Picture of a Traditional Tamil Wedding
Written by London swaminathan
Date: 14 March 2017
Time uploaded in London:- 20-55
Post No. 3723
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.
1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.
இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.
2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.
இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).
3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.
இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.
4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.
பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.
நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.
சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.
இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.
6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..
இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க் காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.
6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.
இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.
7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.
இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.
8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.
இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம் கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.
- திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.
இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.
10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.
இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.
11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.
அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.
12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.
இது இந்துமத்தில் இல்லை
14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.
இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை
.
13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.
இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by British Museum.
–Subham–