கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)
Written by London Swaminathan
Date: 21 July 2017
Time uploaded in London- 13-45
Post No. 4101
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.
ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-
கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.
இதோ அப்பர் வாக்கு:-
கங்கை யாடிலென் காவிடி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
–ஐந்தாம் திருமுறை
நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.
கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.
கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு
ஸ்ரீ கம்ப பருமற்கு
யாண்டு இருபதாவது
பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க
தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று
படாரிக்கு நவகண்டங் குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்
வைத்தானுக்கு
திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது
எமூர்ப் பறைகொட்டக்
கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்
பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்
குடுத்தார்கள்
இது அன்றென்றார்
கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்
செய்தான் செய்த பாவத்துப் படுவார்
அன்றென்றார் அன்றாள் கோவுக்கு
காற்ப்பொன் றண்டப்படுவார்
கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?
இந்த நாடு ஒன்றே!
இந்தப் பண்பாடு ஒன்றே!!
என்பதை எடுத்துரைக்கத்தான் காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.
சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது ஏன்?
கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?
காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.
திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?
“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்
சாருந்திலை வனத் தன் மாமலயத்து
ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)
(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)
கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.
வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.
தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.
இது நமது தலையாய கடமை!
–SUBHAM–
TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 21, 2017ஆங்கில ஏகாதிபத்தியத்தினர் நம்மைப்பற்றி விட்ட கட்டுக்கதைகளில் இந்தியா ஒரு நாடாக இல்லை என்பதும் ஒன்று. இதற்கு சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசீயத்தலைவர்கள் பதிலடி மொடுத்தனர். வரலாற்று ஆசிரியர் Radha Kumud Mukherjee நமது நாட்டின் புராதன ஒருமையை “The Fundamental Unity of India” என்ற புத்தகத்தில் விளக்கினார். (1914) ஆனால் அடிமையின் மோகம் இன்று நம்மை மீண்டும் ஆட்கொண்டு விட்டது!
‘நாடு என்பது அரசியல் அடிப்படையில் இருக்கவேண்டும்’ என்பது மேலை நாட்டினரின் கொள்கை. ஆனால் மேலை நாடுகளே எத்தனை ஆண்டுகளாக இவ்வாறு இருக்கின்றன? ஸ்பார்க் நோட்ஸில் இவ்வாறு எழுதுகிறார்கள்”
“The nation-state developed fairly recently. Prior to the 1500s, in Europe, the nation-state as we know it did not exist. Back then, most people did not consider themselves part of a nation; they rarely left their village and knew little of the larger world. If anything, people were more likely to identify themselves with their region or local lord. At the same time, the rulers of states frequently had little control over their countries. Instead, local feudal lords had a great deal of power, and kings often had to depend on the goodwill of their subordinates to rule. Laws and practices varied a great deal from one part of the country to another.”
“The Thirty Years’ War, fought throughout central Europe from 1618–1648 between Protestants and Catholics, laid the legal foundation for the nation-state. The war involved many nations of Europe, including many small German states, the Austrian Empire, Sweden, France, and Spain. Despite a brutal war, the Catholics were unable to overturn Protestantism. The treaty that ended the war, called the Peace of Westphalia, decreed that the sovereign ruler of a state had power over all elements of both the nation and the state, including religion. Thus, the modern idea of a sovereign state was born.”
எனவே, அரசியல் அடிப்படையில் அமைந்த நாடு [ Nationalism- Nation State] என்ற அமைப்பு ஐரோப்பியாவிலேயே 4 நூற்றாண்டுகளுக்குள் தோன்றிய மாறுதல்தான். நம்மவர்களுக்கு ஐரோப்பிய சரித்திரம் தெரியாததால் எதிர்த்துக்கேட்கத் தோன்றவில்லை!
இந்தியாவில் ஹிந்து ஆட்சி நிலவியவரை நாட்டின் ஒருமையில் சந்தேகம் இருக்கவில்லை. அப்பொழுதும்கூட ஒரு சிறந்த அரசன் பல மன்னர்களையும் நாடுகளையும் அரசியல் ரீதியாகத் தன்வசப்படுத்தி, திக்விஜயம்செய்து, “சக்ரவர்த்தியாக” முடிசூட்டிக்கொண்டான்! “தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்” என்ற புறநானூற்று அடிகளாலும் இக்கருத்து தெரிய வருகிறது. அப்படி ஒரு அரசன் பெரிய சக்ரவர்த்தியான போதிலும், தன் கீழ்வந்த நாடுகளை அவர்கள் போக்கிலேயே விட்டான் ! அசோகர் பெரிய சக்ரவர்த்தியான போதிலும் புத்தமதத்தை நாட்டின் மதமாக அறிவிக்க இயலவில்லை! மற்ற சிறு மன்னர்களும், கிராம சபைகளும் எதிர்த்தன! தேசிய ஒருமை சிறிய பகுதிகளைச் சீரழிக்க வில்லை! [ இதற்கு மாறான நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் தான் நடந்தன. கரிகால்வளவன் பிற தமிழ்ப்பகுதிகளைக் கைப்பற்றியதும் அவற்றை எப்படி அழித்தான் என்பதை பட்டினப்பாலையில் படிக்கிறோம். குறு நில மன்னன் பாரியின் பெருமையைச் சகிக்காத மூவேந்தர்களும் அவனை எப்படிக் கொன்றார்கள் என்பதைப் படிக்கிறோம்.] ஆக இந்தியாவின் ஒற்றுமைக்கு மதம் மட்டும் அடிப்படையாக இருக்கவில்லை.
ஆனால் இதையும் மீறிய இன்னொருவிஷயம் இந்தியர்களின் -ஹிந்துக்களின் கண்டுபிடிப்பாக இருக்கிறது, சமுதாயத்தின் ஒருமை என்பது அரசியல் அடிப்படையில் மட்டுமே அமையவேண்டிய தேவையில்லை; அதற்கு மாற்று வழிகளும் இருக்கின்றன. இது ஐரோப்பாவுக்கே நாம் காட்டிய மாற்றுமுறையாகும். Diana Eck என்ற Harvard Professor ‘India:A Sacred Geography” என்ற புத்தகத்தில் இதை விளக்கியிருக்கிறார்:
” For many of the diverse people who might loosely be called Hindu, the unity of India is not merely that of a nation-state, but that of geographic belonging, enacted in multiple ways. Hindu pilgrims measure the span of India with their feet.”
.” a particular idea of India that is shaped not by the modern notion of a nation-state, but by the extensive and intricate interrelation of geography and mythology.” .(p.45)
” The fact that the people of ancient India, even if they were a Sanskritic cultural elite, gave a single name to the whole of this diverse subcontinent is itself noteworthy. The name is Bharata… This is an indigenous name. …India, like Japan, China and Greece, links its modern identity with an ancient and continuous civilization.” (p46)
“For centuries the understanding of India in the West has followed primarily a Western agenda. ” (p.46)
“What are some of the ways in which India has seen itself and enacted its regional and pan-regional identities ? Political analysts do not touch this question. Postcolonial studies do not reach very deeply into the premodern subsoil of India to inquire whether there have been alternative ways of imagining the complex collectivity of India in a distinctly Indian idiom.”
(p.47)
“Bharata is not merely a convenient designation for a conglomerate of cultures, such as Europe ha been for so much of its history, or such as Indonesia has become in modern times.”. ( p.47)
“…it is arresting to consider “a sense of unity” construed in and through the diverse imagined landscape,….a sense of connectedness that seems to have flourished for many centuries without the need for overarching political expression or embodiment.” (p.47)
“Hinduism is a highly locative tradition in which place matters.”
” The Himalayas, the Ganga, and the other mountains and rivers of India, many of which are linked in their sacredness to the Himalayas and the Ganga, compose a sense of India that has considerable antiquity. It is not “religious” if one construes religion only as doctrinal. Yet from the time of Rig Veda to the time of Nehru, the imaginative casting of a sense of place inhabited not only by its peoples but by gods and goddesses, heroes and heroines, has answered with increasing clarity the question, “What is India?” [p67]
{Let me clarify that the author is not a Hindutva fan-rather its critic, like our leftists! Yet the truth could not be denied.}
இந்தியா பற்றி நாம் அனைவரும் பெருமைகொள்ளவேண்டும். இது குறுகிய நாடல்ல- பரந்த நாகரிகம்.