சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள் (Post No.4049)

Written by S NAGARAJAN

 

Date: 4 July 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.4049

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

தெய்வ தேசம்

 

சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்; பலிக்காமல் போக வைக்க முடியுமா?!

ச.நாகராஜன்

 

‘ராஸ்கல்,ரௌடிகள், கொள்ளைக்காரர்கள் கைக்கு அதிகாரம் போகும்; எல்லா இந்திய தலைவர்களும் மிக மோசமான,போலியான தலைவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கப் பேசுவர்; ஆனால் வஞ்சக நெஞ்சைக் கொண்டிருப்பர். அதிகாரத்திற்காகத் தங்களுக்குள் தாங்களே  சண்டையிடுவர். அரசியல் குழப்பங்களில் இந்தியா காணாமல் போகும். இந்தியாவில் காற்றும் நீரும் கூட வரி விதிக்கப்படும் ஒரு நாள் வந்து சேரும்.’ -வின்ஸ்டன் சர்ச்சில்

 

 

“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water would be taxed in India.”

 

வின்ஸ்டன் சர்ச்சிலின் மிக பிரபலமான இந்த மேற்கோள் ‘ராஸ்கல் மேற்கோள்’ (Rascal Quote)  என்று உலகெங்கும் பரவலாகப் பேசப்படுகிறது.

இதைக் கேட்கும் உண்மையான் தேசபக்தியுடைய இந்தியர்கள் சிரிப்பார்கள்.

எங்கள் தேசம் உயர் தேசம் என்று நமது பரம்பரையைச் சுட்டிக் காட்டி நெஞ்சு நிமிர்ந்து நடப்பர்.

சரி தான்! நல்லவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் நாட்டு நடப்பு?

நாட்டு நடப்பை அறிந்தவர்கள் கீழ்க்கண்ட விதமாகச் சொல்லுகின்றனர்:-

எல்லா பல்கலைத் துணை வேந்தர்களும அயோக்கிய ராஸ்கல்கள். அந்தப் பதவிக்கு ஐந்து கோடி குறைந்த பட்ச தொகையாகக் கொடுத்து அதை ‘வாங்க’ வேண்டுமாம்.

டி.எஸ்.பி. என்றால் அரை சி அதாவது 50 ல.

இன்ஸ்பெக்டர் என்றால் கால் சி.

வாத்தியார் என்றால் கூட ஒரு ல.

அரசு பதவிக்கு குறைந்த பட்ச தகுதி அரசியல் கட்சி ஆபீஸுக்குத் தினசரி போக வேண்டும். அரசு அலுவலகம் “தானாக” இயங்கும் அல்லது தூங்கும். யாருக்குக் கவலை.

நீதியரசர் பதவி பற்றிச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

தனக்குத் தானே வழக்கை விசாரித்து தன்னை நிரபராதி என்று தீர்ப்புச் சொல்லிக் கொண்டு மற்ற நீதியரசர்களுக்குத் தண்டனை விதிக்கும் நீதியரசர் ஒரு நல்ல உதாரணம்.

எஞ்ஜினியரிங், மெடிகல் என எடுத்துக் கொண்டால் 80 ல வேண்டும் – ஒரு சீட்டைப் பெற.

லா பற்றிச் சொல்லாம’லா’  இருக்க முடியும்? வேண்டாமப்பா, கல்’லா’த பேர்களே நல்லவர்கள். இங்கு இல்’லா’த பேர்களே யோக்கியர்கள்!

ஊடகங்கள் பொய்மூட்டையின் இருப்பிடம்; போலிகளின் விவாத மேடை விபரீத மேடை! தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் ஐந்தாம் படையாக மாறிக் கொண்டிருப்பதால் நாடு படும் பாடு பெரும்பாடு.

கோவில்களைக் கொள்ளையடிப்பதோ கைவந்த ஒரு தனிக் கலை!

இவற்றால் பண்பாடு படும் பாடு பற்றி ஒரு ‘பண்’ பாடு என்றால் கவிஞர்களாலும் கூட முடியாது.

அரசியலோ ரௌடிகளின் கூடாரம். கொலை கேஸ்களில் மாட்டிக் கொண்டவர்களின் இருப்பிடம். பல் லட்சம் கோடிகள் ஊழல் வழக்கில் சிக்குவதே அடிப்ப்டைத் தகுதி.

சி என்பது சீச்சீ என்று சொல்லுமளவு மிக அற்பமான தொகை அவர்களுக்கு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் சாதி மத வேறுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் வயிறாரச் சோறிட்டு கல்விக் கண்களைத் திறக்க முயற்சித்ததை நன்கு அறிவோம்.

பின்னால் திராவிடப் பிசாசுகள் ஊழல்,பொய், லஞ்ச் லாவண்யங்களை அவிழ்த்து விட்டு அதில் தமது குடும்பத்தை வளர்த்த கதையையும் அறிவோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, பீஹார், உ.பி. கேரளம், கர்நாடகம், வங்காளம் எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் – அங்கும் இதே கதை தான்! ஊழல் அரசியலே தான்!

இது தான் நாட்டு நடப்பு அறிந்தோர் கூறுவது!

 

சர்ச்சிலின் மேற்கோளை நிச்சயமாக விரைவில் நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று ஆவேசமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போகிறோம்.

நல்லவர்கள் நடுங்குகிறார்கள். யோக்கியமான்வர்கள் திகைக்கிறார்கள். எப்படித் தான் இந்த நாட்டில் வாழ்வது?

ஆறுகள் வறள்கின்றன – மணல் கொள்ளையால் – நல்ல மனங்கள் வறள்வது போல.

மலைகள் பொடியாகின்றன, கற்களைக் கொள்ளை அடிப்பதால் – நல்லவர் உள்ளம் பொடிப்பொடியாகி நொறுங்குவது போல.

இது தவிர,

மைனாரிடி அப்பீஸ்மெண்ட்.

தாழ்ந்தவர் கார்டைக் காட்டி சலுகை பெற முயல்வது.

எதையாவது இலவசமாகப் பெற்று வோட்டைத் தருவது.

இன்ன பிற அலங்கோலங்களை ‘எண்ணி’, ‘எண்ணி’ ( counting and thinking) மாய்ந்து போகிறோம்.

சர்ச்சில் கூறியது நடந்து விடுமா? சற்று யோசிப்போம்.

 

அவரைத் திட்ட வேண்டாம்; நம்மைச் சார்ந்தவர்கள் திருந்த வழி உண்டா என்று யோசிப்போம்.

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது அறநூல்களின் முடிபு. என்றாலும் அறத்தை வெல்ல வைக்க போதுமான நல்லவர்கள் தேவை அல்லவா?

ந்ல்லவர்கள் பகிரங்கமாக ஒன்று கூட முடியாத நிலை கூட ஏற்பட்டு விடும் போல இருக்கிறது.

ஒரு இரகசிய இயக்கமாக மாறி இவர்கள் நம் தேசத்தைக் காப்பாற்ற முன் வர வேண்டும்.

சர்ச்சிலின் மேற்கோள் பலிக்காமல் இருக்க நமது பாரம்பரிய அடிப்படையிலான ஒரு ‘வேத உத்வேகம்’ தேவை

ஜனநாயகத்தைக் காப்போம். நீதித்துறையை சரியானபடி பாதுகாப்போம்.

இந்திய அரசியல் சாஸனம் நமது இன்றைய தர்ம சாஸனம் என்பதை மனதில் இருத்திச் செயல்படுவோம்.

தர்மநெறி முறைகளைக் காப்போம்.

நல்ல ஊடகங்களை மட்டும் வளர்ப்போம்.

திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புத் தருவோம்.

வேலை செய்வது கடமை என உணர்வோம்.

சத்யமேவ ஜயதே என்ற பாரத அடிப்படை உண்மையை வெற்றி பெறச் செய்வோம். நமது ராணுவத்தைப் போற்றுவோம். வீரர்களுக்கு உறுதுணையாகத் தோள் கொடுப்போம்.

தர்மமே அரசியலுக்கு அடிப்படை என்பதை உலகிற்குக் காட்டுவோம்.

 

பாதை பிறழாமல் இருக்க அருள் புரி பாரத தேவியே!

போகுமிடம் வெகு தூரம்;

போக வேண்டும் நெடு நேரம்!

துணை இருப்பாய் காளி!

நீயே எமக்கு தர்ம வேலி!!

***                                                             ல என்றால் லட்சம் சி என்றால் க்ரோர். எல்லோரும் இந்நாட்டு ரியல் எஸ்டேட் மன்னர்கள் என்பதால் இதற்கு அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: