கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! (Post No.4117)

Written by S NAGARAJAN

 

Date: 1 August 2017

 

Time uploaded in London:- 4-51am

 

 

Post No.4117

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

இரண்டு கோர ராட்ஸசர்கள் : எதிர் விளைவு பற்றிய ஒரு ஒப்பீடு

 

 

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! விசித்திரமான எதிரெதிர் மனப்போக்கு!!

 

by ச.நாகராஜன்

 

நம் கண் முன்னே வரலாறு கண்ட இரு மாபெரும் பாவிகள் கஜினியும், ஹிட்லரும்!

ஹிட்லரை சமீப காலத்திலேயே அனைவரும் பார்த்து விக்கித்து விட்டனர்.

இப்படி ஒருவன் தோன்ற முடியுமா என்ற திகைப்பும், மலைப்பும் அனைவருக்கும் உண்டு.

அரவிந்தர் அவனுக்கு ஆன்மாவே கிடையாது என்று கூறி இருக்கிறார்.

 

அப்படி ஒரு கோரமான படைப்பு; படைப்பு விசித்திரம்!

இதே அளவு கோரமான கொடூரன் கஜினி முகமது.

அவனுக்கும் ஆன்மா இருந்திருக்காது; கோரமான படைப்பு.

ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்கள் ரஷியர்கள்.

அவர்களால் இந்த கோர ராட்ஸசனின் கொடுமைகளைத் தாளவே முடியவில்லை.

ஆகவே ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என்று சபதம் எடுத்தனர் அவர்கள்.

BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH என்பதே அவர்கள் முழக்கமாகவும் சபதமாகவும் அமைந்தது.

 

ரஷியாவிலிருந்து வெளிவரும் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பிராவ்தாவைப் பற்றி அனைவரும் அறிவர். அதில் 22-8-1941 மாஸ்கோ ரேடியோவில் ஒலிபரப்பான ஒலிப்ரப்பு பற்றிய தலையங்கம் ஒன்று வெளியானது.

 

 

ஆங்கிலத்தில் அதை அப்படியே கீழே பார்க்கலாம்:

“BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH ‘ is the title of an editorial in the ‘Pravda’, the organ of the Communist party quoted by the Moscow radio on 22-8-1941. The article which gives details of atrocities perpetrated by the Nazis of Soviet citizen says, “no words can express the intensity of feeling and the wrath which prevails in the hearts of Soviet men and women on hearing the news of the atrocities carried out by the German hordes on their bloody way.

 

 

Intense hatred which knows no pity and which knows no mercy is the only rule of fighting against biped animals which constitute the German Fascist armies.

 

(இந்த வரியை அப்படியே கஜினி முகமதுவிற்கும் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களும் கூடச் சொல்லலாம்)

 

 

Wherever its armies pass they leave behing hem a morbid trail fo muder and robbery. The HITLER DOGS  have covered with shame not only German army but also all  GERMAN PEOPLE. To redeem its shame, to resore to itself the place in the family of peoples the German nation must clear itself of the HITLER VERMIN. Every hour brings news of crimes carried out by the Fascists on Soviet soil.”

 

The article goes on to give details of almost unspeakable horrors carried out by the Nazis in search for military information citing such instances as men, women and children soaked in petrol in a village square and burned alive.

A nine year old boy shot in front of his mother who then joined the guerillas. The journal declares, “corpses, corpses and again corpses, all totured and killed people, the same scenes in every village, in every town where the Germans have passed.”

 

“What army ever committed such crimes?” asks the Pravda. “Does the Fascist gang of robbers deserve the name of army for these monstrosities, for all these crimes are not isolated cases, they are a mass phenomenon, a system taught by the German Fascist army command.”

After giving an extract from the note-book of a dead German soldier referring to mass exefutions of population it quotes an excerpt from the secret instruction of a German army commander. This instruction states, “It is necessary to emphasise once more the fundamental problems arising from conditions of warfare on the eastern front. Here more than on other front it is necessary to develop in the German soldier a feeling of mercilessness. A feeling of COMPASSION towards anybody irrespective of age or sex  CANNOT BE TOLERATED.

Every initiative of German soldiers likely to spread fear of the German army must be encouraged. It is necessary to inculcate in every German soldier a feeling of personal interest in this war.

 

The Soviet people will never forget nor will it forget these crimes. The blood calls for CRUEL AND MERCILESS VENGEANCE.

 

This Vengeance will come; it’s hour is near. The Soviet people have arisen in the Fatherland war and they will not lay down their arms until the enemy is crushed and annihilated.

“BLOOD FOR BLOOD , DEATH FOR DEATH.”

 

இந்த கட்டுரையில் உள்ள வார்த்தைகளில் ஹிட்லர் அல்லது நாஜி என்பதற்கு பதிலாக கஜினி முகமது அல்லது அவன் படை என்றும் சோவியத் மக்கள் என்பதற்கு பதிலாக ஹிந்து மக்கள் என்றும் போட்டுப் படித்துப் பார்த்தால அதிசயமாக அப்படியே கட்டுரை பொருத்தமாக இருக்கிறது அல்லவா?

ரஷியர்கள் தாங்கள் நினைத்தபடி ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என பழி வாங்கினார்கள்.

 

 

சரித்திரம் காட்டும் சித்திரவதை முகாம்களையும் ஸ்டாலினின் வன் கொடுமைகளையும் படித்தவர்கள் இதை அறிவர்.

(உண்மையில் ஹிட்லரை விட அதிகமான பேரைக் கொன்று முதலிடத்தைப் பிடிப்பது ஸ்டாலின் என்பது அதிசயமான செய்தியாக இருக்கலாம்; ஆனால் அது உண்மை!)

இப்போது ஹிந்து தேசத்திற்கு வருவோம். ரஷியர்கள் போல ரத்தத்திற்கு ரத்தம் ;சாவுக்கு சாவு என்ற அணுகுமுறையில் ஹிந்துக்கள் ஒரு போதும் இருந்ததில்லை.

 

 

கஜினி முகமது தொட்டு ஔரங்கசீப் வரை, கிழக்கிந்த கம்பெனி வணிகன் முதல் இறுதியான மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஹிந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் எவ்வளவு?

ஒரே வரியில் பிரிட்டிஷாரைப் பார்த்து விவேகானந்தர் சொல்லி விட்டார்: “நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஹிந்து மஹா சமுத்திரம் அடியில் உள்ள சேற்றை முழுதுமாக வாரி உங்கள் மீது இறைத்தாலும் நீங்கள் எங்களுக்குச் செய்த தீங்கிற்குத் தினையளவும் பதில் செய்ததாக ஆகாது.

 

 

உண்மை; இது கஜினிக்கும் பொருந்தும் தானே!

 

    ஆனால் வழிவழியாக வந்த உயர்ந்த சிந்தனா பாரம்பரியம் கொண்ட ஹிந்துக்கள், முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக அழிக்க எண்ணம் கூடக் கொள்ளவில்லை. மதமாற்றவும் நினைக்கவில்லை!!      

    பிரிட்டிஷாரை ஒட்டு மொத்தமாக ரத்தத்திற்கு ரத்தம் சாவுக்கு சாவு என்று முழங்கி அழிக்க முற்படவில்லை.

 

இஸ்லாமியரை இன்று வரை வாழ வைத்து மதிப்புடன் நடத்தி வருகிறோம். அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் தோழமை உறவு தொடர்கிறது.

 

பிரிட்டிஷாரை மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கடைசி வரை நடத்தினோம் – சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட.

இது தான் ஹிந்து பாரம்பரியத்திற்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் உள்ள வேற்றுமை.

 

இஸ்லாம் தன்னை ஒப்புக்கொள்ளாதவனை ஒப்புக் கொள்ளாது. காபிர் காபிர் தான்!

கிறிஸ்தவமும் ஏசுவிடம் “ஓப்புக் கொடுக்காதவரை ஒப்புக் கொள்ளாது.

 

ஆனால் ஹிந்து மதமோ அப்படியில்லை; ஒரு ஹிந்துவானவன், “அனைவரும் வாழ வேண்டும்; கொள்கையில், வாழ்க்கை முறையில், மதத்தில், இனத்தில் வேறுபட்டிருந்தாலும் கூட என்று எப்போதும் எண்ணி வந்திருக்கிறான்; எண்ணி வருகிறான்; இனியும் எண்ணுவான்.

இதுவே ஒரே வித்தியாசம்.

 

இதே அணுகுமுறை இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வருமானால் அப்போது “உலகத்தில் கலி அழிந்தது; கிருத யுகம் எழுந்தது மாதோ என்று உரக்கக் கூறலாம்.

****

Leave a comment

4 Comments

  1. இந்தியாவில் பிறந்த ஹிந்து, பௌத்த, ஜைன மதங்களைத்தவிர பிற மதங்கள் எல்லாம் வன்முறையினாலேயே வளர்ந்தன. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்களுக்குள்ளேயே சண்டையில் ஈடுபட்டனர்; இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர்.
    சமயமோ. அரசியல் கொள்கையோ-ஏதோ ஒரு அடிப்படையில் கொடுமை நடந்தே வந்திருக்கிறது. ஸ்டாலின், மாசேதுங், பால் பாட் ( Pol Pot ) போன்ற கம்யூனிஸ்டுகள் செய்த கொடுமைகளும் கொஞ்சநஞ்ச மல்ல.
    ஆனால் இந்தியர்கள் போன்று இரண்டாயிரம் ஆண்டுகளாக கொடுமை அனுபவித்தவர்கள் உலகில் வேறு யாரும் இருக்கமுடியாது! யூதர்கள் நாடின்றி உலகம் பூராவும் பரவியிருந்தாலும், சில துறைகளில் சிறந்தே இருந்திருக்கின்றார்கள். மார்க்ஸ், ஐன்ஸ்டீன், ஃப்ராய்டு, உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிவிட்டார்கள். நோபல் பரிசு பெற்ற யூதர்களின் பட்டியல் மலைக்கவைக்கும்! ஹிந்துக்களோ, தங்கள் சொந்த நாட்டிலேயே பிறரால் நசுக்கப்பட்டார்கள்!
    சோவியத் ரஷ்யாவின் மறைவுக்குப் பிறகு “பனிப்போர்” மறைந்துவிட்டாலும் நாடுகளிடையே நேச உணர்வு மலரவில்லை. இதைப்பற்றி 1996ல் ‘The Clash of Civilizations” என்ற தனது நூலில் எழுதிய Samuel P.Huntington, இனி சில நாகரீகங்களிடையே சச்சரவு நிகழும் என்றார். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, இந்தியா என்ற ஆறு நாடுகள் ப்ரதானமாக இருந்தாலும், இவற்றுக்குப்பின்னால் இயக்குவது பழைய நாகரீகங்களே என்றார்: சமயம் சாராத நவீன மேலை நாகரீகம் , சைனா ( கன்ஃப்யூஷியஸ் ), இஸ்லாம் ஆகியவற்றிடையே தீவிர சச்சரவும் போட்டியும் இருக்கும் என்றார். இதுவே நாம் இன்று கண்கூடாகப் பார்த்துவருகிறோம்!
    இந்தியாவின் நிலைதான் வருத்தமளிக்கிறது. ஹன்டிங்டனும் அவருக்குமுன் ஆர்னால்ட டாயின்பீயும் இந்தியர்களை ஹிந்து நாகரிகத்துடன் இணைத்தே பேசுகின்றனர். ஆனால் இந்தியர்களில்- குறிப்பாக ஹிந்துக்களில்- எத்தனைபேர் தாங்கள் ஒரு பெரிய நாகரீகத்தின் வாரிசுகள்-பிரதிநிதிகள் என்ற உணர்வுடன் செயல்படுகின்றனர்? சமய உணர்வற்ற மேலைமுறை செக்யூலரிசம், கிறிஸ்தவம். இஸ்லாம் ஆகிய சர்வதேச சக்திகளுடன் , சீனாவின் ஆணவ எழுச்சியையும் [ அரசியல் ராணுவ, பொருளாதார பலத்துடன் கூடியது] ஒரே சமயத்தில் தங்கள் நாட்டிலேயே ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது! போருக்குத் தயாராகாவிட்டாலும் தகுந்த தற்காப்பு முயற்சியாவது வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு வரலாறு நமக்கு இத்தகுதியைத் தரவில்லை என்றே தோன்றுகிறது! ஒவ்வொரு நிலையிலும் பின்வாங்கியே வந்திருக்கிறோம்.
    திக்கற்றோருக்குத் தெய்வமே துணை எனலாம்; துப்பற்றோருக்கும் தெய்வமே துணையாகுமா?

  2. திரு நஞ்சப்பாவின் மேலான நல்ல கருத்துக்கள் வழக்கம் போல ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழுந்தவை.
    நன்றி நஞ்சப்பா அவர்களே நன்றி! உளமார்ந்த நன்றி!
    இந்தக் கட்டுரைகளை நான் எழுதும் ஒரே நோக்கம் அடி வாங்கி அடி வாங்கி முதுகைக் குனிந்து காண்பித்து இன்னும் குனியக் குனிய அடிபட்டு -வந்திருக்கும் -வரும் ஹிந்து இனம் இனியாவது எழுச்சி பெறுமா? எழுச்சி பெற வேண்டும் என்பதற்காகவே!
    பழைய கால வரலாற்றை எழுத விடாத பாவிகளாக போலி செகுலரிஸ்ட்கள் இருக்கிறார்கள். செகுலரிஸம் என்றால் இவர்களுக்கு ஹிந்துக்களைத் திட்ட வேண்டும்; முஸ்லீம்களுடன் முக்காடு அணிந்து விருந்து சாப்பிட வேண்டும். பெயரைச் சொல்லத் தேவையில்லை. அனைவரும் யார் என்று உணர்வர்.
    பல காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், திராவிடப் பிசாசுகளும் போலி செகுலரிஸத்தின் பிள்ளைகள்; பாப ராட்ஸசர்கள்!
    அஹிம்சா பரமோ தர்ம என்பதற்கு அர்த்தம் அடிவாங்கிச் செத்து மடியுங்கள் ஹிந்துக்களே என்று அர்த்தமல்ல; அஹிம்ஸா சத்யம் அக்ரோத: என்று தெய்வ குணங்களை இப்படி ஆரம்பித்த்ப் பட்டியலிடும் கீதையில் கண்ணன், க்லைப்யம் மாஸ்மகம: பேடித்தனத்தை உதறு; எதிரில் இருக்கும் அயோக்கியர்களை வெட்டி வீழ்த்து என்கிறான்.
    குறைந்த பட்சம் அடிபடாமலாவது இருப்போம்!

    ஹிந்து மத எழுச்சியே இன்றைய தேவை; காலத்தின் கட்டாயம்; ஹிந்து மத எழுச்சிக்கும் பிறரால் அடிபடாமல் இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பழைய கால சரித்திரத்தை நன்கு ஊன்றிப் படிக்க வேண்டும். எதிர்கால புதுச் சரித்திரத்தை எழுத முன் வர வேண்டும்.
    கலியுகம் ஒழியும்; கிருத யுகம் மலரும்.
    தர்மத்தின் வாழ்கஹனைச் சூது கவ்வும்
    மறுபடி தர்மமே வெல்லும்.
    கட்டுண்ட காலம் கட்டுண்டது. தர்மத்தின் காலம் தவழ்கின்றது.
    ஹிந்து தர்மம் செழிக்க – லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து –
    நன்றி ச.நாகராஜன்

  3. vasanthakumar selvarajan,
    thank you very much for your comment. i have gone through the article along with numerous comments therein.
    It all started with a small town (population about 4 lakhs and area is very less); hitler is good; jews are bad. americans are as bad as english people.
    History is not re-written but correctly written. This is what the link is trying to communicate.
    It is a vain attempt to praise Ravana and put Rama as the Rakshasa and a bad man.
    Hitler is a Rakshasa. This does not mean that we have to praise Churchill.
    All these people for over two thousand years made Hindus suffer. We are not allowed to read our past history in perspective. My article just compares russian approach of vengeance and our approach of ” Live and Let Live”
    I have to research on this research article to give my reply. But what is the point? Hitler is always Hitler!!! That is it!!!. S.Nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: