முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள் (Post No.3952)

Written by London Swaminathan

 

Date: 29 May 2017

 

Time uploaded in London-  6-56 am

 

Post No. 3952

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ஜூன் 2017 சிந்தனைச் சிற்பி காலண்டர்

ஹேவிளம்பி வைகாசி-ஆனி பஞ்சாங்கம்

 

அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இங்கே இடம்பெறும்.

 

திருவிழா நாட்கள் : 7 வைகாசி விசாகம், 25 புரி ரத யாத்திரை,26 ரம்ஜான்  30 ஆனித் திருமஞ்சனம்.

நல்ல/முகூர்த்த நாட்கள்: June 1, 4, 14, 16, 19, 26, 28, 30.

அமாவாசை-23; பௌர்ணமி-9; ஏகாதசி-4, 20

ஜூன் 1 வியாழக்கிழமை

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

ஜூன் 2 வெள்ளிக் கிழமை

கல்விக்கழகு கசடற மொழிதல்

ஜூன் 3 சனிக்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

ஜூன் 4 ஞாயிற்றுக் கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

ஜூன் 5 திங்கட் கிழமை

மன்னர்க்கழகு செங்கோல் முறைமை

ஜூன் 6 செவ்வாய்க்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருள் ஈட்டல்

ஜூன் 7 புதன் கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்

 

Picture by Lalgudi Veda

 

ஜூன் 8 வியாழக்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

ஜூன் 9 வெள்ளிக் கிழமை

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

ஜூன் 10 சனிக்கிழமை

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

 

ஜூன் 11 ஞாயிற்றுக் கிழமை

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலனாயின் கீழிருப்பவனே

 

ஜூன் 12 திங்கட் கிழமை

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

 

ஜூன் 13 செவ்வாய்க்கிழமை

யானைக்கில்லை தானமும் தருமமும்

பூனைக்கில்லை தவமும் தயையும்

ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்

 

ஜூன் 14  புதன் கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்

 

Picture by Lalgudi Veda

 

ஜூன் 15 வியாழக்கிழமை

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே

 

ஜூன் 16 வெள்ளிக் கிழமை

அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

 

ஜூன் 17 சனிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

ஜூன் 18 ஞாயிற்றுக் கிழமை

குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

 

ஜூன் 19 திங்கட் கிழமை

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

இரந்தோர்க்கீவதும் உடையோர் கடனே

 

ஜூன் 20 செவ்வாய்க்கிழமை

தறுகண் யானை தான் பெரிதாயினும்

சிறுகண் மூங்கிற் கோற்கஞ்சும்மே

 

ஜூன் 21 புதன் கிழமை

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிலும்

கடும்புலி வாழும் காடும் நன்றே

 

ஜூன் 22 வியாழக்கிழமை

பெருமையும் சிறுமையும் தாந்தர வருமே

 

ஜூன் 23 வெள்ளிக் கிழமை

காலையும் மாலையும் நான்மறை ஓதா

அந்தணர் என்போர் அனைவரும் பதரே

 

ஜூன் 24 சனிக்கிழமை

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயிற் பொறுப்பது கடனே

 

ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை

துணையோடல்லது நெடுவழி போகேல்

 

ஜூன் 26 திங்கட் கிழமை

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய்போலும்மே மெய்போலும்மே

 

ஜூன் 27 செவ்வாய்க்கிழமை

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய்போலும்மே பொய்போலும்மே

ஜூன் 28 புதன் கிழமை

வழியே ஏகுக, வழியே மீளுக (குறுக்கு வழியில் போகாதே)

 

ஜூன் 29 வியாழக்கிழமை

பழியா வருவது மொழியாதொழிவது (பழிதரும் சொல்லைச் சொல்லாதே)

 

ஜூன் 30 வெள்ளிக் கிழமை

தன் மனையாளைத் தனி மனை இருத்திப்

பிறர் மனைக்கேகும் பேதையும் பதரே

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: