ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***

 

 

Leave a comment

3 Comments

  1. உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட கட்டுரை. பாரதத்தின் அடிப்படைப் பண்பாட்டை விளக்கும் கட்டுரை. ஆனால் இன்றைய நிலையில் உண்மையைப் பிரதிபலிப்பதாக இல்லை.
    ஹிந்து- பாரத தர்மத்திற்கும், ( பொதுவாக இந்தியாவில் வழங்கும் தர்மங்களுக்கும்- பௌத்தம், ஜைனம், சீக்கியர் ) வெளி நாட்டு மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றிற்குமிடையே ஒரு பெரிய பிளவு இயற்கையாகவே இருக்கிறது. இது இரண்டு அம்சங்களின் அடிப்படையில் இருக்கிறது.
    1. சத்தியம் ஒன்று- ஞானிகள் அதைப் பலபெயரில் அழைக்கின்றனர் என்பது பாரத தர்மம். அதனால் பல மதங்களையும் ஹிந்துக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
    ஆனால் ‘எங்கள் மதம் ஒன்றுதான் உண்மையானது; மற்றவை தவறானவை. எங்கள் மத ஸ்தாபகர்கள் மட்டுமே கடவுளின் உண்மையான தூதர்கள்’ என்பவை கிறிஸ்தவமும் இஸ்லாமும். பிற மதங்களை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. சில கிறிஸ்தவர்கள் சமரச நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனல் இது ஆத்மார்த்தமான நிலை அல்ல. Just a tactical or strategic move.
    2. ஹிந்துமதம் பிறறை தன் மதத்திற்கு இழுப்பதில்லை. ஹிந்துமதத்தில் மதமாற்றம் இல்லை.
    கிறிஸ்தவமும் இஸ்லாமும் மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. தாங்கள் மட்டுமே உண்மையான மதம் என்று கருதுவதால், பாபத்தில் உழலும் பிறமக்களை தம்வசமாகுவது தெய்வத்தொண்டு- தெய்வக்கட்டளை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
    இதில் கிறிஸ்தவர்கள் சில நாசூக்கான வழிகளைக் கையாளுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ, நேரடியாகவே பவவந்தமான மதமாற்றத்தில் இறங்குகிறார்கள்.
    இதற்கு இஸ்லாத்தில் உள்ள பெயர் ‘ஜிஹாத்’. இவர்களின் புனித நூலான கொரானில் இதைப்பற்றி 100க்கும் மேற்பட்ட இடங்களில் எழுதியிருக்கிறது. ஜிஹாத்தில் ஈடுபடுவதுதான் முஸ்லிம்களின் தலையாய கடமை என்று திட்டவட்டமாக எழுதியிருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் இவர்கள் மத நூலான குரான், ஹாடித் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலில் இஸ்லாம்தான் சரியான , உண்மையான மதம்- அதில் சேருங்கள் என அழைப்பு விடவேண்டும். அதன்படி அவர்கள் வந்துவிட்டால் சரி. இல்லையெனில் அவர்களுக்கு 3 வழிகள் தான்:.:
    1, கட்டாய மதமாற்றம்
    2. ஜிஃஜியா வரிகட்டி, அடிமையாக இருக்கவேண்டும்.
    3. முஸ்லிம்களுடன் சண்டை..

    முஸ்லிம் அல்லாதவருடன் காலத்திற்கும் இணங்கி வாழவேண்டும் என்று குர்ரானோ, பிற நூலோ, இஸ்லாமிய மதப்பெரியவர்களோ சொன்னதில்லை.

    இது வெறும் தீவிரவாதிகள் கருத்தல்ல- இதுதான் இஸ்லாம் மத நூல்களின் அடிப்படைக்கருத்து. [ Based on the Quran, Hadith, the example of Mohammad and the rulings of every school of Islamic Jurisprudence.]

    குர்ரான் அரபு மொழியில் இருக்கிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வந்தவர்களே- அரபியர்கள் அல்ல. இவர்களுக்கு அரபுமொழி தெரியாது, குர்ரான் தெரிந்தாலும் அதன் பொருள் தெரியாது! அதனால் மதபோதகர்கள் சொல்லும் வழி செல்பவர்கள்.
    இஸ்லாம் மரபுப்படி, குர்ரான்-ஹேடித்தில் இருப்பதை விளக்கும் உரிமையோ, விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த முஸ்லிமுக்கும் இல்லை. [ The free inquiry into the precepts and traditions of Islam is called “Ijtihad”. This has been closed for Muslims for centuries. The Quran cannot be interpreted today in any way by others.] நமது கீதைக்குப்போல ஆயிரம் விளக்கங்கள் சொல்லமுடியாது.

    சாதாரணமான முஸ்லிம்கள் நல்லவர்களாகவே இருந்தார்கள். நமக்கே பல முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், மதம் என்று வந்தால் அவர்கள் தங்கள் மதபோதகர்களுக்குக் கட்டுப்படுவார்களே தவிர, தாங்களாகவே யோசிக்கமாட்டார்கள். உலகம் முழுவதும் இஸ்லாம் மயமாகவேண்டும் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இல்லை. சமீப ஆண்டுகளில் இந்த எண்ணம் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் இந்த நிலை பரவி வருகிறது. ஹிந்துக்களுடன் சேர்ந்து இணக்கமாக இருங்கள் என்று அங்கீகாரம் பெற்ற எந்த முஸ்லிம் மத போதகரும் இதுவரை சொன்னதில்லை! சொல்லியிருந்தால் காட்டுங்கள்.

    [ நான் இருக்கும் பலஅடுக்கு குடியிருப்பில் ஒரு முஸ்லிம் குடும்பமும் உண்டு. அவர்கள் வீட்டு பையனும் ( 8-9 வயது) பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். 6 மாதம் முன்பு ஒரு மௌல்வி வாரம் 2-3 முறை அவனுக்கு இஸ்லாம் மத வகுப்புகள் எடுக்கத்தொடங்கினார். இப்பொழுது பிற பிள்ளைகளைக் கண்டால் “காஃபிர்” என்று சொல்லி ஒதுங்கிக்கொள்கிறான். சேர்ந்து விளையாடுவது இல்லை!]

    கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் என்று கிளம்பாவிட்டாலும் மதமாற்றத்தில் அவர்களும் சளைக்கவில்லை. 1999ல் இந்தியாவுக்கு வந்த போப் ஜான் பால் II தீபாவளி தினத்தன்று டில்லியில் சொன்ன செய்தியில் ” இந்த சகாப்தத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பாவை கிறிஸ்துவமாக்கினோம். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அமெரிக்க கண்டத்தை கிறிஸ்துவ மய மாக்கினோம். இந்த மூன்றாவது ஆயிரமாண்டில் ( ie from 2001 ) ஆசியாவைப் பிடிக்கவேண்டும். ஹிந்து-பௌத்தர்-சீக்கியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றவேண்டும் ” என்று சொன்னார். #[This can be checked on the Vatican Website.]
    மத மாற்றம் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் கேள்போல் பகைவர்கள்- அவ்வளவுதான்.

    ஹிந்துமதமும்- பாரதீய தர்மங்களும் சரியானவையே- அவையும் நமக்கு சமமானவையே என்று கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒப்புக்கொள்ளாதவரை, ஹிந்துக்கள் மட்டும் மத சமத்துவம்- நல்லிணக்கம் என்று பேசுவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். ஆயிரம் வருஷங்களாக அடிபட்டும் இன்னமும் ஹிந்துக்களுக்கு புத்தி வரவில்லை என்று பொருள்.

    காந்தீஜி எழுப்பியது ஒருகை ஓசை. பலனில்லை எந்த முஸ்லிமாவது ஈஶ்வர அல்லா தேரே நாம் என்று சொல்லிக் கேட்டிருப்போமா? வந்தே மாதரம் பாடிக் கேட்டிருப்போமா?
    மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களும் ஹிந்து விசுவாசியாகவும், பல புராதன ஹிந்து பழக்கங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதை Sir V.S, Naipaul அங்கு சென்று பார்த்து எழுதியிருக்கிறார்.
    இந்தியாவில் வேற்றுமையையே வளர்க்கிறார்கள். ஹிந்துக்களையே மட்டம் தட்டுகிறார்கள்.

    There is a higher sense in which there is a fundamental unity among all religions- what people like Aldous Huxley, Frithjhof Schuon called the Perennial Philosophy. But this is still an elitist, minuscule minority position, not accepted by the mainstream Christianity and Islam.
    Christianity and Islam are still world-dominating religions. They have not given up or even diluted this basic aim or tenet of their religion.
    I am a student of comparative religion for the last 40 years. If there is any mistatement of truth/facts in what I have written above, please show with authority.

  2. திரு நஞ்சப்பா எழுதியதிற்க்கு மேலும் கூற ஒன்றுமில்லை.

  3. மிக அருமையான கருத்துக்கள்.
    உண்மை; முற்றிலும் உண்மை.
    முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக் ஆண்ட முகலாயர்களாலும் சரி, இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கிறிஸ்தவர்களாலும் சரி, ஆட்சி அதிகாரம் முழுவதும் அவர்கள் கையில் இருந்த போதும் கூட ஹிந்து மதத்தை அழிக்க முடியவில்லை.
    பாரத தேவியின் அங்கங்களில் சிராய்ப்பை ஏற்படுத்தியது உண்மை.
    ஜீவனை எடுக்க முடியவில்லை. மாறாக அவர்கள் இதைக் கண்டு பிரமிக்க வேண்டியதாக இருந்தது.
    கிறிஸ்தவ போப் இங்கு இந்த ஆயிரமாண்டில் அறுவடை செய்ய அறைகூவல் விட்டது உண்மை.
    முல்லாக்களும் மௌல்விகளும் மதமாற்றம் செய்ய தினமும் போராடுவதும் உண்மை.
    ஆனால் தனக்கே உரிய பாணியில் ஹிந்து மதம் அவர்களை ஜீரணித்து விடும்.
    ஒன்று அந்த மதங்கள் இல்லாமல் போய்விடக் கூடும் அல்லது அவர்கள் ஹிந்து மதத்தில் ஐக்கியமாகி விடுவார்கள்.
    விவேகானந்தர் காளி சிலையையும் கோவிலையும் புனருத்தாரணம் செய்ய நினைத்த போது, காளி, “இதை என்னால் செய்து கொள்ள முடியாதா? நீ வேண்டுமா?” என்று அவருககு அருளுரை கூறியதை நீஙக்ளே ஒரு முறை எடுத்துக் காட்டி உள்ளீரிகள்.
    இந்தத் தாழ்வும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சி போலும்.
    மற்ற மதங்கள் நாடுகள் ஆகியவற்றால் செய்ய முடியாத ஒரு தொடர் நல்லிணக்க உறவை ஹிந்து மதம் மட்டுமே – பாரத தேசம் மட்டுமே – செய்ய முடியும் என்பதே கட்டுரையின் சாரம்.
    முஸ்லீம்களில் ஒருவர் கூட ஈஸ்வர் அல்லா தேரே நாம் சொல்லவில்லை; இதில் காந்திஜி தோல்வி அடைந்தார் என்பதை இன்னொரு கட்டுரையில் விளக்க முயலுவேன்.
    பரம்பூஜனீய குருஜிகோல்வல்கர் ஒரு முறை கூறியதாக நினைவு: மூன்றாவது உலகப் போர் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே நிகழும். அது பாரதத்தில் நிகழும்.வெல்வது பாரதமே” என்று கூறியுள்ளார்.
    பாரதத்தில் ஏன் எப்படி நடக்கும் என்பது புரியவில்லை!
    சவர்க்கார் தனது எரிமலையின் கடைசி வரியை நினைவு கூரலாம்.
    தம் தமேமே தம் நஹி… தப் தோ லண்டன் தக் சலேகி; தேக் ஹிந்துஸ்தான் கீ.
    மூச்சோ இரைக்கிறது; ஏன் போராடுகிறாய்?
    சும்மா நினைக்காதே! வீரம் பெரிது. வால் கூர்மையானது. அது லண்டனின் கதவையும் ஒரு நாள் தட்டும்.
    கீதை காட்டும் பாதை : ஸ்வதர்மே நிதனம் ச் ரேய: பரதர்மோ பயாவஹ:
    நன்கு அனுஷ்டிக்கப்படும் பிற தரமத்தைக் காட்டிலும் ஸ்வர்தர்மத்தில் சாவது ச்ரேயஸானது. பர தர்மம் பயத்தைத் தரும்.
    இதுவே கீதை காட்டும் பாதை.
    அரவிந்தர் தன் பிறந்த நாளான ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது பொருள் பொதிந்தது என்று கூறினார்.
    Partiion is unnatural; it has to go; it will go” என்றார்.
    சொன்ன முப்பது ஆண்டுகளுக்குள்ளேயே பாகிஸ்தான் உடைபட்டது. பாகிஸ்தானும் இல்லாமல் போய் விடும்.
    லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ ப்வந்து என்பதில் சகல லோகங்களும் என்பது அடக்கம்.
    சகல லோகங்கள் என்றால் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் எழிலின் வளப்பெரும் காட்சி; ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
    ஆக பல கோடி உலகங்களும் சுகமாக இருக்கட்டும்.
    இது வேத பிரார்த்தனை.
    சில நூறு வருடங்கள் ஆட்டம் போடும் மதங்கள் பற்றிக் க்வலை இல்லை. உலகத் தொழிலாளர்களை ஒன்று பட் அறைகூவிய கம்யூனிஸ்ட் இயக்கம் சொந்த நாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டது – சில ஆண்டுகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாததை- நாம் நேரில் பார்த்து விட்டோம்.
    பல நாகரிகங்களைக் காணோம்; பல நாடுகளைக் காணோம்.
    ஹிந்து மதம் மிளிர்கிறது; ஒளிர்கிறது.
    ஆனால் இப்படிப் பழம் புகழ் பாடிச் சும்மா இருக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.
    ரிஷிகள் காட்டிய வழியில் ஹிந்து தர்மத்தை வளர்க்க ஒவ்வொருவரும் முயல வேண்டும்.
    கட்டுரையின் அடிப்படை நாதம் ஹிந்து மதத்தின் நல்லிணக்க முயற்சி.
    நல்லவன் கெட்டதாக சரித்திரம் இல்லை.
    திரு நஞ்சப்பா அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி.
    அதற்கு ஆதரவு தெரிவித்த மஹாதேவன் அவர்களுக்கும் நன்றி.
    ச.நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: