லண்டன் ‘பூங்கா’ பார்க்க வாறீங்களா? (Post No.3749)

Written by London swaminathan

 

Date: 23 March 2017

 

Time uploaded in London:- 21-11

 

Post No. 3749

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

லண்டனுக்குப் போய்விட்டு வந்தேன் என்று யாராவது சொன்னால், உடனே அந்த நகரைப் பற்றி அறிந்தவர்கள், “ஓ! பக்கிங்ஹாம் பாலஸ் (அரண்மனை) பார்த்தீர்களா? பிக் பென் (BIG BEN), டவர் பிரிட்ஜ் பார்த்தீர்களா (TOWER BRIDGE), டவர் மியூசியத்துக்குப் போய் கோஹினூர்  வைரம் உள்பட மஹாராணியாரின் நகைகளைப் பார்த்தீர்களா?  மெழுகு பொம்மை (MADAM TUSSAUDS) மியூசியம், சயன்ஸ் மியூசியம்,  விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், இயற்கை வரலாற்று மியூசியம் முதலிய மியூசியங்களுக்குப் போனீர்களா? லண்டன் ஐ- யில் ஏறினீர்களா? டிரஃபால்கர் (TRAFALGAR SQUARE) ஸ்கொயர், பிக்கடில்லி சர்கஸ் (PICCADILLY CIRCUS) வழியாகச் சென்றீர்களா? என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்.இங்குள்ள புகழ்பெற்ற, பெரிய ஐந்து பூங்காக்களைப் (Parks) பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

 

அடுத்த முறை லண்டனுக்கு வந்தீர்களானால் இந்த 7 பூங்கா (PARKS) க்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

 

லண்டனுக்கு வந்த எனது அமெரிக்க நண்பர் ஒருவர் விமானத்திலிருந்து லண்டனைப் பார்த்துவிட்டு அசந்தே போனார். நன் ஏதோ எங்கள் அமெரிக்க நகரங்கள் போல வானளாவிய கட்டிடங்களுடன் கான்க்ரீட் ஜங்கிள் (CONCRETE JUNGL)E போல இருக்கும் என்று நினைத்தேன். பச்சைப் பசேல் என்றல்லவா இருக்கிறது? என்றார்.

 

நான் சொன்னேன்: “நல்ல வேளையாக எங்கள் லண்டனில் திராவிட அரசியல்வாதிகள் இல்லை. எல்லா நிலங்களையும், பூங்காக்களையும் பினாமி பெயரில் முக்காத் துட்டுக்குப் பட்டா போட்டு, ஆட்டையைப் போடும் அசிங்கங்கள் இங்கு இல்லை. வெள்ளைக்காரன் கொள்ளை அடிப்பான்; உலகத்தையே; ஆனால் தனக்குத் தானே யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல புறச் சூழலைக் கெடுக்க மாட்டார்கள் என்றேன்.

 

உண்மையிலேயே இது வியப்பான விஷயம்தான். தெருப்பெயர்களை நூற்றாண்டுக் கணக்கில் மாற்றவில்லை. பூங்காக்களை அழிக்கவில்லை. லண்டனில் பூங்கா இல்லாத பேட்டையே இல்லை. புகழ்பெற்ற 7 பூங்காக்கள் அல்லது தோட்டங்களை மட்டும் வரிசைப் படுத்துகிறேன்:

Speakers’ Corner, Hyde Park

1.ஹைட் பார்க் (Hyde Park)

இதன் சிறப்பு என்ன? இங்கே சொற்பொழிவாளர் மூலை (Speakers’ Corner) என்று ஒரு பகுதி இருக்கிரது அங்கு நின்று கொண்டு மஹாராணி, மஹாராஜ உள்பட யாரையும் வசை பாடலாம், குறைகூறலாம் என்று ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், மான நஷ்ட, அவதூறு வழக்குப் போட மாட்டார்கள் என்று ஒரு ஐதீகம் உளது. இதே பூங்காவில் இளவரசி (Dian, Princess of Wales Memorial) டயானா நினைவுச் சின்னத்தையும் காணலாம். 350 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பூங்கா லண்டனின் இதயப் பகுதியில் பல ரயில் நிலையங்களைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. மூங்கில் பாதை (Bamboo Walkway) வழியாக சிறுவர்கள் ஓடி விளையாடலாம்.

 

நாட்டின் தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாளில் 21 முறை பீரங்கிக் குண்டு (Royal Gun salutes) முழக்கம் அளிப்பதும் இவ்விடத்தில்தான். எடுத்துக்காட்டாக மஹாராணியாரின் பிறந்த நாள் (ஏப்ரல் 21), அவர் பட்டமேற்ற நாள் (ஜூன் 2) என்று பல தினங்கள்!

 

இந்தப் பூங்காவுக்குப் பக்கத்திலுள்ள ரயில் நிலையங்கள்:-

மார்பிள் ஆர்ச் Marble Arch, ஹைட் பார்க் கார்னர் Hydepark Corner, நைட்ஸ்பிரிட்ஜ் Knightsbridge

 

2.க்ரீன் பார்க் (Green Park)

இதன் பரப்பு 40 ஏக்கர். மஹாராணியாரின் அரண்மனைக்கு எதிரே உள்ளது (Green Park) க்ரீன் பார்க் ஸ்டேஷனில் இறங்கினால், பூங்காவின் குறுக்கே நடந்து போய் ராணியாரைத் தரிசிக்கலாம். அல்லது அவரைப் பார்க்க வந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்கலாம். அவ்வப்பொழுது அணிவகுக்கும் சிப் பாய்களையும் பார்க்கலாம். உலகப் போர் தொடர்பான பல நினைவுச் சின்னங்களையும் காணலாம்.

Green Park

அருகிலுள்ள ரயில் நிலையம்: க்ரீன் பார்க் Green Park

 

3.கென்ஸிங்டன் தோட்டம் (Kensington Gardens)

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் இங்கு உண்டு. பீட்டர் பானின் வெண்கலச் சிலை (Bronze Statue of Peter Pan), எல்பின் ஓக் (ELFIN OAK STUMP )மரத்தின் (அடிப்பகுதி, டயானா விளையாட்டுத் திடல், பெரிய கொள்ளையர்(PIRATE SHIP) கப்பலின் மாதிரி முதலியன சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலயம்: குஃயீன்ஸ்வே Queensway

4.செயின்ட் ஜேம்ஸ் பூங்கா St Jame’s Park

இந்தப் பூங்காவைச் சுற்றித்தான் முக்கியமான இடங்களான பக்கிங்ஹாம் அரண்மனை, பிக் பென் கடிகாரக் கூண்டு முதலியன உள்ளன. முக்கியமான அணிவகுப்புகள் இங்கே நடைபெறும் 1664 ஆண்டு முதல் இங்கு பெலிகன் நாரைகள் வசிக்கின்றன. ஒவ்வொரு நாளும்cமதியம் இரண்டரை மணிக்கு அவைகளுக்கு மீன் இரை கொடுப்பதைக் காண ஒரு கூட்டம் காத்து நிற்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் –வெஸ்ட்மின்ஸ்டர் Westminster, செய்ன்ட் ஜேம்ஸ் பார்க் St Jame’s Park

 St Jame’s Park

5.ரீஜெண்ட்ஸ் பூங்கா Regent’s Park

இங்குதான் லண்டன் மிருகக்காட்சி (London Zoo)சாலை இருக்கிறது. இதைத் தவிர ரோஜாத் (Rose Gardens) தோட்டம், பறவைகள்  நடைப் பகுதி (Birds Walk) எனப் பல கவர்ச்சிகள் இருக்கின்றன. அன்னம், நாரை, வாத்து, குள்ள வாத்து என நீர்ப்பறவைகள் வாழும் இடம் இது. சிறுவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் பூங்கா.

 

அருகிலுள்ள ரயில் நிலையம்—ரீஜென் ட் ஸ் பார்க்( Regent’s Park)

Regents Park

6.ரிச்மண்ட் பூங்கா (Richmond Park)

லண்டனின் தென் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தப் பூங்கா மான்களுக்கு — குறிப்பாக சிவப்பு நிற கலை மான்களுக்குப் (Red and fallow deer) பெயர் பெற்ற இடம். எப்போதும் மான்கள் கூட்டம் கூட்டமாகத் திரியும். இங்குள்ள இசபெல்லா தோட்டத்தில் வெளிநாட்டுத் தாவரங்களை வளர்க்கின்றனர்.

 

அருகிலுள்ள ரயில் நிலையம் –ரிச்மண்ட் (Richmond)

Richmond Park

7.க்ரீனிச் பூங்கா (Greenwich Park)

அரச வம்சத்தினரின் பெயரிலுள்ள பூங்காக்களில் இதுவே பழமையானது 1427 ஆம் ஆண்டு முதல் இதன் வரலாறு எழுதப்பட்டுளது. தேசிய கடல் மியூசியம் (National Maritime Museum), க்ரீனிச் எல்லைக் கோடு மியூசியம், வானாராய்ச்சிக் (Royal Observatory) கூடம், உலகத்தைன் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட கற்பனைக் கோடு (Greenwich Meridian) முதலியவற்றைக் காண ஏராளமானோர் வருகை தரும் பூங்கா. மான்கள், ஆந்தை, வெவால்கள் என்று பலவகை உயிரினங்களின் அடைக்கலம் இது.

Greenwich Park

அருகிலுள்ள ரயில் நிலையம் –க்ரீனிச்; தேம்ஸ் நதிப் படகு மூலமும் செல்லலாம்.

 

இதுதவிர உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான கியூ (Royal Botanical Gardens at Kew) கார்ட ன் ஸ் இருக்கிறது. அது தாவரவியல் பூங்கா என்னும் வகையில் வந்துவிடும்.

 

ராயல்பார்க்ஸ் என்ற பெயரில் வெப்சைட் (www.royalparks.org.uk )இருக்கிறது. அதில் மேலும் பல தகவல்களை அறியலாம். பூங்காக்களுக்குள் நுழைய கட்டணம் கிடையாது. ஆனால் அவகளில் இடம்பெற்ற மியூசியங்களுக்குக் கட்டணம் கொடுக்கவேண்டும்.

 

–Subham–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: