கு ‘மூன்று புத்தர்கள்’ மடாலயத்தில் அவர் தங்கினார். உடம்பெல்லாம் ஏற்பட்டிருந்த புண்கள் இந்தப் பயணத்தினால் அவருக்கு வலியையும் வேதனையையும் தந்தன.

உபாசகர் ஜென் ஜென் ரு அவருக்கு மருத்துவ உதவியை அளித்தார். பின்னர் ஒரு வார காலம் அவலோக்தேச்வர போதிசத்வரின் மந்திரங்கள் ஓதப்பட்டன.

பின்னர் அவர் பீஜிங் சென்றார். அவர் செல்லுமுன்னர் மடாலயத்தில் இருந்த பிக்ஷுக்கள் அனைவரும் அவரை போட்டோ எடுத்தனர். போட்டோவில் ஒரு கவிதையை ஸு யுன் எழுதினார்.

“கர்மம் என்னை வுசாங் நோக்கிச் செலுத்துகிறது.

எனது உடல்நலமின்மை மற்றவருக்கு ஒரு தொந்தரவு.

மூன்று புத்தர்கள் ஆலயத்தில் மூன்று மாதம் தங்கினேன்.

அவமானமும் பயங்கரமும் என்னைச் சூழ உலகின் உச்சியில் ஏறினேன்.

மற்றவரும் அதை அடைவதற்காக நான் காத்திருந்தேன்.

குவான் ஜாங் மியூ ஓரிரு வார்த்தைகள் கேட்ட பின்னர் யு ஷுவான் மலையுச்சியில் நிர்வாண நிலையை எய்தியதை நினைவில் கொண்டேன்.”

ஏழாம் மாதம் இருபத்தெட்டாம் நாள் அவர் பீஜிங் அடைந்த போது ரயில் நிலையத்தில் ஏராளமானோர் அவரை வரவேற்கக் குழுமி இருந்தனர்.

குவாங் ஹா மடாலயத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வருகை புரிந்தோர் அதிகமாக இருந்ததால அந்த இடம் போதவில்லை.

நாடெங்கிலுமிருந்து நூறு பிரதிநிதிகள் அங்கு வந்தனர். சீன புத்த சங்கத்தை மறுபடியும் நிறுவ முடிவு செய்யபப்ட்டது.

மதத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசின் முன்னர் ஸு யுன் சமர்ப்பித்தார்.

மடாலயங்கள் இடிக்கப்படக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிக்ஷுக்களிடம் பிடுங்கிய நிலத்தை மீண்டும் ஒப்படைத்து அவர்கள் அதைப் பயிரிட அனுமதிக்க வேண்டும் என்ற் வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

எட்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று சிலோன் புத்த தர்ம பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க வந்தனர்.

ஒன்பதாம் மாதம் குவாங் ஜி மடாலயம் வருமாறு ஏராளமானோர் வேண்டிய போது தனது முதிர்ந்த வயதையும் உடல் நலம் சரியில்லாம்ல் இருப்பதையும் சுட்டிக் காட்டி வர இயலாது என்று அவர் தெரிவித்தார்,

பத்தாம் மாதம் உலக அமைதிக்காக ஒரு பெரிய பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. ஏழு வாரம் நடை பெற்ற கூட்டத்தின் இறுதியில் 3000 சீன டாலர்கள் அவருக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அதை நான்கு புனித தலங்களுக்கும் எட்டு மடாலயங்களுக்கும் 350 சிறிய மற்றும் பெரிய ஆலயங்களுக்கும் அவர் வழங்கினார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அருமையான சொற்பொழிவை அவர் ஷாங்காயில் 1952, டிசமப்ர் 17ஆம் தேதி ஆற்றினார்.

அதில் உலக அமைதியை அவர் வலியுறுத்தினார்.

தர்ம குரு யின் குவாங்கின் 12வது நினைவு நாள் 1952 டிசம்பர் 21ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட போதும் அவர் ஒரு சிறப்புரையை ஆற்றினார்.

அவரது 113ஆம் வ்யது முடிவுக்கு வந்தது.

– தொடரும்

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: