Written by London Swaminathan
Date: 12 June 2017
Time uploaded in London- 20-12
Post No. 3995
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
நம்மில் பலருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் நமது பேச்சுதான். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ (நுணல்= தவளை) என்பது போல எதையாவது பேஸ்புக் ( Facebook) -கிலோ, ஈ மெயி (E mail) லிலோ, கட்டுரையிலோ எழுதி வைப்போம்; அல்லது வீட்டில் மனைவியிடம் ஏதாவது திட்டி வைப்போம்; அதுவுமில்லாவிடில் அலுவலகத்தில் வேண்டாத உரையாடலில் ஈடுபட்டு அதிகாரியைப் பற்றி ஏதாவது சொல்லி இருப்போம். அதை அதிகாரியிடம் போய்ச் சொல்லிக் கொடுத்து பதவி உயர்வு பெறவும் சலுகைகளைப் பெறவும் ஒரு கும்பல் இருக்கும்.
இப்படி எல்லாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கத்தான் வள்ளுவன் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று சொல்லி வைத்தான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? நம்மால், சாப்பாட்டு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; பேச்சு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படிக் கட்டுபடுத்த முடியாதவர்களுக்கு ஒரு நல்ல வழியையும் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். பேசாமல் மவுனமாக இருக்கப் பழகிக்கொள் என்று
மௌனமாக இருந்துவிட்டால் அங்கு சண்டை , சச்சரவுகள், தகராறுகள் கலகங்கள் வெடிக்காது.
உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம்
பற்று செபத் தோர்க்கில்லை பாவங்கள் — முற்றும்
மவுனத்தோர்க் கில்லை வருகலகம் துஞ்சாப்
பவனத்தோர்க் கில்லை பயம்
–நீதி வெண்பா செய்யுள்
தமக்கேற்ற தொழிலைச் செய்வோருக்கு பணப் பற்றாக்குறை வராது;
அன்போடு வழிபடுவோருக்கு கர்ம வினை என்பது ஒட்டாது;
சிறிதும் பேசாமல் மவுனத்தைக் கடைப்பிடிப்போருக்கு தகராறு, கலகம் என்பதே கிடையாது;
துஞ்சுதல் (உறங்குதல்) இல்லாத தேவர்களுக்கு பயம் என்பதே இல்லை. (கண்ணை மூடினால்தானே பயம்!)
மவுனம் பற்றிய இதே கருத்து சாணக்கிய நீதியிலும் வேறு பல நூல்களிலும் உளது. இதோ சில பொன் மொழிகள்:-
மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)
xxxx
மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45
பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.
xxx
மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9
மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.
xxx
வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.
பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.
My old articles on Silence:
மௌனம் சம்மதத்துக்கு சமம் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/மௌனம்-சம்மதத்துக…
Article No.1734; Date:- 20th March, 2015. Written by London swaminathan. Uploaded at London time 9-04 am. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்.
https://tamilandvedas.com/tag/மௌனம்/
மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள் … மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா).
–Subham–