அற்புத குறிக்கோள்!! (Post No.3819)

Written by S NAGARAJAN

 

Date:15 April 2017

 

Time uploaded in London:-  6-29 am

 

 

Post No.3819

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

தனது வாழ்க்கையை நல்ல விதத்தில் அமைத்துக் கொள்ளாமல் இளமைக் காலத்தில் சமணருட்ன் சேர்ந்து கெட்டதை நினைத்து வருந்திய அப்பர் பெருமான் “குறிக்கோளின்றிக் கெட்டேனே” என்று பின்னர் வருந்தினார்.

 

குறிக்கோள் என்பது வாழ்க்கையின் மூலதனம். நல்ல குறிக்கோள் நல்ல வாழ்க்கையை அமைக்க உதவுகிறது.

 

ஸ்வாமி விவேகானந்தர் நர நாராயண் ரிஷிகளில் நர ரிஷி. அவர் பூமிக்கு வர விருப்பம் இல்லாதவராகவே இருந்தார். ஆனால் ராம கிருஷ்ண பரமஹம்ஸராக அவதரித்த நாராயண ரிஷி அவரைத் தம்முடன் வர வேண்டிய அவசியத்தை உணர்த்தி வரச் செய்தார்.

 

பூமிக்கு விஜயம் செய்த விவேகானநதர் உலக் நடப்பைக் கண்டு திடுக்கிட்டார்.

 

இப்படி குறிக்கோளின்றி வாழும் மக்களைக் கண்டு அவருக்குக் கண்களில் நீர் ததும்பியது.

 

அவரது கூற்றுகளில் அற்புதமான ஒன்று உலக மக்களின் பரிதாபமான நிலை பற்றியது.

 

இந்த மக்கள் அன்றாட வாழ்விற்காக, வயிறை நிரப்புவதற்காக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் எத்தனை, இதற்கே இவர்களுக்கு நேரம் போதவில்லையே! இவர்கள் எப்படி எப்போதும் இறைவனை நினைக்க முடியும்; அவர்களை அப்படி எப்போதும் நினையுங்கள் என்று எப்படி நான் தான் கூற முடியும்?

என்று ஏங்கினார் அவர்.

 

 

அதன் விளைவாகத் தான் ராமகிருஷ்ண மிஷன் பிறந்தது. அதன் குறிக்கோளாக அவர் பொறிந்த்த வாசகம்:

“ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச”

ஆத்மா மோக்ஷத்தை அடையட்டும் உலகம் ஹிதத்தைப் பெறட்டும்.

 

 

இது தான் அவர் பொறித்த வாச்கம்.

உலகம் ஹிதத்தைப் பெற சேவை செய்வது ஒனறே வழி.

மற்றவர்களுக்காக வாழ்ப்வரக்ளே உண்மையில் உயிர் வாழ்பவர்கள். ஏனையோர் இருந்தும் இறந்தவரே என்றார் அவர்.

 

“THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS, THE REST ARE MORE DEAD THAN ALIVE”

 

பூமியில் இருக்கும் மானுடர் அனைவ்ரும் மோக்ஷமடைய தாம் பிறந்து வரவேண்டுமெனில் எத்தனை முறை வேண்டுமானாலும் தான் பிறக்கத் த்யார் என்று தன் உள்ளார்ந்த விருப்பத்தை ஸ்வாமிஜி தெரிவித்தார்.

 

 

ராமகிருஷ்ண இயக்கத்தின் செயல்பாடுகள் உபநிடதங்களின் உள்ளார்ந்த உயரிய குறிக்கோளின் அடிப்படையில் அமைந்திருப்பதால் அதுவே அனைவரின் குறிக்கோளாகவும் அமைய வேண்டும் என்பதில் ஐயமில்லை.

 

 

குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் வருந்தியது போல நாம் வருந்த அவசியமில்லாதபடி ஒரு அற்புதமான குறிக்கோளைக் கொடுத்த அற்புத புருஷர் ஸ்வாமி விவேகானந்தர்.

 

இந்த வாசகமே நம்து தேசீய லட்சியமும் கூட!

***

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: