Written by London swaminathan
Date: 25 March 2017
Time uploaded in London:- 15-59
Post No. 3756
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
உலகிலேயே மிகப் பெரிய சமய நூல் மஹாபாரதம். ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்! இதை எழுதும் கட்டுரையாளரும் அதை ஸ்லோகம் ஸ்லோகமாக, வரி வரியாக, முழுதும் படித்தபாடில்லை. ஆனால் இங்குமங்கும் கேட்டும், படித்தும் ஓரளவுக்கு முழு பாரதம் தெரிந்ததாக ‘’ஒரு நினைப்பு’’. அவ்வளவுதான்! அட, மஹாபாரதத்தில் எத்தனை பர்வங்கள் (அத்தியாயங்கள்) இருக்கின்றன? , அதில் கீதை எங்கே வருகிறது? அதில் பெரியது எது? சிறியது எது? ஒவ்வொன்றிலும் என்ன முக்கியம் என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
முதலில் 18 பர்வங்களின் பெயர்கள்
- ஆதிபர்வம்
- சபாபர்வம்
- வனபர்வம்
- விராடபர்வம்
- உத்யோகபர்வம்
- பீஷ்மபர்வம்
- துரோணபர்வம்
- கர்ணபர்வம்
- சல்யபர்வம்
- சௌப்திகபர்வம்
- ஸ்த்ரீபர்வம்
- சாந்திபர்வம்
- அநுசாஸனபர்வம்
- அஸ்வமேதிகபர்வம்
- ஆஸ்ரமவாசிகபர்வம்
- மௌஸலபர்வம்
- மஹாப்ரஸ்தானிக பர்வம்
18 ஸ்வர்காரோஹண பர்வம்
((மொத்தம் 1923 அத்தியாயங்கள் 84224 ஸ்லோகங்கள் +
ஹரிவம்சம் –12000 ஸ்லோகங்கள்;
மொத்தம் 96244 ஸ்லோகங்கள்))
முதல் பர்வம் எது?
ஆதி பர்வம்
கடைசி பர்வம் எது?
ஸ்வர்காரோஹண பர்வம்
பெரிய பர்வம் எது?
வனபர்வம் 269 அத்தியாயங்கள் 11664 ஸ்லோகங்கள்
சிறிய பர்வம் எது?
மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 123 ஸ்லோகங்கள்
பகவத் கீதை உள்ள பர்வம் எது?
பீஷ்ம பர்வம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ள பர்வம் எது?
அநுசாஸன பர்வம்
இனி ஒவ்வொரு பர்வத்திலும் உள்ள விஷயங்களின் சாராம்சத்தை மட்டும் காண்போம்:–
1.ஆதி பர்வம்
சந்திர வம்சத்தின் தோற்றம்
பஞ்ச பாண்டவர், கௌரவர்கள் பிறப்பு
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே
வெவ்வேறு இடங்களில் இருந்து அரசு செலுத்தியது – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
2.ஸபா பர்வம்
தர்மபுத்ரனின்/யுதிஷ்டிரரின் தலைநகரில் அற்புதமான வகையில்
அமைக்கப்பட்ட சபையின் வருணனை;
அவருடைய ராஜசூய யாக வைபவம்;
இதனால் துரியோதணர் பொறாமை அடைந்தது;
பாண்டவர்களைச் சூதாட்டத்துக்கு அழைத்து, சகுனியின்
உதவியுடன் பாண்டவர்களைத் தோற்கடித்தது;
பண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்யவேண்டும்; 13 ஆவது ஆண்டு மறைவாக வசிக்கவேண்டும் என்று விதித்தது;
பின்னர் திரும்பி வந்தவுடன் ராஜ்யத்தைக் கொடுப்பேன் என்று துரியோதனன் சொன்னது – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
3.வன/ ஆரண்ய பர்வம்
பாண்டவர்கள் வனவாசம் செய்தது (காட்டில் வசித்தது);
மார்கண்டேய மகரிஷி முதலியோரிடமிருந்து தரும சாத்திரங்களை
அறிந்தது;
அர்ஜுனன் தவம் செய்து, பரமசிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெற்றது;
இந்திர லோகம் சென்று சிலகாலம் வாசம் செய்தது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
4.விராட பர்வம்
வனவாசம் முடிந்தவுடன் 13ஆவது ஆண்டில் மறைவாக வாழ்வதற்காக
விராட ராஜன் தேசத்தில் வெவ்வேறு வடிவத்தில் வேலை செய்தது;
திரவுபதியிடம் வாலாட்டிய கீசகனைக் கொன்றது;
துர்யோதன சகோதர்கள், பாண்டவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல்
திணறியது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
5.உத்தியோக பர்வம்
துரியோதனன் சொன்னபடியே 13 ஆண்டுகள் இருந்தபடியால்
தனது ராஜ்யத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று பாண்டவர்கள் தூது அனுப்பியது;
ராஜ்யத்தைத் தர மறுத்ததும், பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணனே தூது சென்றது;
துரியோதனன் ஊசி முனை நிலமும் தர மறுத்ததால்,
கிருஷ்ணன், போருக்கான ஆயத்தங்களைச் செய்தது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
6.பீஷ்ம பர்வம்
பீஷ்மர் தலைமையில் துரியோதனன் படைகள் பத்து
நாட்களுக்கு யுத்தம் செய்தது;
அதற்கு முன்பாக அர்ஜுனன் , சொந்தக்காரர்களைக் கொல்ல
மாட்டேன் என்று சொல்லி யுத்தம் செய்ய மறுத்தது; உடனே கிருஷ்ணன், பகவத் கீதை உபதேசம் செய்து, வீரனின் கடமை போர் செய்வது என்பதை உணர்த்தியது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
7.துரோண பர்வம்
பத்தாம் நாளன்று பீஷ்மர் வீழ்ந்தவுடன் , துரோணர் படைத் தளபதியாகப் பதவி ஏற்று யுத்தம் செய்தது;
15-ஆம் நாளன்று தருமபுத்திரர் வாயால் ஒரு பொய்ச் செய்தி
வந்தவுடன் துரோணர் கொல்லப்பட்டது – ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
8.கர்ண பர்வம்
துரோணரின் வீழ்ச்சிக்குப் பின்னர், கர்ணன் படைத்தலைவராகப் பதவி ஏற்று போர் செய்த்தது;
17-ஆவது நாள் மாலையில் அர்ஜுனனின் அம்புக்கு கர்ணன் பலியானது;
தன்னுடைய அண்ணன் கர்ணன் என்று அறிந்து தருமபுத்திரன் துக்கப்பட்டது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
9.சல்லிய பர்வம்
கடைசி நாளான 18-ஆவது நாள், சல்யன் படைத் தலைமை ஏற்று போர் செய்தது;
அவன் இறந்தவுடன், துரியோதனனும், பீமனும் கதாயுத யுத்தம் செய்தது;
கிருஷ்ணனின் குறிப்பால் துரியோதனன் தொடையில் அடித்து அவனை பீமன் வீழ்த்தியது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
10.ஸௌப்திக பர்வம்
துரோணரின் மகன் அசுவத்தாமன், ஒரு மரத்தில் காகங்களை, இரவு
நேரத்தில் ஆந்தைகள் வஞ்சகமாகக் கொன்றதைப் பார்த்து, அதே போல,பாண்டவர் படை வீட்டில் புகுந்து பாண்டவர்களின் குழந்தைகளையும், மற்ற வீரர்களையும் வஞ்சகமாகக் கொன்றது;
பாண்டவர், அவனை அவமானப்படுத்தி விரட்டியது;
கிருஷ்ணனின் முன்யோஜனையால் பாண்டவ சகோதர்கள் உயிர் பிழைத்தது — ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
11.ஸ்த்ரீ பர்வம்
18-நாள் கோர யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களின் மனைவியர் அழுது ஒப்பாரி வைத்தது;
பாண்டவர்களும் மற்றவர்களும் , இறந்துபோன உறவினருக்கு நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தது ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
12.சாந்தி பர்வம்
பத்தாவது நாள் யுத்தத்தில் காயமடைந்த பீஷ்மர், தனது தவ வலிமையால், உத்தராயண புண்யகாலத்தில் இறப்போம் என்று அம்புப் படுக்கையில் காத்திருந்தது.
அப்பொழுது யுத்தம் காரணமாக மன அமைதி இழந்திருந்த, தருமபுத்திரனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) சாந்தி ஏற்பட தருமம் தொடர்பான விஷயங்களைப் பீஷ்மர் போதித்தார். அவை அடங்கிய பகுதி இது.
13.அநுசாஸன பர்வம்
சாந்தி பர்வ விஷயங்களைக் கேட்டும் மன அமைதி அடையாத தருமனுக்கு மேலும் பல தருமங்களை பீஷ்மர் உபதேசித்தது- ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
14.அஸ்வமேதபர்வம்
தர்ம்புத்ரர் அஸ்வமேத யாகம் செய்தது;
கீதையில் சொன்ன விஷயங்களை மறந்த அர்ஜுனனுக்கு
பகவான் கிருஷ்ணர் அநுகீதா ரூபமாக மீண்டும் உபதேசித்தது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
15.ஆசிரமவாஸ பர்வம்
துர்யோதனனின் தாய் தந்தையரான காந்தாரியும், திருதராஷ்டிரனும் விதுரர் உபதேசத்தால் வைராக்யம் அடைந்தனர்;
போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரத்துக்கு அருகில் பர்ணசாலை (ஓலைக் குடிசை) அமைத்து, தியானம் செய்துகொண்டு உயிர் துறந்தது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
16.மௌசல பர்வம்
ஒரு ரிஷியின் சாபத்தால், யாதவர்கள் சமுத்திரக் கரையில் முளத்திருந்த கோரைப் புற்களைப் பிடுங்கி சண்டையிடவே அவை பயங்கர ஆயுதங்களாக மாறி யாதவ குலம் அழிந்தது;
கிருஷ்ணர், ஒரு வேடனால் கொல்லப்பட்டு வைகுண்டம் ஏகியது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
17.மஹா பிரஸ்தான பர்வம்
கிருஷ்ண பகவான் வைகுண்டம் ஏகியதை அறிந்தவுடன், கலியுகம் துவங்கியதை அறிந்த தருமர், தனது தம்பிமார்கள், திரவுபதி சகிதம், வட திசையிலுள்ள மேரு மலையை நோக்கிப் பயணம் செய்தது; அவர்களுடன் ஒரு நாயும் தொடர்ந்து பயணம் செய்தது; ஒவ்வொரு பாண்டவராய் உயிர் துறந்தும் நாயும் தருமனு மட்டும் தொடர்ந்து நடந்து சென்றது– ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
18.ஸ்வர்கரோஹண பர்வம்
தரும புத்ரர் (தருமன்/ யுதிஷ்டிடன்) யுத்த காலத்தில் ஒரே ஒரு பொய் சொன்னதற்காக நரகம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டு அதைக் காணும்படி செய்தது;
நாய் வடிவில் வந்தது தரும தேவதை என்று அறிந்தது;
தருமபுத்ரர் சுவர்க்கத்தில் தனது உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தது
ஆகியன இப்பர்வத்தில் அடக்கம்.
மஹாபாரதம் முற்றும்
–SUBHAM–
Old Articles on Mahabharata from my blogs:–
Following articles are written by London swaminathan
1.மஹாபாரதத்தில் ஒரு அதிசய பறவை
கட்டுரை எண்:–1141 தேதி:– ஜூலை 1, 2014.
2.இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!! (Post No.2917) Date: 24 June 2016
3.மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.
4.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1; கட்டுரை எண் 934 தேதி 26 மார்ச் 2014
- பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்கிடைத்தது!; கட்டுரை எண் 935 தேதி 26 மார்ச் 2014
6.கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774); Date: 2 May 2016
7.நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.
8.Stars are Gods! We are Stars!!
Post No 1241; Dated 18th August 2014.
9.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!
கட்டுரை எண்:-1231; தேதி 13 ஆகஸ்ட் 2014.
10.Medical Science solves Ten Mysteries in the Mahabharata !
Post No. 933 Date 26th March 2014
11.PANDU- TIGER AMONG MEN! (Post No.3697) Date: 6 March 2017
12.Sex Secrets! Satyabhama boldly asks Draupadi in Mahabharata!!
Post No.2220; Date: 6 October 2015
13.Draupadi and Tamil Heroines;17 May 2012
14.Four Wings of Hindu Army: Blow to Aryan- Dravidian Theory!;Post No.1230 ; Dated 13th August 2014.
15.Strange Bird Stories in Mahabharata!
Research Article no. 1711; dated 12 March 2015
16.One Minute Mahabharata! One Minute Bhagavatha!! 27 March 2015
17.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!; 28 March 2015
18.Yellow clad Krishna and Blue Clad Balarama! 2 October 2014
19.பீதாம்பரதாரியும் நீலாம்பரதாரியும், மதுப் ப்ரியனும் மாது ப்ரியனும்; கட்டுரை எண்:1324; தேதி:– 3 அக்டோபர் 2014.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Following articles are written by S Nagarajan
1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்
written by S NAGARAJAN; Date: 17th September 2015; Post No: 2165
2.MEMORY QUEEN DRAUPADI; Written by S Nagarajan
Research Article No. 1689; Dated 4 March 2015.
3.நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்! by S Nagarajan; Post No.1104; dated 13th June 2014.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Please read also London waminathan’s articles on CONCEPT OF TIME:
TIME TRAVEL by TWO TAMIL SAINTS, posted on 14-2-2012
Do Hindus believe in ETs and Alien Worlds?, posted on 28-1-2012
Is Brahmastra a Nuclear Weapon?, posted on 5 June 2011
Hindus Future Predictions Part 1 (posted 20 May 2012)
Hindus Future Predictions Part 2 (Posted on 20 May 2012)
Five Beautiful Stories on Hindu Concept of Time; Article No.1869; Dated 16 May 2015.
Einstein’s Hindu Connection!; Article No.2017; Date : 25 July 2014
–Subham–