அதிசய புத்த துறவி ஸு யுன்! – 37 (Post No.3733)

Written by S NAGARAJAN

 

Date: 18 March 2017

 

Time uploaded in London:-  5-07 am

 

 

Post No.3733

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 37

ச.நாகராஜன்

 

117ஆம் வயது – (1956-1957)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 117. வசந்த காலம் வந்தது. பிரதான ஹாலைக் கட்டி முடித்த பின்னர் மாஸ்டர் ஸு யுன் மடாலயத்தின் பாதுகாவலர்களான நான்கு தேவர்களின் சந்ந்திகளைக் கட்டி முடித்தார். பிறகு டவர் ஆஃப் ஹ்யுமிலிடி, டவர் ஆஃப் பவுண்ட்லெஸ் சைட். பெல் டவர் (The Tower of Humility, The Tower of Boundless sight, The Bell Tower) ஆகியவற்றையும் சந்நிதி ஹால்களையும் தங்குமிடங்களையும் கட்டி முடித்தார்.

இப்படியாக ஸு யுன் அங்கு வந்து சேர்ந்த மூன்று வருடங்களுக்குள் பழைய கால சிறபக் கலை அழகுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டு பொலிவுடன் மிளிர்ந்தன.

இப்போது அங்கு தங்குவோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் தாண்டியது. மாஸ்டர் யாரிடமும் நிதி உதவி கேட்கவில்லை என்றாலும், எல்லா இடங்களிலிருந்தும் பணம் வந்து குவிந்த வண்ணம் இருந்தது.

பிக்ஷுணி குவான் ஹுயி ஹாங்காங்கிலிருந்து ஒரு தர்மா கூட்டத்தை நிகழ்த்தி 10000 ஹாங்காங் டாலர்களை அனுப்பி வைத்தார்.

கனடாவைச் சேர்ந்த உபாசகர் ஜான் லி வு 10000 கனடிய டாலர்களை அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் அவர் மாஸ்டர் ஸு யுன்னைச் சந்தித்ததே இல்லை!

மாஸ்டர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்களை நாடெங்கும் கட்டி முடித்தார். யுன் ஜுவுக்கு அவர் வந்த போது அவரிடம் இருந்தது ஒரே ஒரு கைத்தடி தான். மாஸ்டருக்கு தேவர்கள் அனுக்ரஹம் நிறையவே இருந்தது. ஆகவே தான் அவரால் இத்தனையையும் சாதிக்க முடிந்தது.

ஒன்பதாம் மாதம் பௌரணமியன்று ஒரு பெரிய பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதில் பிரபல கவிஞரான சு டொங்கோவின் பெயரும் மாஸ்டர் ஃபூ யின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தன.

 

நூற்றுக்கணக்கான துற்விகளுக்கு உணவு வழங்க 27.2 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டது. ப்ன்னிரெண்டாம் மாதம் ஏழாம் நாளன்று இரண்டு வார சான் தியான பயிற்சியை மாஸ்டா துவக்கினார்.

117ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

 

118ஆம் வயது – (1957-1958)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 118. உபாசகர் வூ ஜிங் ஜாயின் வேண்டுகோளின் படி கடந்த ஆண்டிலிருந்தே மலையில் பாதை போடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

வசந்த காலத்தில் மடாலயத்திற்கு வரும் சாலையில் ஆறு அடி அகலப்படுத்தப்பட்டது.

இலையுதிர்காலத்தில் பணி முழுமை அடைந்தது.  ரெயின்போ பிரிட்ஜ், ஜாவோ ஷோ வாயில் போன்ற எழுத்துக்கள் பெரிதாக பாறைகளில் பொறிக்கப்பட்டன.

உள்ளூர் அதிகாரிகள் மாஸ்டரின் மீது வெறுப்பு கொண்டிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.  இதனால் எல்லா பண்படுத்தப்பட்ட விளை நிலங்களையும் உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் மாஸ்டர் ஒப்ப்டைத்தார்.

இதே சமயம் ஹை டெங் மடாலயத் தலைவர் முப்பது துறவிகளுக்கு லோடஸ் சூத்ரங்களை உபதேசித்தார். அவர்கள் அனைவரும் புத்த ஸ்டடி சர்க்கிள் ஒன்றைத் துவங்கினர்

 

119ஆம் வயது – (1958-1959)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 119. வசந்த காலத்தில் இடதுசாரி சகதிகளின் எழுச்சி மடாலயங்களையும் ஆலயங்களையும் வெகுவாகப் பாதித்தது.

ஹாங்கோவில் அனைத்து மடால்யத் துறவிகளும் ஒன்று கூடி ஆலோசித்தனர். ஆனால் தள்ளாத வயது காரணமாக மாஸ்டர் ஸு யுன் இதில் கலந்து கொள்ளவில்லை.

பென் ஹுவான் மடாலயத் தலைவர் உள்ளிட்ட பல துறவிகளை வலதுசாரிகள் என்று குற்றம் சுமத்தி, அவர்கள் அனைவரும் சாட்சியாக மாறி ஸு யுன்னுக்கு எதிராகத் திரும்பினால் தப்புவதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும் என்று சொல்லப்பட்டது.

அவர்கள் அனைவரும் மாஸ்டர் ஸு யுன்னை தரம் தாழ்த்திப் பேசி மட்டம் தட்ட வேண்டும் என்பது தான் குறிக்கோள்.

அவர்கள் முடியாது என்று மறுத்து விட்டனர். நல்ல காலமாக அவர்கள் பாதிக்காதபடி தப்பினர்.

இறுதியில் இடதுசாரிகளுக்கு இரையான ஒரு சிறிய குழு மாஸ்டரின் மீது பத்து குற்றங்களைச் சுமத்தியது.

லஞ்சம், பிற்போக்குவாதம், குண்டாயிஸம், சூத்ரங்களைத் தவறாக போதித்தது ஆகியவற்றோடு அவர் பசுந்தொழுவத்தில் இளம் துறவிகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறின!

அவரை இழித்தும் பழித்தும் எங்கு பார்த்தாலும் பெரிய போஸ்டர்கள் ஒட்டப்படன.

ஆனால் ஸு யுன் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவரது சீடர்கள் இதற்கு மறுமொழி கூறியே ஆக வேண்டும் என்று சொன்ன போதும் கூட அவர் அவர்களை வேண்டாம் என்று தடுத்து விட்டார்.

அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இரு மாதங்கள் கழிந்தன. பிறகு ஒரு நாள் பீஜிங்கிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது.

ஹோங்கோவில் கூடிய கூட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்க பயந்து தயங்கியதாம்.அவரது எல்லையற்ற நற்குணங்கள் அனைத்தும் அவர்கள் நன்கு அறிந்ததே. சில சின்ன எச்சரிக்கைகளை மட்டும் மாஸ்டருக்கு அவர்கள் கூற விழைந்ததாம். அதைக் கேட்டவர்கள் சிரித்தார்களாம்.

ஒன்பதாம் மாதம் பதிநான்காம் நாள் திடீரென்று போலீஸின் உயர் அதிகாரி பசுந்தொழுவத்திற்கு வந்து தோண்ட ஆரம்பித்தார். ஆனால் அங்கு அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

பீஜிங்கிலிருந்து வந்த கடிதங்கள், சூத்ர புத்தகங்கள், கணக்கு வழக்கு நோட்டு, சில புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களை அவரது குழுவினர் எடுத்துச் சென்றனர்.

மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்த போதும் அவற்றை அவர்கள் திருப்பித் தரவே இல்லை.

ஒன்பதாம் மாதம் பதினாறாம் நாள் அனைவரையும் ஒருங்கே வரவழைத்துப் பேசிய மாஸ்டர் சமீபத்திய நிகழ்வுகளைக் கூறினார்.

இந்த் நிகழ்வுகளால் அவர் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதுவரை தானே சாஷ்டாங்கமாக புத்தரை விழுந்து வணங்கிய அவர் இப்போது உதவியாளர்களின் துணையை நாட வேண்டியிருந்தது.

ம்க்கள் அனைவரும் அவரது இறுதி நெருங்கி வருகிறது என்பதைப் புரிந்து கொண்டனர்.

ஒரு நாள் மாஸ்டர் ஸு யுன் தனது இரு உதவியாளர்களை வரவழைத்து அவர்களிடம் தனது இறுதி உயிலைக் கொடுத்தார்.

பத்தாம் மாதம் பத்தொன்பதாம் நாள் அவர் தனது இறுதி உரையை மக்கள் மத்தியில் நிகழ்த்தினார்.

-தொடரும்

 

அடுத்த கட்டுரை

120ஆம் வயது – (13-10-1959)

மாஸ்டர் ஸு யுன்னின் மஹா நிர்வாணம்!

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: