அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38 (Post No.3737)

Written by S NAGARAJAN

 

Date: 19 March 2017

 

Time uploaded in London:-  6-23 am

 

 

Post No.3737

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 38

ச.நாகராஜன்

 

120ஆம் வயது – (13-10-1959)

மாஸ்டர் ஸு யுன்னின் மஹா நிர்வாணம்!

ஸு யுன்னுக்கு இப்போது வயது 120.  வசந்த காலம் வந்தது.மாஸ்டர் ஸு யுன்னின் 120வது பிறந்த நாளும் வந்தது. சீனாவிலுள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள மாஸ்டரின் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரே மகிழ்ச்சி.

பழைய காலத்தில் வாழ்ந்த மாஸ்டர் ஜாவோ ஜோவு இதே போல 120 ஆண்டுகள் (778-897) வாழ்ந்தவர்

சீடர்கள் மிக பிரமாதமாக பிரம்மாண்டமான் அளவில் பிறந்த தின கொண்டாட்டம் கொண்டாட விரும்பினர் இதை அறிந்த ஸு யுன் அனைவருக்கும் இப்படி பதில் எழுதினார்:

‘நான் எவ்வளவு நாள் வாழப்போகிறேன் என்று எனக்கே தெரியாது. இருந்த போதிலும் உபாசகர் வூ ஜிங் ஸாய் எனது பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார். அவருக்கு நான் நன்றி தெரிவித்து இது போல செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன்.

எனது பூர்வ கர்மாக்கள் எனக்கு இந்தப் பிறவி முழுவதும் ஏராளமான துன்பங்களைத் தந்துள்ளன. காற்றில் அலைக்கழிக்கப்படும் மெழுகுவர்த்தி போல நான் இருக்கிறேன். இதை நினைக்கும் போது ஒரு சாதனையும் செய்யாத என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்.

நூறு ஆண்டுக்கால உலகத் துயரங்கள் ஒரு கனவு போல; ஒரு மாயை போலத் தான்!; அதன் மீது பற்றுக் கொள்ள உகந்தது அல்ல. மேலும் பிறப்பானது இறப்பிற்கு வழி வகுக்கிறது. ஆகவே ஒருவன் டாவோ மீது தன் மனதைச் செலுத்த வேண்டும்.

என்னால் எப்படி இந்த (பிறந்த நாள் என்னும்) உலகியல் சடங்கில் ஈடுபட முடியும்? உங்களின் அன்பிற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் கூட நான் எனது தாயின் அகால மரணம் பற்றி வருந்திக் கொண்டிருக்கிறேன்.

 

தயவு செய்து எனது பாவத்தை அதிகரிக்கச் செய்யும் பயனற்ற பிறந்த நாள் கொண்டாடும் திட்டத்தைக் கை விடுங்கள்.”

மூன்றாம் மாதம் ‘பூல் ஆஃப் தி பிரைட் மூன்’ மற்றும் ஸ்தூப வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அவர் தானே நேரில் நின்று அவற்றை முடிவு பெறச் செய்ய முனைந்தார். சில மாதங்களில் அவை முடிவுற்றன

1956ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாஸ்டரின் சீடரான பிக்ஷுணி திருமதி ஜான் வாங்கும் அவரது கணவரும் கனடாவில் பெரிய வர்த்தகருமான ஜான் லி வூவும் பிரதான ஹாலைக் கட்டுவதற்காக நிதி அளிக்க விரும்பினர். ஆனால் அது முடிந்து விட்டதால் ஒரு ஸ்தூபம் அமைக்கவும் லியூ யுன் –அதாவது மாஸ்டரைக் குறிக்கும் பெயர் அது – என்று அழைக்கப்படும் சான் தியான மண்டபம் ஒன்றையும் அமைக்க விரும்பினர். இதன் மூலம் மாஸ்டர் உலகில் இன்னும் இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

மாஸ்டரோ நான் ஹுவா மற்றும் யுன் மென்னில் ஸ்தூபங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஜென் ருவுக்கும் அது போல ஒரு ஸ்தூபம் அமைக்க வேண்டும். மாஸ்டர்கள் மற்றும் ம்டாலயத் தலைவர்கள் எங்கெல்லாம் புதைக்கப்பட்டார்களோ அவர்களின் எச்சங்களை இங்கு கொண்டு வந்து ஸ்தூபத்தை முழுமையாக்கி சீடர்கள் அனைவரும் அங்கு வந்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தும் வண்ணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஜான் லி ஏற்கனவே 10000 ஹாங்காங் டாலர் அளித்திருந்தார். இப்போது இன்னும் 50000 ஹாங்காங் டாலர் (மொத்தம் 10000 கனடிய டாலர்கள்) அளிக்க முன் வந்தார்.

மாஸ்டர் அதை மனமுவந்து ஏற்றார்.1956 இல் ஸ்தூப வேலைகள் ஆரம்பித்தன.1959ஆம் ஆண்டு ஏழாம் மாதம் அது நிறைவுற்றது.

இதுவே மாஸ்டர் ஸு யுன்னின் இறுதியான் பணியாக அமைந்தது.

 

அதே மாதம் கனடாவைச் சேர்ந்த உபாசகர் வாங் ஷெங் ஜியும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜெங் குவான் பியும் க்ஷிதிகர்ப போதிசத்வர் சிலையை அவரது 120வது பிற்ந்த நாளை ஒட்டி அமைக்க வேண்டும் என்று விரும்பினர்.

இதை ஏற்றுக்கொண்ட மாஸ்டர் உடனடியாக இரண்டு சிலைகளை இரண்டே மாதங்களில் செய்து பெல் டவரில் ஒன்றையும் ஸ்தூபத்தில் இன்னொன்றையும் பிரதிஷ்டை செய்தார்.

இந்த இரண்டு சிலைகளே அவர் கடைசியாக பிரதிஷ்டை செய்தவை ஆகும்.

மூன்றாம் மாதத்திலிருந்து நாளுக்கு நாள் அவர் உடல் நிலை நலிவடைந்து வந்தது. ஏழாம் மாதம் அவருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டது. எதையும் சாப்பிட முடியாத நிலையில் சிறிது கஞ்சி மட்டுமே அவர் உட்கொண்டார்.

பீஜிங் அரசு மாஸ்டரின் நிலையை அறிந்து ஒரு டாக்டரை அவரிடம் அனுப்புமாறு உத்தரவிட்டது. ஆனால் மாஸ்டர் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

புவியுடனான எனது தொடர்பு ஒரு  முடிவுக்கு வந்து விட்டது என்றார் அவர்.

அவர் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அனைத்து சீடர்களும அவரது பசுந்தொழுவத்தில் ஒரு நாள் குழுமினர்

அப்போது அவர், ‘நம்மிடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாலேயே நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இணைந்துள்ளோம். இந்த ம்டாலயங்களை எனக்குப் பின்னர் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நான் இறந்த பிறகு என்னை மஞ்சள் ஆடை அணிவித்து சவப்பெட்டியில் வைத்து ஒரு நாள் கழித்து மலையின் அடிவாரத்தில் பசுந்தொழுவத்தின் மேற்குப் ப்குதியில் எரியூட்டுங்கள். பிறகு எனது சாம்பலுடன் சர்க்கரை, மாவு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து ஒன்பது உருண்டைகளைச் செய்து உயிரினங்கள அனைத்திற்குமாக அவற்றை ஓடும் நதியில் எறிந்து விடுங்கள்.இந்த உதவியை எனக்குச் செய்தீர்களானால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடைய்வனாக இருப்பேன்” என்றார்.

அவர்கள் அனைவரும் மாஸ்டருக்கு அன்பு மொழிகளைக் கூறினர். தர்மம் பற்றிய மூன்று கதா கீதங்களை இசைத்தனர்.

எட்டாம் மாதம அவரது பிறந்த நாளை ஒட்டி அனைவரும் வந்து அவரை தரிசித்து பாராட்டுகளை நல்கினர்.

அக்டோபர் மாதம் நிலைமை மோசமடைந்தது.

அக்டோபர்மாதம் ஏழாம் தேதி மார்ஷல் லி ஜெ ஷென் மறைந்ததாக ஒரு தந்தி வந்தது. அதைக் கேட்ட மாஸ்டர், “லி, எனக்கு முன்னதாக ஏன் சென்றீர்கள்? நானும் போக வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட சீடர்கள் அனைவரும் வருந்தினர்.

 

அக்டோபர் 12ஆம் நாள் மாஸ்ட்ர் புத்தரின் சிலையை இன்னொரு அறைக்குக் கொண்டு செல்லப் பணித்தார். இந்த  அசாதாரணமான் உத்தரவைக் கேட்ட மடாலயத் தலைவர் உள்ளிட்டோர் அவரிடம் வந்து இன்னும் சில காலம் அவர் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

“ஏன் இந்த உலகியல் நோக்கைக் கொண்டுள்ளீர்கள்? எனக்காக பிரதான ஹாலில் புத்தரின் நாமத்தை உச்சரியுங்கள்” என்றார் மாஸ்டர்.

அவரது இறுதி உத்தரவையும் ஆசையையும் கூறுமாறு அனைவரும் வேண்ட மாஸ்டர் கூறினார்:

“ சில தினங்களுக்கு முன்னர் நான் இறந்த பின்னர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறினேன். ஆகவே திருப்பி அதைச் சொல்ல வேண்டியதில்லை. க்டைசி வார்த்தைகள் வேண்டும் என்றால் சொல்கிறேன்,கேளுங்கள்.

சீலத்தைக் கடைப்பிடியுங்கள்; ஆசை, கோபம் முட்டாள்தனம் ஆகியவற்றை ஒழிக்க தியானம், பிரக்ஞா செய்யுங்கள்”

ஒரு கணம் கழித்து அவர், “உலகம் முழுமைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பயமற்ற நிலையை உருவாக்க நல்ல எண்ணத்தையும் நல்ல மனத்தையும் மேம்படுத்துங்கள்” என்றார்.

 

அக்டோபர் மாதம் 13ஆம் நாள் அவரது உதவியாளர்கள் அவரை தியான நிலையில் அமர்ந்திருக்கக் கண்டனர்.. அவரது கன்னங்கள் சிவப்பாக இருந்தன. நடுப்பகலில் அவர் படுக்கையிலிருந்து கீழே இறங்குவதை அவர்கள் பார்த்தனர்,

அவர் கீழே விழுந்து விடக் கூடாது என்று உதவியாளர்கள் உள்ளே நுழைய மாஸ்டர் கூறினார்: “எனது கனவில் பசுந்தொழுவம் ஆடி அசைந்து இடிந்து விழுவதைக் கண்டேன். புத்தா பாலம் உடைவதைப் பார்த்தேன். நதி ஓடுவது நின்று விட்டது”

12.30 மணிக்கு அவர் கூறினார்: “நீங்கள் பல காலம் என்னுடன் இருந்துள்ளீர்கள். உங்களது துன்பம் கண்டு நான் மிகவும் நெகிழ்கிறேன். எங்கு சென்றாலும் சங்க ஆடையை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். சீலத்தைக் கடைப்பிடியுங்கள்” என்றார்.

மணி 1.45. சீடர்கள் மாஸ்டரைப் பார்த்த போது அவர் வலது பக்கம் சாய்ந்திருந்தார். அனைத்தும் முடிந்து விட்டது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

உடனே ஏராளமானோர் அங்கு குழுமினர்.

18ஆம் நாளன்று அவர் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

19ஆம் நாளன்று எரியூட்டப்பட்டது.

அந்தச் சமயத்தில் சுற்றியிருந்த இடமெங்கும் நறுமணமுள்ள காற்று வீசியதை அனைவரும் உணர்ந்தனர்.

வெள்ளைப் புகை வானத்தை நோக்கி விரைந்தது.

சாம்பலிலிருந்து ஐந்து வண்ணங்களில் நூறு பெரிய மற்றும் எண்ணற்ற சிறிய எச்சங்கள் காணப்பட்டன. அனைத்தும் தூய்மையாக இருந்தன. ஒளியுடன் விகசித்தன.

 

21ஆம் நாளன்று சாம்பல் ஸ்தூபத்தில் வைக்கபப்ட்டது.

மாஸ்டர் ஸு யுன் 120 ஆண்டுகள் வாழ்ந்து தர்ம வயதான 101ஆம் வயதில் மறைந்தார்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

ச்ங்கம் சரணம் கச்சாமி

(அடுத்த கட்டுரை முடிவுரை: அத்துடன் இந்தத் தொடர் முற்றும். இந்தக் கட்டுரையை முடிக்கும் போது திடீரென்று அருகில் உள்ள ஆலயத்தின் மணியோசை அடிப்பதைக் கேட்டு வியப்புறுகிறேன். ஏனெனில் மாலையில் இந்த நேரத்தில் சாதாரணமாக மணி ஒலிக்காது. இன்று அர்த்தமுள்ள மணியோசை ஒலிக்கிறது.)

****

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: