எதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும் (Post No. 4124)

Written by London Swaminathan
Date: 3 August 2017
Time uploaded in London- 17-44
Post No. 4124
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

கிரேக்க நாட்டின்   தலைநகரான ஏதென்ஸ் நகரத்துக்கு ஜூலை மாதக் கடைசியில் (2017) போய் வந்தேன்— 9000 ஆண்டுப் பழமையுடையது என்று பெருமை பேசும் நகரில் நின்றது மகிழ்ச்சி தந்தது. இந்த நகரம் பற்றிய விஷயங்கள் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எங்களுக்கு வரலாற்றுப் பெருமைகளை விளக்குவதற்கு ஒரு பெண்மணி முன்வந்தார். அவருக்கு 100 யூரோ கொடுத்தோம். அதற்கு முன் ஒவ்வொருவரும் ( 11 பேர்) 30 யூரோ கொடுத்து டிக்கெட்டும் வாங்கினோம்.

எங்களுக்கு கிரேக்க நாட்டின் சரித்திரத்தை விளக்கிய பெண்மணி நாங்கள் இந்தியர்களா என்று கேட்டுவிட்டு சிவபெருமான் முடியில் தாங்கிய கங்காதேவியையும் அதீனா தேவியையும் ஒப்பிட்டார். அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லுகிறேன்.

அதீனா தேவியின் பெயரில் உருவான நகரம் ஏதென்ஸ். இது போல நகரங்களைப் பெண்களாகக் கருதும் வழக்கமும், நகரங்களுக்கு பெண் தெய்வங்களின் பெயரை இடும் வழக்கமும் இந்து வழக்கம். மும்பயி, கல்கத்தா, மதுரை, கன்யாகுமரி முதலிய நூற்றுக் கணக்கான நகரங்கள் பெண் தெய்வங்களின் பெயர்களை உடையன. மதுரையின்   பெண் தெய்வம் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. மணிமேகலை, தெய்வம் அயோத்யா தேவி முதலியன பற்றி மணிமேகலை, ரகுவம்சம் ஆகியன பேசுகிறது. நகரங்களைப் பெண்களாகக் கருதுவதை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணலாம்.

 

அதீனா தேவி ஒரு கன்னிப் பெண்; இதனால் அவளை அதீனா பார்தினோஸ் (Athena Parthenos) என்பர்; நாம் கன்யாகுமரி என்று சொல்லுவதற்கு இணையானது அதீனா பார்த்தினோஸ். கன்னிகள் மூலம் பிறந்த பலர் இந்து மதத்தில் உண்டு. பஞ்ச பாண்டவர்கள், சீதா தேவி, ஆண்டாள், திரவுபதி போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

 

அதீனா தேவி கோவில், ஏதென்ஸில் ஆக்ரோபொலிஸ்(Acropolis) என்னுமிடத்தில் உயர்ந்த குன்றில் உள்ளது. அந்தச் சிலை இருந்த கோவிலை பார்த்தினான் (Parthenon) என்பர். அது கிரேக்க நாட்டின் முக்கியச் சின்னம். அதிலிருந்த அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து அ ழித்தனர். சமீப காலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் எப்படி பாமியன் புத்தர் சிலைகளையும், சிரியாவிலுள்ள பல்மைரா கட்டிடங்களையும் அழித்தனரோ அப்படி வெள்ளையர்களும் முஸ்லீம்களும் திட்டமிட்டு அழித்தனர். பார்த்தினான் கோவிலை சர்ச்சாகவும் மசூதியாவும் மாற்றினர். இந்தக் கதைகள் எல்லாம் விக்கிபீடியாவில் விரிவாக உள்ளது நானும் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் தருவேன்.

பார்த்தினான் கோவிலைக் கட்டிய சிற்பி பிடியாஸ் (Phidias). அதீனாவின் சிலை மிக உயரமான சிலை. தங்கத்தினாலும் தந்தத்தினாலும் ஆனது. அதை குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். பார்த்தினான் கோவிலின் சலவைக் கற்களை வெள்ளையர்கள் கொள்ளை அடித்தனர். பெரிய கொள்ளைக்காரன் வெள்ளைகாரன்தான்- அதாவது பிரிட்டிஷ்காரனான எல்ஜின்.  எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் பல துண்டுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன. மற்ற துண்டுகள் நியூயார்க் ரோம், ஏதென்ஸ் முதலிய மியூசியங்களில் இருக்கின்றன.

 

எங்களுக்கு விளக்க வந்த கைடு, எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் அவை இருப்பதை ஆட்சேபித்தார். அதை பிடியாஸ் மார்பிள் அல்லது பார்த்தினான் மார்பிள் என்றல்லவா சொல்லவேண்டும். கொள்ளை அடித்த எல்ஜின் பெயரில் எப்படி அழைக்கலாம்?என்றார்.

 

பார்த்தினான் கோவில், கி.மு 440 வாக்கில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரும் ஒரு கோவில் இருந்ததாக ஐதீகம்.

 

— subham—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: