Written by London Swaminathan
Date: 27 May 2017
Time uploaded in London: 21-26
Post No. 3947
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
(This is already posted in English a few days ago)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)
பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் உரை. இதற்கு எதிர் மாறாராக எழுதப்படும் உரை தவறானவை. நூறு ஆண்டுக்கு முந்தைய புத்தகங்களில் எல்லாம் இந்த உரையே இருக்கும் புத்தரின் தம்ம பத உரையும் இதை ஆதரிக்கும்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)
பொருள்
உலகத்தில் அழிவும் ஆக்கமும் இல்லாமல் இல்லை. இது ஒருவருக்கு வருவதற்கு பழ வினையே காரணம். ஆகையால் எது வந்தபோதிலும் நடுவு நிலைமை தவறாது இருப்பதே பெரியார்களுக்கு அணிகலன் ஆகும்
கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 115)
ஒருவன் நடுவுநிலைமை தவறி தவறானவற்றைச் செய்யப் போனால், தான் கெட்டுப் போனதற்கு அறிகுறி அதுதான் என்பதை அவன் உணர வேண்டும். அதாவது அவன் கெட்டழிவது உறுதி
விநாச காலே விபரீத புத்தி என்று சம்ஸ்கிருதத்தில் பழமொழி உண்டு.
quosdeus vult perdere prius dementat – Napoleon
Whom God wishes to destroy He first deprives sanity
நெப்போலியனும் சொல்கிறார்: கடவுள் யாரை விழுத்தாட்ட நினைக்கிறானோ அவனுக்கு முதலில் புத்தியைத் தடுமாற வைப்பார்.
தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:
கெட்டதும் நல்லதும் நம்மால் வருவதுதான்; தானே தீங்கு
செய்து கொள்கிறான்; தானே தீமையை அகற்றவும் செய்கிறான். தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான். இது எல்லாம் வேறு ஒருவர் செய்வதல்ல (தம்மபதம் 165)
தனக்குத் தானே எஜமானன் என்றும் சொல்லுவார் (160)
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றன் கருத்து இங்கே தொனிக்கிறது:-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
புலால் மறுத்தல்
தன்னூன் பெருக்கத்துத் தான்பிறிது ஊனுண்பான்
எங்கனம் ஆளும் அருள் (குறள் 251)
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (குறள் 260)
பொருள்:-
தன்னுடைய சதையைப் பெருக்க வைப்பதற்காக இரக்கமின்றி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிடுபவன் எப்படி கருணை உடையவனாக இருக்க முடியும்?
ஒரு உயிரையும் கொல்லாமலும், மற்றவர் விற்கும் புலாலை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரினங்களும் இருகரம் குவித்து தொழுது ஏத்தும்.
புத்தர் சொல்கிறார்:
எல்லா மனிதர்களும் தண்டனை என்றால் நடுங்குகின்றனர்; எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்வதற்க்குக் காரணமாக இருக்கக்கூடாது.–தம்மபதம் 129
to be continued………………..