மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா? (Post No.4085)

Written by S NAGARAJAN

 

Date: 16 July 2017

 

Time uploaded in London:- 5-54 am

 

 

Post No.4085

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி.ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உங்க உடலின் எடை திடீரென்று கூடுகிறதா?

ச.நாகராஜன்

ள்﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ம்பிதவtsRSதிடீரென்று உடல் எடை கூடுகிறதே என்று கவலைப்படுபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தீர்களா என்பதைச் சரி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

 

ஆம், சில மருந்துகள் உடலின் எடை கூடுவதற்குக் காரணமாக அமைகின்றன. பக்க விளைவாக உடல் எடையைக் கூட்டும் மருந்துகளைப் பற்றிய கவனம் தேவை.

On Planet Pluto

எடை குறைவாக இருந்தால், பரவாயில்லை சரி என்று விட்டு விடலாம்.ஆனால் ஏற்கனவே எடை கூடுதலாக இருந்தால் உடலின் எடை இன்னும் கூடுவது அபாயத்தில் அல்லவா முடியும்!

 

சிலருக்கு மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை எடை கூடி விடுகிறது. டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை அவர்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

 

பல ஸ்ட்ராய்ட் மருந்துகள் (Steroid Drugs) உங்களுக்குப் பசி உணர்வைத் தூண்டி விடுகிறது. அதே போல மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தரும் மருந்துகள் கூட – மனச்சோர்வு, schizophrenia போன்ற வியாதிகளுக்குத் தரப்படும் மருந்துகள் கூட – உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் இந்த மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத்  தோன்றும். இதன் விளைவாக உடலின் எடை கூடும். சில மருந்துகளோ உடலில் கலோரியை மிக மெதுவாகச் செலவழிக்க வைத்து உடல் கூற்றையே மாற்றும். இன்னும் சில மருந்துகளோ சர்க்கரைச் சத்தையும் சில ஊட்டச் சத்துகளையும் அவற்றை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தி அதன் விளைவாக உடலின்

எடையை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு சுவாசம் விடுவதில் சில மருந்துகள் சிரமத்தை ஏற்படுத்தினால் இயல்பாகவே நீங்கள் உடல்பயிற்சியை செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன் விளைவாகவும் கூட உடல் எடை கூடக் கூடும்.

 

இன்னும் சில மருந்துகளோ நீரை உடலில் அப்படியே தங்கச் செய்யும். அதன் விளைவாக உடல் எடை கூடலாம். உடலில் கொழுப்பு சக்தி அதிகம் இல்லை என்றாலும்  உடலின் எடையை இந்த நீர் அதிகரித்தே காட்டும்! இன்னும் சில மருந்துகளைப் பற்றி ஆய்வாளர்களே அவை ஏன் எடையைக் கூட்டச் செய்கின்றன என்பதை அறியாது  தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள்னர்.

உடலின் எடையைக் கூட்டும் மருந்துகளின் பட்டியல் இதோ:-

டயபடீஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் இன்சுலின், Thiazolidinediones, Sulfonylureas போன்றவை

ஆன்ட்டி சைகாடிக் (Antipsychotic)மருந்துகள் எனப்படும் Haloperidal, Clozapine, Lithium போன்றவை

Anttidepressant drugs எனப்படும் மனச்சோர்வை அகற்றும் மருந்துகளான amitriptyline, paroxetine மற்றும் sertraline போன்றவை

 

வலிப்பு நோய்க்கான Valproate, carbamazepine போன்றவை

ஸ்ட்ராய்ட் ஹார்மோன் மருந்துகளான prednisone அல்லது குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (Beta –blockers) போன்ற ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

 

 

ஒரு முக்கியமான விஷயம்; இங்கு குறிப்பிடப்படுள்ள இவை அனைத்துமே உடல் எடையைக் கூட்டும் மருந்துகள் என்பதில்லை. உதாரணமாக metformin என்ற டயாபடீஸுக்கான மருந்து உடல் எடையைக் கூட்டுவதற்கு பதிலாக எடையைக் குறைக்கவும் கூடும். மைக்ரேன் மற்றும் இழுப்புக்கான மருந்தான Topiramteம் கூட ஒருவரின் உடல் எடை இழப்பதற்கான காரணமாகக் கூடும். ஆகவே முடிவெடுப்பதில் கவனம் தேவை.

ஒருவரின் எடை கூடுகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு

 

ஒருவர் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட மருந்து, அவரது வயது போன்றவற்றைச் சொல்லலாம்

முதலில் டாக்டரிடம் சென்று உடல் எடை கூடுவதைச் சொன்னவுடன் அவர் பல்வேறு காரணங்களைப் பகுத்து ஆராய்வார்.

 

இப்போது உட்கொள்ளும் மருந்து தான் காரணமெனில அவர் வேறு ஒரு மாற்று மருந்தை உட்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

 

அதே மருந்து தான் உங்கள் வியாதியைக் குணப்படுத்த தேவை எனில் அதன் உட்கொள்ளும் அளவை அவர் குறைக்கக் கூடும்.

 

சில வகையான கான்ஸர்கள் மற்றும்

உளவியல் ரீதியிலான வியாதிகள் போன்றவற்றில் மருந்துகளை மாற்ற முடியாத சூழ்நிலையில் டாக்டர் இப்படிப்பட்ட முடிவை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்தை உங்கள் டாக்டர் பரிந்துரைக்கும் போது அவரிடமே இதன் பக்க விளைவாக உடல் எடை கூடுதல் போன்றவை ஏற்படுமா என்று முதலிலேயே கேட்டுத் தெளிவு பெறலாம்.

நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றால் உங்கள் எடையை எப்பொழுதும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியம்.

அவசரப்பட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுப்பதோடு தொடர்ந்து உங்கள் எடை மீது கவனம் வைப்பது சாலச் சிறந்தது.

 

****

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: