Pregnant Man Chris
Research article written by London Swaminathan
Date: 23 May 2017
Time uploaded in London: 10-53 am
Post No. 3934
Pictures are taken from various sources such as Face book, google and SUN and MIRROR newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
மஹாபரதத்தில் நிறைய விஞ்ஞான விந்தைச் செய்திகள் உள்ளன. காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய இரட்டையர் (Siamese Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் செய்து ‘செக்ஸ்’ மாறியது, யுக முடிவு, பிரம்மாஸ்திரம் என்னும் அணுஆயுத ஏவுகணை (Nuclear missile) – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்; இவை பற்றி எல்லாம் நான் எழுதிய கட்டுரைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம்.
ஆண்கள் குழந்தை பெற முடியுமா? ஆமாம், பெற முடியும் என்று மஹாபாரதமும் விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.
மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் இது பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல. குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது. அதாவது இனிமேல் மலடி என்று எந்தப் பெண்ணும் இருக்க மாட்டாள்; ஏனெனில் எலிகளின் உடலில் செயற்கை கர்ப்பப் பைகளைப் பொருத்தி ஆராய்ந்ததில் அது இயற்கையான கருப்பை, என்ன என்ன ஹார்மோன்களைச் சுரந்து, ‘வளரும் கரு’வைக் காப்பாற்றுமோ அத்தனையையும் இந்தச் செயற்கைக் கருப்பையும் செய்வதை அறிந்தனர். எதிர்காலத்தில் கருப்பை கோளாறுகளால் குழந்தை பெற முடியாதவர்கள் என்று எவரும் இரார். நிற்க.
மஹாபாரதத்தில் குறைந்தது இரண்டு கதைகளிலாவது ஆண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது தெரிகிறது.
மாந்தாதா என்ற மன்னனை சோழர்களும்கூட தங்கள் முன்னோன் என்று சொல்லிக் கொள்வர்; அவருக்குத் தாய் கிடையாது. ஏனெனில் அவர் தந்தையிடமிருந்து பிறந்தார். பைபிளில் ஏவாள் என்ற பெண்மணியும் ஆதாம் என்னும் ஆணிடமிருந்தே ‘பிறந்தாள்’. மாந்ததாவைப் பொருத்தமட்டில், அவர் யவநஸ்வா என்ற ஆணிடமிருந்து உருவானவர். யவநஸ்வாவின் மனைவியருக்காக ரிஷி முனிவர்கள் தயாரித்து வைத்திருந்த விஷேச திரவத்தை அவர் குடித்ததால் மாந்தாதா பிறந்தார் என்று இரண்டு பர்வங்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய குல மன்னர்களில் சிறப்பான ஆட்சிசெய்த மன்னர்களில் இவரும் ஒருவர்.
ஆண்களும் குழந்தை பெற்றதற்கு இது ஒரு சான்று.
இன்னொரு பர்வத்தில் பங்கஸ்வன என்ற மன்னனின் கதை சொல்லப்பட்டுள்ளது. இவன் ஆணாக இருந்து பல குழந்தைகளைப் பெற்றதாகவும் இதனால் கோபம் கொண்ட இந்திரன் அந்த மன்னனைப் பெண்ணாக மாற்றியதாகவும் அப்பொழுதும் அவன் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் 13- ஆவது பர்வத்தில் வருகிறது. ஆக அக்காலத்திலேயே இவைகளுக்கான உத்திகளை மருத்துவர்கள் கையாண்டனர். ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன.
Amy and Chris with their two children
பிரிட்டிஷ் பத்திரிக்கை செய்திகள்
ஆணோ பெண்ணோ இல்லாமல் அலியாகப் பிறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு குணத்தை தூண்டிவிட்டு குழந்தை பெற வைக்கின்றனர். இதோ சில செய்திகள்:-
வெள்ளைக்கார கணக்குப்படி உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண் தாமஸ் பீட்டி எனபவராவார்.அவருக்கு மூன்று குழந்தைகள். பெண்ணாகப் பிறந்த அவர் காலப்போக்கில் ஹார்மோன் சிகிச்சையால் ஆணாக மாறினார். ஆயினும் இனப்பெருக்க உறுப்புகள் அப்படியே இருந்தன. ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்தன. செயற்கை முறை யில் ஆணின் விந்துவை உடலில் செலுத்தி குழந்தை பெற்ற இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநில பீனிக்ஸ் நகரைச் சேர்ந்தவர். 46 வயதான இவருக்கு இப்படிக் குழந்தை பிறந்தது 2007 ஆம் ஆண்டில்.
ஆனால் மஹாபாரதத்திலோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது
கனடாவைச் சேர்ந்த ட்ரெவர் மக்டொனால்டு ஆண்கள் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டு தன் குழந்தைக்கு பால் கொடுத்த செய்தியை வெளியிட்டுள்ளார். 31 வயதான இவர், இரவு நேரத்தில் பிரசவ வேதனையுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது தாடியுடன் வந்த ஆணுக்கு இரவு நேரத்தில் பிரவ வார்டில் என்ன வேலை என்று சொல்லி ஆஸ்பத்திரி காவற்காரர் உள்ளே விட மறுத்துவிட்டார்.
பிரிட்டனில் முதல் “ஆண் அன்னை” (Male Mother) 2011ல் குழந்தையை ஈன்றார். அதே ஆண்டில் யுவல் டாப்பர் என்ற ஆண் இஸ்ரேலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
Amy with her daughter
ஸ்பெயின் நாட்டில் ரூபன் என்ற ஆணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
இந்த ஆண்டு பிரிட்டனில் இரண்டு ஆண்கள் கர்ப்பம் அடைந்ததை பத்திரிக்கைகள் ஏராளமான புகைப் படங்களுடன் செய்தியாக வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்தன.
இதற்கு முன் கிறிஸ் டூபின் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்த கதை சுவையானது. இவர் ஆண். ஆனால் பிறப்பில் கிறிஸ்டீனா என்ற பெண். பிற்காலத்தில் ஆணாக மாறியபின்னர். அமி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால அமீக்கு கர்ப்பப் பை கோளாறு காரணமாக ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த நேரத்தில் கிறிஸ் தனது கர்ப்பப்பை அப்படியே இருப்பதால் தான் குழந்தை பெற்றுத்தர தயார் என்றார். செயற்கை முறையில் பெண்ணின் கரு முட்டையை உள்ளே செலுத்தி 2014ல் குழந்தையும் பெற்றார். மனைவிக்கு ஒரே பொறாமையும் வருத்தமும். மீண்டும் முயன்றார். அவருக்கு 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. பத்திரிகைகளுக்கு ஒரே கொண்டாட்டம். செய்திகளையும் படங்களையும் அள்ளித் தெளித்தன. இதைப் பார்த்த பல (Transgenders) அலிகள் இப்பொழுது துள்ளிக் குதித்த வண்ணமாக இருக்கின்றனர். பிரிட்டனில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடித்து கணவன்- மனைவி என்று அறிவிக்க சட்டம் வழி செய்துவிட்டதால் அவர்களுக்குக் கொண்டாட்டம். இனி மக்களுக்குத் தான் திண்டாட்டம்.
xxx
Pregnant Man Hayden Cross
பி பி சி தமிழோசை ஜோக்!
25 ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் பி.பி.சி ஸ்டூடியோவில் (BBC World Service in London) தமிழோசையில் செய்தி வாசிக்க உட்கார்ந்தேன். ஸ்டூடியோ மிஷின்களை இயக்க கண்ணாடி அறையின் மறு புறம் வேறு ஒரு உருவம் உட்கார்ந்தது .
. ஒலிபரப்புக்கு ரெட் லைட் RED LIGHT– சிவப்பு விளக்கு — வரும் வரை நான், சங்கர் அண்ணா, ஆனந்தி சூர்யப்பிரகாசம் ஆகிய மூவரும் அரட்டை அடிப்பது வழக்கம். ஸ்டூடியோவின் அடுத்த பக்கம் உடகார்ந்த ஊழியர் ஆணா பெண்ணா என்று எங்களுக்குள் விவாதம். உடை மூலமோ, நடை மூலமோ, குரல் மூலமோ, பெயர் மூலமோ கண்டு பிடிக்க மூவரும் முயன்றோம்; பலனில்லை. எங்களுக்கு ஒரே ஏமாற்றம். வெட்கத்தை விட்டு, உலக இங்கித த்தை மறந்து அவரிடம் நீ ஆணா பெண்ணா என்று கேட்க மூவருக்கும் துணிச்சல் இல்லை. ஒலிபரப்பு முடிந்தவுடன் அவர் அறைக்குள் சென்று ஒரு நோட்டம் விட்டு ஒலிபரப்பு நாடாச் சுருளை (Recorded Tape) வாங்கிக்கொண்டு, எங்கள் அறைக்குத் திரும்பினோம். பிறகும் நீண்ட நேரத்துக்கு அந்த ஆண்-பெண் உருவத்தைப் பற்றி அடுத் த அறை நேபாளி மொழி ஒலிபரப்பாளர்களுடன் விவாதித்தோம். ஒரே சிரிப்பு. சில அடல்ட்ஸ் ஒன்லி Adults Only ஜோக்குகள் வேறு! அவைகளை இங்கே எழுத முடியாது!!!
===== subham======