ஒலியின் மஹிமை: ஆச்சரியமூட்டும் புதிய தகவல்! (Post No.4064)

Written by S NAGARAJAN

 

Date: 9 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4064

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

மந்திர மஹிமை

ஒலியின் மஹிமை: விஞ்ஞானம் தரும் ஆச்சரியமூட்டும் புதிய தகவல்!

 

ச.நாகராஜன்

 

விஞ்ஞானம் முன்னேற முன்னேற எந்த மதம் பயந்தாலும் இந்து மதம் பயப்படாது.

 

அது கூறும் ஒவ்வொரு கொள்கையையும் விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலம் உறுதிப் படுத்திக் கொண்டே வருகிறது.

இதைக் கடந்த இருநூறுக்கும் மேலான ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.

 

‘ஹிந்து’ பத்திரிகையின் 27-6-2017 இதழ் வெளியிட்டுள்ள ஒரு புதிய செய்தி ஒலியின் மஹிமையை புதிய கோணத்தில் நம்மைப் பார்க்க வைக்கிறது.

‘Body Beats: Using Sound to spot Cancer’ – Passive Elastography is a technique that can non-invasively study tumours deep inside the body

 

 

என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி நம்மைக் கவர்கிறது.

ஒவ்வொரு உடலிலிருந்தும் இயற்கையாக ஒலி வெளி வருகிறதாம். அதை உரிய முறையில் பயன்படுத்தி கான்ஸர் இருக்கிற்தா இல்லையா என்பதை அறிய முடியுமாம்.

செய்தியின் சில பகுதிகளை மட்டும் இங்கு பார்க்கலாம். முழுச்செய்தியையும் பத்திரிகையில் படிக்கலாம்.

 

PRESS TRUST OF INDIA

LONDON

 

Natural sound waves made by the human body can be used to diagnose cancers and other diseases non-invasively at the earliest stages, scientists say.

 

Elastography, sometimes referred as ‘seismology of the human body’, is an emerging technology used to enhance medical ultrasound imaging.

 

The technology is used to measure the elasticity of biological tissue to diagnose cancer or liver disease more accurately, researchers said.

 

செய்தியின் கடைசி பகுதி தரும் தகவல் இது:-

 

The idea , as in seismology, is to take advantage of shear waves naturally present in the human body due to muscles activities to construct a shear elasticity map of soft tissues,” Mr Catheline said. ”It is thus a passive elastography approach since no shear wave sources are used,” he said.

 

Passive elastography is compatible with slow imaging devices.

 

   ஒலி அலைக்குச் சக்தி உண்டு. அதை முறைப்படுத்திச் சொல்வதால் உடல் இயக்கம் மேன்மையுறும்; ஆன்மீகத்தில் உயரிய நிலையைப் பெறலாம்.அவை பிரபஞ்சத்தின் வெவ்வேறு இயக்கங்களை மந்திர சக்தியின் ஒலி அமைப்புக்கேற்ப இயங்கச் செய்யும் என்று நமது முன்னோர்கள் கூறி வந்திருக்கின்றனர்.

 

வாயிலிருந்து வெளியாகும் ஒலியை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை நுணுக்கமாக பாணிணி ஆராய்ந்திருக்கிறார்.

 

ஒலியின் மன்னன் என்று அவரைச் சொல்லலாம்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி, ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அழகுறச் சொல்கிறது.

 

 

யதா வ்யாக்ர ஹரேத் புத்ரம்

தஷ்ட் ராபிர்ன  பிதாயேத்

பிதா பதன் பேதாப்யாம்

தத் வர்ணம் ப்ரயோஜயேத்

 

“ஒரு பெண்புலியானது எப்படி தன் குட்டியைத் தன் வாயில் கவ்வி அதன் பற்களால் கடியுறாதபடி எடுத்துச் செல்கிறதோ அதே போல ஒருவன் ஒரு வார்த்தையை உச்சரிக்க வேண்டும்

இப்படி உச்சரிப்பைக் கூடச் சரியாகச் சொல்லும் உத்தியையும் அது தரும் பலனையும் உலகின் வேறு எந்த மொழியும் அறிவியல் ரீதியில் சொன்னதில்லை.

 

சம்ஸ்கிருத ஒலி மஹிமையோ தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது

 

22-3-2003 தேதியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் (கல்கத்தாவிலிருந்து வெளி வரும் பத்திரிகை இது) எந்த ஒலியும் 360 டிகிரி சுழற்றப்பட்டால் அது நோயாளியின் நோயைக் குணமாக்க உதவும் என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 

செய்தியின் ஒரு பகுதி இது:

 

Any sound, if rotated 360 degrees, can nurse chronically ill patients back to health,”pasycho-physicist” Sajal Bandopadhyay claims.

 

In a major breakthrough , Bandopadhyay had last year succeeded in rotating sound.  A team of psychologists had been researching the therapeutic potential of this discovery. Under the leadership of Dr Arnab Banerjee, they had tried out the rotating sound on patients at the Sevak Hospital.

 

 ஒலி சுழற்சி சிகிச்சையானது 4000 நோயாளிகளில் 99 சதவிகிதம் நோயாளிகளிடம் வெற்றியைத் தந்திருக்கிறது என்று இந்தச் செய்தி கூறுகிறது.

 

நாளுக்கு நாள் ஒலி பற்றிய புதிய அறிவியல் செய்தியைப் பெற்று வருகிறோம்.

 

ஒலிக்கு மஹிமை உண்டு என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

 

மந்திர சக்தி உடல் மற்றும் ஆன்மாவை உயர்த்த வல்லது என்ற நம்பிக்கையை இந்தச் செய்திகள் வலியுறுத்துகின்றன.

ஒலியின் மஹிமையை உலகிற்கு உணர்த்திய ஒரே மதம் ஹிந்து மதம் என்பதில் பெருமை அடைகிறோம்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: