Written by London swaminathan
Date: 2 May 2017
Time uploaded in London: -6-46 AM
Post No. 3871
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
திராவிட மந்திரவாதி: ராஜ தரங்கிணி நூலில் அற்புதச்செய்தி
காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் என்ற புலவர் 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.
திராவிட அதிசயங்களைக் காண்போம்:
ஜெயபீடன் (கி.பி.750) என்ற அரசன் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது: உண்மைக் கதை:
ஜெயபீடன் கனவில் ஒரு நாள் ஒரு மஹாபுருஷர் தோன்றினார்; இரு கரங்களையும் கூப்பியவாறு அவர் சொன்னதாவது–
“ஓ, அரசனே! உன்னிடம் அடைக்கலம் வேண்டி நான் வந்துள்ளேன். நான் உனது அரசின் எல்கைக்கு உட்பட்ட ஏரியில் வசிக்கிறேன். நான் ஒரு நாகன்; என் பெயர் மஹாபத்மன்; ஒரு திராவிட மந்திரவாதி, தனது மந்திர சக்தியைப் பிரயோகித்து என்னை ஏரியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறான்; நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
என்னை நீ காப்பாற்றுவாயானால் காஷ்மீருக்குள் உள்ள ஒரு மலையில் தங்கம் கிடைக்கும்; அந்த மலையை உனக்குக் காட்டித் தருவேன் என்றான் மஹாபத்மன்.
இந்தக் கனவைக் கண்ட அரசன் காலையில் தூங்கி எழுந்தவுடன், முதல் வேலையாக இப்படி ஒரு மந்திரவாதி தனது எல்கைக்குள் இருக்கிறானா என்று கண்டறிய உளவாளிகளை ஏவினான்; அவர்கள் பல திக்குகளிலும் பறந்து சென்றனர். தொலை தூரத்திலுள்ள ஒரு திராவிட மந்திரவாதியைக் கண்டுபிடித்து அரசன் முன்னிலையில் நிறுத்தினர். அரசன் ஜெயபீடன் கேட்டான்:
“நீ மந்திரசக்தியால் ஒரு நாகனை அகற்ற முயற்சி செய்கிறாயாமே?”
“ஆமாம் அது உண்மைதான்; எனது மந்திர சக்தியால் நான் எவரையும் கவர்ந்திழுக்க முடியும்” என்றான்.
அரசன் சொன்னான்: “அது எப்படி முடியும். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு ஏரியும் ஆழமும் அகலமும் உள்ளது. நீ சொல்லுவது உண்மைதானா?”
மந்திதிரவாதி செப்பினான்:
அரசனே! என்னுடன் ஊலூர் (Uloor/ Wular) ஏரிக்கு வாருங்கள்; நானே காட்டுகிறேன்.
அரசனும் மந்திரவாதியும், பரிவாரங்கள் சூழ ஸ்ரீநகர் அருகிலுள்ள ஊலூர் (இப்பொழுது இந்த அழகிய ஏரியின் பெயர் ஊலார் Wular) ஏரிக்குப் போனார்கள். மந்திரவாதி பல மந்திரங்களை உச்சாடனம் செய்தான். அம்புகளை ஏரியின் நால் திசைகளிலும் எய்தான்; சிறிது நேரத்தில் ஏரி வறண்டது. ஏரிக்கு நடுவில், சகதியில் ஒரு பாம்பு (நாகன்) சில சிறு பாம்புகள் புடை சூழ நெளிந்து கொண்டு இருந்தது.
மந்திரவாதி சொன்னான்: “பார் இப்பொழுது; சூ! மந்திரக் காளி என்று சொல்லி அவனை என் கைக்குள் கொண்டு வருகிறேன்”.
இதைக் கேட்ட அரசன் கோபத்துடன் அப்படிச் செய்யாதே என்று கட்டளையிட்டான். மந்திரவாதியும் அரசனின் கட்டளைக்கு அடிபணிந்து அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திர உச்சாடனங்களை திரும்பப் பெற வேறு சில மந்திரங்களைச் சொன்னான். என்ன அதிசயம்!
ஏரி முழுதும் மீண்டும் நிரம்பியது. அரசன், அந்த மந்திரவாதிக்கு நிறைய சன்மானங்களைக் கொடுத்து நீ போகலாம் என்றான் அரசன்.
மாதங்கள் உருண்டோடின. அரசனுக்கு, மஹாபத்மன் தங்க மலையைக் காட்டவில்லை. கனவிலேயே அந்த நாகனிடம், நா ன் தான் உன்னைக் காப்பாற்றி விட்டேனே; எனக்கு ஏன் இன்னும் தங்க மலையைக் காட்டவில்லை? என்று கேட்டான்.
அரசே! என்னை நீ காப்பாற்றவில்லை. என்னுடைய சந்ததியினர் முன்னே என்னைச் சக்தியற்றவனாகக் காட்டி அவமானம்தான் செய்தாய்; போகட்டும்; உனக்கு தங்கம் கிடையாது; ஆனால் தாமிரம் விளையும் ஓரிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்துக்குப் போகும் வழிகளை மஹாபத்மன் பகர்ந்தான்.
அவன் வாய்மொழியில் கே ட்டவாறு அரசனும் தாமிர மலையை நாடிச் சென்று நாட்டிற்குத் தேவையான கனிவளத்தைத் தோண்டி எடுத்தான்; தன் பெயர் பொறித்த கோடிக் கணக்கான தாமிர நாணயங்களை வெளியிட்டான்.
கல்ஹணர் தனது ராஜதரங்கிணியில் நாலாவது அத்தியாயத்தில் சொன்ன கதை இது.
இன்னொரு அத்தியாயத்தில் காஷ்மீரில் சிந்து சமவெளி பிராமணர்களுடன் திராவிட பிராமணர்கள் தங்கி இருந்ததைப் போகிற போக்கில் பாடுகிறான்.
கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் ஆரிய, திராவிட என்ற சொற்களுக்கு இனவெறி அர்த்தம் (அனர்த்தம்) கற்பிப்பதற்கு முன்னால் சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் அப்படி அர்த்தமே இல்லை. ஆரிய என்றால் பண்பாடு உடைய, மாண்புமிகு என்ற பொருளும், வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் என்ற பொருளும் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் திராவிட என்பது தென் திசையிலுள்ள தேசம் என்ற பொருளில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. திராவிடர்கள் யார் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் அறிக.
My old articles on Kalhana’s Rajatarangini and Kashmir
திராவிடர்கள் யார்? | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/திராவிடர்கள்-யார்/
17 Jul 2013 – பிராமணர்கள் திராவிடர்களே !! திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!
https://tamilandvedas.com/tag/கல்ஹணர்/
ராஜதரங்கிணி என்றால் என்ன? காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் …
ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.
100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.
கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015
அழகான காஷ்மீரி பெண்கள் பெயர்கள் !
ஆய்வுக் கட்டுரை எண் 1586; தேதி 18 ஜனவரி 2015
ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753); Date: 24 March 2017
Ramayana cures Curses! Rajatarangini Episode! (Post No.3754); 24 March 2017
Kaliyuga Calculation: Kalhana’s Blunder! Post No: 1574: 14th January 2015
Nehru on Rajatarangini; Article No.1465; Dated 7th December 2014.
Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka; Article No.1468; Dated 8th December 2014.
106 Kings of Hindu Kashmir!; Post No: 1577: Dated 15th January 2015
Beautiful Names of Ancient Kashmiri Women!; Article No 1583; Dated 17th January 2015.
Sanskrit in Mahmud of Ghazni Coins!; Article No 1579; Dated 16th January 2015
–SUBHAM—1.