Written by S NAGARAJAN
Date: 9 May 2017
Time uploaded in London:- 8-48 am
Post No.3891
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
தமிழ் இன்பம்
முக்கியக் குறிப்பு:
வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.
அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள்
ச.நாகராஜன்
ஒரு கருத்தை நல்ல விதமாகச் சொல்வது ஒரு முறை. காழ்ப்புணர்ச்சியுடன் ன்றை மட்டம் தட்டித் தன்னை உயர்த்திக் கொள்வது இன்னொரு முறை.
தமிழ்த் தாயை வாழ்த்தி ஏராளமான புலவர்கள் பாக்களை இயற்றியுள்ளனர். வில்லிப்புத்துரார் முதல் சுத்தானந்த பாரதி, மஹாகாவி பாரதியார் வரை கவிஞர்கள் இயற்றியுள்ள பாடல்கள் காலத்தை வென்ற பாடல்கள்.
ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் மனோன்மணீயத்தை இய்ற்றிய பெ.சுந்தரம் பிள்ளை சம்ஸ்கிருதத்தை ஒரு படி தாழ்த்தி தமிழை அத்துடன் ஒப்பிட்டு இயற்றிய பாடலை இன்று நாம் அதிகார பூர்வமான தமிழ்த் தாய் வாழ்த்தாகக் கொண்டுள்ளோம். ஆனால் தவறான கருத்தைத் தரும் சொற்கள் நாம் அன்றாடம் வாழ்த்தும் பாடலில், நல்ல வேளையாக நீக்கப்பட்டுள்ள்ன..
அதைப் பார்ப்போம்:
சுந்தரம் பிள்ளையின் பாடல்:
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
இதில் ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு பாடலின் சுருக்கத்தைத் தமிழக அரசு மேற்கொண்டது. சம்ஸ்கிருதம் உலகின் பல பல்கலைக் கழகங்களிலும் பாடமாக உள்ளது. மாத்தூர் என்ற் ஒரு கிராமத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக உள்ளது. அங்குள்ளோர் சம்ஸ்கிருதத்தையே அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆக அது “உலக வழக்கு அழிந்து ஒழிந்த்” மொழி அல்ல.
இனித் தமிழ்த் தாய் வாழ்த்து முற்றிலுமாகத் தனித் தமிழ்ச் சொற்களினாலேயே இயற்றப்பட்டிருக்கிறதா என்றால், அதுவுமில்லை. அதில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை வைஷ்ணவ பரிபாஷை நூலில் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் பட்டியலிட்டுள்ளார் பாடல் வரிகளையும் அதில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களையும் கீழே காணலாம். நீராருங் க்டலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திக பரதக் கண்டமிதில் |
” |
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழழ்ணங்கே தமி ழ ணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதும!, வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!! பாடலில் உள்ள வடமொழிச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. நீர், வதனம், பரதக் கண்டம், கணம், தரித்த, திலக்ம், திலகம்,வாசனை, உலகு திசை ஆகிய வார்த்தைகள் சம்ஸ்கிருத வார்த்தைகள்.!!
இனி ஆத்திச்சூடியில் உள்ள் தமிழ்ச் சொற்களை எம்பார் ரங்கராஜன் பட்டியலிட்டுத் தருவதைக் கீழே காண்போம். (முதலில் குறிப்பிடப்படுவது ஆத்திச்சூடி எண்) 27 வஞ்சகம் பேசேல் 32 கடிவது மற 33 காப்பது விரதம் 36 குணமது கைவிடேல் 44சக்கர நெறி நில் 46 சித்திரம் பேசேல் 56 தானமது விரும்பு 61 தெய்வ மிகழேல் 62 தேசத்தோ டொத்துவாழ் 69. நீர்விளை யாடேல் 82.பூமி திருத்தியுண் 88 மனந் தடுமாறேல் 93 மூர்க்கரோ டிணங்கேல் 98. மோகத்தை முனி 100. வாதுமுற் கூறேல் 101.. வித்தை விரும்பு 103. உத்தமனாய் இரு வஞ்சகம், கடி, விரதம், குணம், சக்கரம், சித்திரம், தானம், தெய்வம், தேசம், நீர், பூமி, மனம், மூர்க்கர், மோகம், வாது, வித்தை, உத்தமன் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருத சொற்கள். இப்படி தமிழ் இலக்கியத்தில் பொருள் நயம் கருதித் தக்க இடங்களில் காழ்ப்புணர்ச்சி இன்றி சம்ஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை நன்கு காண முடிகிறது. உலகப் பொதுமொழியாக இன்று திகழும் ஆங்கிலம் பல மொழிகளிலிருந்து ஏராளமான வார்த்தைகளை எடுத்துக் கொண்டே வளம் பெற்றிருக்கிறது என்பதை இங்கு நாம் நினைவு கூர வேண்டும். வாழ்க வடமொழி; வாழ்க தமிழ்!
Also read:– தமிழ்த் தாய் வாழ்த்தை மாற்றுக! | Tamil and … https://tamilandvedas.com/…/தமிழ்த்-தாய்-வாழ்… 13 Jul 2012 – by S Swaminathan தமிழ் நாட்டில் இப்பொழுது பயன்படுத்தப்படும் தமிழ்த் தாய் வாழ்த்து உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்குப் …
***
|