ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் (Post No.4075)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 19-22
Post No. 4075

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அமெரிக்காவில் உள்ளது கொலம்பியா பல்கலைக் கழகம். இதன் தலைவராக நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) இருந்தார். அவர் பெரிய அறிஞர்; நோபல் பரிசு வென்றவர். கல்வியாளர்.

 

அவரும் , அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராண்டர் மாத்யூவும் (Brander Mathews) பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இலக்கியக் கொள்ளை (Plagiarism) என்றால் என்ன என்று விவாதித்தனர். பிராண்டர், தான் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி விளக்கினார்.

 

யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை முதல் தடவை சொன்னால் அதுதான் ஒரிஜினல் (originality);

அதுதான் ஆதி; சுயமான சிந்தனை.

அதையே ஒருவர் இரண்டாவது தடவை சொன்னால் அது இலக்கியக் கொள்ளை- Plagiarism

(பேஸ்புக்கில் பலரும் செய்வது)

மூன்றாவது முறை அதையே ஒருவர் சொன்னால் அவருக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலே இல்லை (Lack of Originality) என்று பொருள்.

அதையே நாலாவது முறை யாராவது சொன்னால், அது ஏதோ ஒரே மூலத்திலிருந்து (drawing from a common source) தோன்றியது என்று பொருள்.

 

இப்படி அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில் பட்லர் குறுக்கிட்டார், “அதையே யாரவது ஐந்தாவது முறை சொன்னால் அதன் பெயர் ஆராய்ச்சி! (Research)

 

எவ்வளவு உண்மை!

xxx

 

சொல் கஞ்சன்!

 

அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ் (President Coolidge)பயங்கரமான கஞ்சன்; அதாவது சொல் கஞ்சன்; பெரிய சந்திப்புகளிலும், பொது விருந்துகளிலும் பேசா மடந்தையாக இருப்பார். அப்படியே பேசினாலும் இரண்டு, மூன்று சொற்களே வாயிலிருந்து வரும்; அதுவும் பெரிய அறிவாளி பேசுவது போல இருக்காது!

 

அமெரிக்காவின் புகழ்மிகு பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson). அவருடைய வீடு ஆமெர்ஸ்ட்(Amherst) எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு கண்காட்சியாக மாற்றி அவருடைய ஒரிஜினல் படைப்புகள், நினைவுப் பொருட்களை வைத்துள்ளனர். அதற்கு கூலிட்ஜ் விஜயம் செய்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே வருகிறார் என்பதால், பொது மக்கள் தொட முடியத பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்க்க அவரை அனுமதித்தனர்.

 

யாருக்கும் காட்டாத புலவருடைய நினைவுப் பொருட்களை எல்லாம் காட்டினர் கண்காட்சி அதிகாரிகள்.

 

அவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். வாயே திறக்காமல்!

 

இவருடைய ஆர்வத்தைக் கண்ட அதிகாரிகள் ஒரு அரிய பொக்கிஷப் பெட்டியைத் திறந்து இவைதான் அவர் கைப்பட எழுதிய கவிதைகள் என்று காட்டினர். அவருடைய கண்கள் அகல விரிந்தன. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

கடைசியில் இரண்டே சொற்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னது என்ன தெரியுமா?

“பேனாவால் எழுதினாரா, ஹூம்; நான் டிக்டேட் செய்வேன்” (சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதுவது டிக்டேசன்)

 

சொல் தச்சர்கள் தமிழிலும் சஸ்கிருதத்திலும் உண்டு; நல்ல வேளை, சொல் கஞ்சர்கள் கிடையாது!

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: