மறைந்திருக்கும் ஆற்றல்-2 (Post No.4079)

Written by S NAGARAJAN

 

Date: 14 July 2017

 

Time uploaded in London:- 6-01 am

 

 

Post No.4079

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

யோகிகளின் ஆற்றல்

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 2

ச.நாகராஜன்

 

 

அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ் (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பளீர் பளீரென ஹிந்துக்களின் அபாரமான ஆன்மீக மற்றும் அமானுஷ்ய விஷயங்களின் மீதான விவரங்களைத் தருகிறது, புகழ்ந்து தள்ளுகிறது!

 

      அவர் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாக இப்படிக் கூறுகிறார்:

 

The science of Hypnotism and the Art of Telepathy, The Master of Destiny, date back more than three thousand years. The Aryan Hindoos devoted centuries to unraveling the secrets of the control of the human mind, and to divulge those secrets meant more than the  forfeiture of life itself. They realized that human intelligence is frail and finite, but life infinite; that to be forewarned is to be fore-armed. They knew that every moment of one’s life has to be accounted for; that they must lean on no one, yet not stand aloof; that rust destroys more than use. Their philosophy was and is one of deeds, not words; they understood that impossible is the adjective of fools; fear is the proof of a degenerate mind; speech is silvern, silence is golden; that one must be master of his own faculties and slave to none of his desires; that as a man thinketh in his heart, so will he become, and that every action is the result of preconceived idea. They taught that a great character founded on the living rock of principle, is a fact, not a solitary phenomenon, to be at once perceived, limited, and described. It is a dispensation of Providence designed to have not merely an immediate but a continuous, progressive, and never-ending agency. Such a character survives the man who possesses it, and leaves its imprint not only upon the sands of time,  but upon eternity.

 

These Hindoo adepts were a cultivated sect when Western people were almost barbaric. Music and all the refinements of taste, architecture and the like were in exquisite development when England was ruled by Boadicea, and had the Druids as the heads of their religious faith. These adepts of a Hindoo religious sect not only knew the secrets for the government and control of the mind of man, but they also held sway over the animal kingdom.

 

 

 

தெள்ளத் தெளிவாக ஒரு ஆங்கிலேயர் இப்படி அழகுறச் சொல்வதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. சாதாரணமாக ஹிந்து தத்துவங்களை இழித்தும் பழித்தும், திரித்தும், திருத்தியும் கூறுவது மேலை நாட்டோரின் இயற்கைக் குணம்.

 

மாறாக மேலை நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்த போது மிகவும் உயரிய நாகரிகம் படைத்தவர்களாக ஹிந்துக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவு படக் கூறுகிறார் அலெக்ஸாண்டர் கானான்.

 

தனது புத்தகத்தில் ஏராளமான சுவையான சம்பவங்களை கானான் கூறுகிறார்.

 

ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

ஒரு பெண்மணியின் கணவன் மரணப்படுக்கையில் இருந்தான். அந்தப் பெண்மணிக்கு குழந்தைகளே கிடையாது. அவளது கணவன் இறந்தவுடன் அவனது சொத்து முழுவதும் கணவனுடைய தம்பிக்குச் சேர கணவன் உயில் எழுதி வைத்து விட்டான்.

இதை அறிந்த அந்தப் பெண்மணிக்கு ஒரு தீய எண்ணம் வந்தது.

 

அவள் ஒரு மந்திரவாதியை அணுகினாள். ஆபிசார பிரயோகத்தினால் அவனை எப்படியாவது கொல்ல வேண்டுமென்றாள். அவனும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தால் அவனைக் கொல்ல சம்மதித்தான்.

இந்தச் செய்தி கணவனின் தம்பிக்கு எட்டியது. பயந்து போன அவன் ஒரு நல்ல மகானை அணுகினான். அவர் அவனுக்கு பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு ஒரு மந்திரத்தை உபதேசித்து, இரவு முழுவதும் அதை இடைவிடாமல் சொல்லுமாறு கூறினார்.

 

ஒரு கணம் கூட விடாமல் சொல்ல வேண்டும்; இரவில் தூங்கி விடக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

மகானின் அருளுரையை ஏற்ற அவன் மந்திரத்தை உச்சரிக்கலானான்.

அன்று நள்ளிரவு ஒரு பெரிய ராட்ஸச உருவம் ஒரு கறுப்புக் குதிரையின் மீது வந்து அவன் முன் தோன்றியது.

 

 

அந்த உருவத்தின் கையில் ஒரு பெரிய கத்தி இருந்தது.

அதை அந்த உருவம் கத்தியை ஓங்கியவாறே வந்து அவனை வெட்ட வந்தது.

மந்திர உச்சாடனத்தை அவன் நிறுத்தவில்லை. அருகில் நெருங்கிய உருவத்தால் ஓங்கிய கையை கீழே இறக்கி வெட்ட முடியவில்லை.

 

 

மூன்று மணி நேரம் நீடித்த இந்த முயற்சி தோல்வி அடைந்தது; அந்த உருவமும் அங்கிருந்து அகன்றது.

மறு நாள் தீய மந்திரத்தை ஏவிய ,மந்திரவாதி இறந்து கிடப்பதை அனைவரும் கண்டனர்.

நல்ல மந்திரம் நல்லவரைக் காப்பாற்றும். தீய மந்திரம் ஏவியவனையே சூழ்ந்து அவனுக்கு கெடுதி விளைவிக்கும்.

 

   இப்படி பல சுவையான நடந்த சம்பவங்களை சரி பார்த்து இந்தப் புத்தகத்தில் கானான் தந்துள்ளார்.

***

  இன்னும் இந்தப் புத்தகம் தரும் சில கருத்துக்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: